கோபல்ல கிராமம்

From Tamil Wiki
Revision as of 10:55, 22 March 2023 by Jeyamohan (talk | contribs) (Created page with "கோபல்ல கிராமம் (1976) கி.ராஜநாராயணன் எழுதிய நாவல். கதைசொல்லலில் வட்டராவழக்கை பயன்படுத்திய முன்னோடி நாவல் என்றும், நாட்டார் மரபுகளை நவீன இலக்கியத்திற்குள் கொண்டுவந்த முன்னோடி நா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கோபல்ல கிராமம் (1976) கி.ராஜநாராயணன் எழுதிய நாவல். கதைசொல்லலில் வட்டராவழக்கை பயன்படுத்திய முன்னோடி நாவல் என்றும், நாட்டார் மரபுகளை நவீன இலக்கியத்திற்குள் கொண்டுவந்த முன்னோடி நாவல் என்றும் கடுதப்படுகிறது

எழுத்து வெளியீடு

கி.ராஜநாராயணன் இந்நாவலை 1976ல் எழுதினார். அகரம் பதிப்பகம் வெளியிட்டது

கதைச்சுருக்கம்

கோபல்லகிராமம் சீரான கதையோட்டம் கொண்டது அல்ல. தெலுங்கு பேசும் கம்மாநாயுடு (நாயக்கர்) மக்கள் இஸ்லாமிய படையெடுப்பின்போது ஆந்திரத்தில் இருந்து தப்பியோடி தமிழகத்திற்கு வந்து மதுரைக்கு தெற்கே கோயில்பட்டியில் தரிசு நிலத்தில் குடியேறுவதில் இந்நாவல் தொடங்குகிறது. அம்மக்கள் நிலத்தை திருத்தி விளைநிலமாக்குவது, அங்கே ஊர் உருவாவது, ஊரின் பழக்கவழக்கங்கள், ஊரிலுள்ள மக்களின் வாழ்க்கைக்கதைகள் வழியாக நீண்டுசெல்லும் நாவல் பிரிட்டிஷ் படையெடுப்பு காலத்தில் முடிகிறது. போரின்போது ஊர்களை அழிப்பது, பெண்களை வன்கலவி செய்வது ஆகியவற்றை பிரிட்டிஷார் செய்வதில்லை என அறியும் தொட்டவ்வா என்னும் மூத்த பெண்மணி பிரிட்டிஷாருடன் இணைந்திருக்கலாம் என முடிவெடுத்து சொல்லுமிடத்தில் நாவல் நிறைவடைகிறது.

இலக்கிய இடம்

கதைசொல்லும் முறையில் பேச்சுவழக்கை பயன்படுத்திய முன்னோடி நாவல் நீல பத்மநாபன் எழுதிய தலைமுறைகள். கதைசொல்லும் மொழியிலேயே வட்டாரவழக்கை பயன்படுத்தி எழுதப்பட்ட முதல் படைப்பு இது. நாட்டார் கதைகள், தொன்மங்கள் ஆகியவற்றை இணைத்து எழுதப்பட்ட நவீன நாவல். ஒரேசமயம் ஒரு குலக்கதை, இனவரலாறு, நவீன நாவல் ஆகிய தன்மைகள் கொண்டதாக அமைந்துள்ளது.

உசாத்துணை

கி. ராஜநாராயணனின் `கோபல்ல கிராமம்': தொன்மங்கள் நிறைந்த வரலாற்றுக் கதை