கொத்தமங்கலம் சீனு

From Tamil Wiki
Revision as of 09:20, 7 September 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added; Image Added.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கொத்தமங்கலம் சீனு

கொத்தமங்கலம் சீனு (கொத்தமங்கலம் சீனிவாசன்:1910 - 2001) இசை, நாடகம், திரைப்படம் என மூன்று துறைகளிலும் செயல்பட்டவர். திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துப் புகழ் பெற்றவர். பின் மீண்டும் நாடகம் மற்றும் இசைத்துறைக்குத் திரும்பி இறுதிவரை செயல்பட்டார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

பிறப்பு, கல்வி

கொத்தமங்கலம் சீனு என்று அழைக்கப்பட்ட கொத்தமங்கலம் சீனிவாசன், மதுரையை அடுத்துள்ள வற்றாயிருப்பில், சுப்ரமண்ய ஐயர்-நாராயணி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை முறையாக இசை கற்றவர். மகனையும் சுற்றுப்புறங்களில் நடக்கும் இசை, நாடகக் கச்சேரிகளுக்கு அழைத்துச் சென்றார். அதன் மூலம் சீனிவாசனுக்கு இசையின் மீது ஆர்வம் வந்தது. வற்றாயிருப்பு சாமா ஐயங்காரிடம் முறையாக இசை பயின்று தேர்ச்சி பெற்றார்.

சீனிவாசன் வற்றாயிருப்பில் படித்து வந்தபோது தந்தை காலமானார். கல்வி தடைப்பட்டது. பின்னர் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து மூன்றாவது ஃபாரம் படித்தார். ஆனால், குடும்பச் சூழலால் அதனைத் தொடர இயலவில்லை.