கோவேந்தர் கூட்டம்

From Tamil Wiki
Revision as of 23:41, 17 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "கோவேந்தர் கூட்டம் (கோவேந்தர் குலம்) கொங்குவேளாளக் கவுண்டர்களில் துணைப்பிரிவுகளான அறுபது கூட்டங்களில் ஒன்று. கோவேந்தர் என்பது அரசரைக் குறிக்கிறது. அரசன் அளித்த தனியுரிமையில...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கோவேந்தர் கூட்டம் (கோவேந்தர் குலம்) கொங்குவேளாளக் கவுண்டர்களில் துணைப்பிரிவுகளான அறுபது கூட்டங்களில் ஒன்று. கோவேந்தர் என்பது அரசரைக் குறிக்கிறது. அரசன் அளித்த தனியுரிமையில் இருந்து இப்பெயர் வந்திருக்கலாம்

வரலாறு

பொங்கலூர்  இவர்களின் முதல் காணியாகும். "கோவேந்தர் பனங்காடை நற்குல வேளிர் வாழ்வுற்று இருக்கு பொங்கலூர்" என்று அழகு மலைக்  குறவஞ்சி கூறுகிறது. குடி மல்லம் மற்றொரு ஊராகும் . குடிமங்கை கோவேந்தர் குட்டிவேள் என்று அதே நூல் கூறுகிறது . நாளும் வழிபடுவோர் , செல்வந்தர் , மூவேந்தருக்கும் பல்லக்கு கொடுத்த பெருமை பெற்றவர்கள் , என்று அந்நூல் கூறுகிறது

ஊர்கள்

குடிமங்கலம் , இலக்காபுரம், நம்னேரி ஆகிய காணிகளை கொண்டவர்கள் இவர்கள் .

உசாத்துணை

https://kongubloods.blogspot.com/2018/02/60.html