under review

கொஸ்தான்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected error in line feed character)
 
Line 2: Line 2:
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
கொஸ்தான் இலங்கை மன்னார், மாந்தையைச் சேர்ந்தவர். இவரைப் பற்றிய தகவல்கள் குறைவு. [[ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை]] இவ்வாறு குறிப்பிடுகிறார். “பூதத்தம்பி நாடகம் செய்த மாதோட்டத்துச் சுவான் கொஸ்தான் மகன் தாவீது என்பவன் இச்சம்பவத்திற்கு சமீபகாலத்தவனாதலால் அவன் உண்மையை ஆராய்ந்தே பாடியிருக்கவேண்டும் என்பதும், பாடியவன் தானும் கிறிஸ்தவன் என்பதனால் கிறிஸ்தவனாகிய அந்திராசி மேல் அபவாதம் சுமத்த மனம் பொருந்தான் என்பதும், உண்மை ஒருபக்கமும் பழியொருபக்கமுமாக அரிய சம்பவம் எக்காலத்தும் எவ்விடத்திலும் நிகழ்வது இயல்பே என்பதும் துணியப்படும்’  

ஆனால் இதை பிற்கால ஆய்வாளர் சிலர் மறுக்கின்றனர். சத்தியவேத பாதுகாவலன் இதழ் கொஸ்தான் கிறிஸ்தவரல்ல என்றும், அவர் சைவரைப்போல இறைவணக்கம் செய்கிறார் என்றும் சுட்டிக்காட்டியது.

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==

Latest revision as of 20:12, 12 July 2023

கொஸ்தான் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர். பூதத்தம்பி விலாசம் என்னும் நாடக நூலின் ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

கொஸ்தான் இலங்கை மன்னார், மாந்தையைச் சேர்ந்தவர். இவரைப் பற்றிய தகவல்கள் குறைவு. ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை இவ்வாறு குறிப்பிடுகிறார். “பூதத்தம்பி நாடகம் செய்த மாதோட்டத்துச் சுவான் கொஸ்தான் மகன் தாவீது என்பவன் இச்சம்பவத்திற்கு சமீபகாலத்தவனாதலால் அவன் உண்மையை ஆராய்ந்தே பாடியிருக்கவேண்டும் என்பதும், பாடியவன் தானும் கிறிஸ்தவன் என்பதனால் கிறிஸ்தவனாகிய அந்திராசி மேல் அபவாதம் சுமத்த மனம் பொருந்தான் என்பதும், உண்மை ஒருபக்கமும் பழியொருபக்கமுமாக அரிய சம்பவம் எக்காலத்தும் எவ்விடத்திலும் நிகழ்வது இயல்பே என்பதும் துணியப்படும்’

ஆனால் இதை பிற்கால ஆய்வாளர் சிலர் மறுக்கின்றனர். சத்தியவேத பாதுகாவலன் இதழ் கொஸ்தான் கிறிஸ்தவரல்ல என்றும், அவர் சைவரைப்போல இறைவணக்கம் செய்கிறார் என்றும் சுட்டிக்காட்டியது.

இலக்கிய வாழ்க்கை

கொஸ்தான் 'பூதத்தம்பி விலாசம்' நாடகநூலை எழுதினார். 1888-ல் மயிலிட்டி நல்லையாபிள்ளை இந்நூலை வெளியிட்டார். யாழ்ப்பாண நாட்டின் நாயகன் பூதத்தம்பி பற்றிய நாடகங்கள் பலவும் பூதத்தம்பி விலாசம் நூலைத் தழுவி அரங்கேற்றப்பட்டவை.

நூல் பட்டியல்

உசாத்துணை

இணைப்புகள்

✅Finalised Page