under review

கொங்கு சதாசிவம்

From Tamil Wiki
Revision as of 11:13, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Sathasivam1.jpg

கொங்கு சதாசிவம் (தென்கொங்கு சதாசிவம்) தொல்லியல், கட்டிடக்கலை ஆய்வாளர். கொங்கு பகுதியில் உள்ள வரலாறு, தொல்லியல் தடயங்களை ஆவணப்படுத்தியவர். சோழர், ஹொய்சாளர் கால கட்டிடக்கலை, சிற்பக்கலை குறித்த பயிலரங்குகளை நடத்தி வருகிறார்.

பிறப்பு

Sathasivam.jpg

கொங்கு சதாசிவம் ஜனவரி 31, 1982 அன்று திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குடிமங்கலம் கிராமத்தில் சுப்ரமணியம், கமலவேணி தம்பதியருக்குப் பிறந்தார். குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்ற பின் தற்போது பூலாங்கிணறு பகுதியில் மரத்தச்சர் பணி செய்து வருகிறார்.

தனி வாழ்க்கை

கொங்கு சதாசிவம் 2008-ம் ஆண்டு மகேஸ்வரியை திருமணம் செய்து கொண்டார். தற்போது மனைவியுடன் உடுமலைப்பேட்டை அருகே உள்ள பூலாங்குறிச்சி கிராமத்தில் வசித்து வருகிறார்.

ஆய்வு பணி

Sathasivam2.jpg

தென்கொங்கு சதாசிவம் கொங்குப்பகுதியில் உள்ள வரலாறு மற்றும் தொல்லியல் தடயங்களை கண்டறிந்து ஆவணப்படுத்தி வருகிறார். கா ராஜன், யத்தீஸ்குமார், வி செல்வகுமார் போன்ற ஆய்வாளர்களுடன் களப்பணி செய்துள்ளார். கொங்கு பகுதியிலுள்ள பெருங்கற்கால நினைவு சின்னங்களை பதிமூன்று ஆண்டுகளாக கண்டுபிடித்து பதிவு செய்து வருகிறார். அவற்றுள் தேன்வரந்தை பாறை ஓவியங்கள், காசிலிங்கம் பாளையம், மெட்ராத்தி பகுதியில் உள்ள கல்வட்டங்கள், மலையாண்டிபட்டினம் பகுதியில் உள்ள கல்வட்டங்கள், பதுக்கைகள், குத்துக்கல் போன்ற கண்டுபிடிப்புகள் முக்கியமானவை.

சோழர் மற்றும் ஹொய்சாளர் கால சிற்பக்கலை, கட்டிடக்கலை குறித்த பயிலரங்குகளை நடத்தி வருகிறார். இந்தியா முழுவதும் உள்ள வரலாற்று தளங்களை பார்க்கும் பயணங்களையும் ஒருங்கிணைத்து வருகிறார்.

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page