under review

கூ கே கிம்

From Tamil Wiki
Revision as of 14:01, 1 October 2023 by Navin Malaysia (talk | contribs)
பேராசிரியர். எமரிட்டஸ் டான் ஸ்ரீ டத்தோ டாக்டர் கூ கே கிம்

கூ கே கிம் (Khoo Kay Kim) (மார்ச் 28, 1937 – மே 28, 2019) மலேசியாவின் முதன்மையான வரலாற்றாய்வாளர், பேராசிரியர். மலேசிய தேசியக் கோட்பாட்டு அமைப்பாளர்களுள் ஒருவர். மலேசியாவின் வரலாறு பாடத்தின் ஆலோசகர். மலேசிய வரலாற்றுத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர்.

பிறப்பு, கல்வி

கூ கே கிம், சீன இணையரான கூ சூ ஜின் மற்றும் சூஹ காய் சீக்கு மார்ச் 28, 1937ல் கம்பார், பேராக்கில் பிறந்தார். கூ கே கிம் தனது ஆரம்பக்கல்வியைத் தெலுக் அன்சுன், ஆங்கிலோ-சீன மெதொடிஸ் பள்ளியில் பயின்றார். இடைநிலைக்கல்வியை ஈப்போ, பேராக்கில் உள்ள செயிண்ட் மைக்கெல் பள்ளியில் கற்றார். கூ கே கிம் மலாயா பல்கலைக்கழகத்தில் இளங்கலை (1959), முதுகலை (1967) மற்றும் முனைவர் பட்டப்படிப்பை (1974) வரலாற்றில் நிறைவு செய்தார்.

தனிவாழ்க்கை

கூ கே கிம் மலாயா பல்கலைக்கழகத்தில் (சிங்கை) 1964லிருந்து 1975 வரை பேராசிரியராகப் பணியாற்றினார். 1973ல் மலாயா பல்கலைக்கழக வரலாற்றுப் பிரிவின் இடைக்கால தலைவராக இருந்தார். 1975லிருந்து 1992 வரை வரலாற்றுப் பிரிவில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

KKK 2.jpg
KKK 3.jpg

கூ கே கிம், ஶ்ரீ ரதியுடன் மணம் புரிந்தார். இந்த இணையருக்கு எடின் கூ, ருபின் கூ, மாவின் கூ என மூன்று மகன்கள் உள்ளனர்.

வரலாற்றுப் பணி

இவரது PhD ஆய்வு The Beginnings of Political Extremism in Malaya 1915-1935ஆக 1974ல் வெளிவந்தது. கூ கே கிம் வரலாற்று பல இதழ்களில் 87 கட்டுரைகளை எழுதியுள்ளார். அவ்விதழ்களில் சில;

  1. Malaysia in History,
  2. Jurnal Sejarah (வரலாற்று ஜர்னல்),
  3. Malaysian Journal of History,
  4. Politics and Strategic Studies (JEBAT),
  5. The southeast Asia Review,
  6. New Zealand Asia Studies Association,
  7. Journal of Southeast Asia History (JSEAH)
  8. Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society  

1969 கலவரத்திற்குப் பிறகு தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்காக ருக்குன் நெகாரா (தேசிய கோட்பாடுகள்) உருவாக்கத்தில் முன்னோடிகளில் பேராசிரியர் கூவும் ஒருவர். "ருக்குன் நெகாராவை உருவாக்கும் யோசனை துன் கசாலி ஷாஃபியால் பரிந்துரைக்கப்பட்டது. இது இந்தோனேசியாவின் தேசிய தத்துவமான பஞ்சசிலாவால் ஈர்க்கப்பட்டது" என்று பேராசிரியர் கூ விளக்கினார்.

அவர் பல ஆண்டுகளாக ராயல் ஆசியடிக் சொசைட்டியின் மலேசியக் கிளையின் தலைவராகவும், சங்கத்தால் வெளியிடப்பட்ட ராயல் ஏசியாடிக் சொசைட்டியின் மலேசியக் கிளையின் பத்திரிகையின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார்.

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஹாங்காங், புருணை நாடுகளில் வெளிநாட்டு ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். கூ கே கிம், மலாய் ஆய்வியல் துறை ஆராய்ச்சிக்காக மலாயா பல்கலைக்கழகத்திலும், நியூசிலாந்தின் ஆக்லாந்து பல்கலைக்கழகத்திலும் திட்டமிடல் குழுவின் உறுப்பினராகவும் பதவி வகித்தார். இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்ட்ராடஜிக் & இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் (ஐஎஸ்ஐஎஸ்) [Institute of Strategic & International Studies (ISIS)], மலேசிய வரலாற்று சங்கம் போன்ற துறையில் வழிகாட்டுவதற்கும் கொள்கையைத் தீர்மானிப்பதற்கும் ஆலோசனை நிபுணராக இருந்தார்.

