under review

கெர்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
Revision as of 10:17, 3 December 2023 by Navin Malaysia (talk | contribs) (Created page with "thumb கெர்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள லாபு எனும் வட்டாரத்தில் அமைந்துள்ளது. அரசாங்கப் பகுதி உதவிப் பள்ளியான இது குறைவான மாணவர்களைக்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
FB IMG 1701578687833.jpg

கெர்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள லாபு எனும் வட்டாரத்தில் அமைந்துள்ளது. அரசாங்கப் பகுதி உதவிப் பள்ளியான இது குறைவான மாணவர்களைக் கொண்டத் தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தப் பள்ளியின் பதிவு எண் NBD 4074.

பள்ளி வரலாறு

1930இல் இந்தப் பள்ளியின் கட்டடம் தோட்ட மருத்துவமனை அருகில் அமைந்திருந்தது. ஆரம்பக் காலங்களில் பலகை மற்றும் ஓடுகளால் ஆன இக்கட்டடம் மருத்துவமனையின் சவக்கூடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

அதிகாரப்பூர்வ பள்ளி

1945இல் இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு இக்கட்டடம் கெர்பி தோட்ட ஆரம்பத் தமிழ்ப்பள்ளியாக அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. அக்காலத்தில் கெர்பி மற்றும் கெரோடினா தோட்டப் பாட்டாளிகளின் பிள்ளைகளே இங்குக் கல்வி பயின்றனர்.

மாணவர் அதிகரிப்பு

1975ஆம் ஆண்டு மாணவர்களின் அதிகரிப்பு காரணத்தால் மேலும் 3 அறைகளும் ஒரு கிடங்கறையும் கொண்ட கட்டடம் அமைக்கப்பட்டது.

ஹாக்கியில் சாதனை

1977ஆம் ஆண்டில் ஹாக்கி விளையாட்டுப் போட்டியில் அபார வெற்றி கண்டதால் இப்பள்ளி மாநில அளவில் புகழ்பெற்று அனைவராலும் பேசப்பட்டது. தொடர்ந்து MSSNS ஹாக்கி விளையாட்டுப் போட்டியில் பலமுறை வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றது. இதன் பலனாக தேசிய ஹாக்கி விளையாட்டாளர்களான உமாதேவி, தேவிஶ்ரீ போன்றவர்களை இந்தப் பள்ளி உருவாக்கிய பெருமையைக் கொண்டுள்ளது.

உருமாற்றம்

பலகைக் கட்டமாக இருந்த இருந்த இப்பள்ளி 1995ஆம் ஆண்டு  சிமெண்டு கட்டடமாக உருமாறியது.



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.