கல்விப் பணி

தேசிய அளவில், தேசிய கல்வி ஆலோசனை வாரியம் மற்றும் கிளஸ்டர் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் அட்வைசரி பேனல் (Cluster School of Excellence Advisory Panel) ஆகியவற்றில் பணியாற்றினார். 1970-1997 வரை, மலேசிய தேர்வு கவுன்சிலால் நியமிக்கப்பட்ட ’சிஜில் திங்கி பெலஜாரன் மலேசியா’ (STPM)ன் வரலாற்றுப்பாடத் தேர்வுக்கான தலைமைத் தேர்வாளராகவும் பணியாற்றினார். அவரது தலைமையின் கீழ், வரலாற்றுப் பாடத்திற்கான தரமான தேர்வு முறையை உருவாக்குவதில் மலேசிய அரசாங்கத்திற்கு உதவினார். பள்ளி மாணவர்களுக்கான வரலாறு குறித்த ஏராளமான புத்தகங்களையும் எழுதினார்.

நூல்கள்

  1. Transformasi & Demokrasi -1971
  2. The Western Malay States: The Effects of Commercial Development On Malay Politics – 1972
  3. Pensejarahan Malaysia – 1975
  4. A History of Southeast Asia, South and East Asia: Essays & Document – 1977
  5. Panji-Panji Gemerlapan: Satu Pembicaraan Pensejarahan Melayu – 1979
  6. Taiping: Ibu Negeri Perak – 1981
  7. Teluk Anson (Teluk Intan): 100 Tahun – 1982
  8. Kenegaraan 25 Tahun: Satu Perspektif Sejarah – 1983
  9. Majalah dan Akhbar Melayu Sebagai Sumber Sejarah – 1984
  10. 100 Years of Kuala Lumpur As Local Authority – 1990
  11. His Majesty Sultan Azlan Shah -1991
  12. Malay Society: Transformation And Democratization – 1991
  13. Pacific Bank: 75 Years of Service To Community – 1996
  14. Thoughts On Malaysian Historiography – 1996
  15. Kuala Lumpur: The Formative Years – 1996
  16. The Commemoration of The 40th Anniversary of Federal Hotel, 1957-1997 (1997)
  17. I, KKK – (2017) சுயசரிதை

பிற நிறுவனம்

  1. மனித உரிமை நிறுவன உறுப்பினர் (SUHAKAM) [Ahli Suruhanjaya Hak Asaso Manusia] – (2004-2010)
  2. மலேசிய ஒருமைப்பாட்டு நிறுவன உறுப்பினர் [Ahli Lembaga Institusi Integriti Malaysia] - (2004-2013)
  3. மெர்டெகா விருதுகளின் அறங்காவலர் குழு உறுப்பினர், [Board of Trustees Merdeka Awards] - (2007-2013)
  4. மலேசியா-இந்தோநேசியா கீர்த்தியுடை நபர்கள் குழு உறுப்பினர்- [Malaysia-Indonesia Eminent Persons Group] (2008)
  5. மலேசியா ஊழல் எதிர்ப்பு ஆணைய உறுப்பினர் [Malaysian Anti-Corruption (MACC)] – (2009-2012)
  6. மாமன்னரின் கூட்டரசு பிரதேச மன்னிப்பருள் நிறுவன உறுப்பினர் (Lembaga Pengampunan Wilayah Perseketuan Dipengerusikan Oleh Yang di-Pertuan Agong)
  7. மலேசிய காகித பணம் மற்றும் நாணய குழு ஆலோசகர் (Jawatankuasa Penasihat Wang Kertas dan Duit Syiling)

தனி ஆர்வம்

கூ கே கிம் ஒரு கால்பந்து விளையாட்டாளர். இவர் சிறு வயதிலிருந்து விளையாட்டில் அதிக ஈடுபாடு உள்ளவர். காற்பந்து பயிற்றுவிப்பாளராக தனியாக பயிற்சி எடுத்தார். 1965ல் Malaysian Amateur Athletics Union (MAAU) கீழ் முறையான கால்பந்து பயிற்றுவிப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார். 1994ல் மலாயா பல்கலைகழகத்தின் விளையாட்டுப் பிரிவு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மலேசியாவில் முதல் முறையாக விளையாட்டு அறிவியல் இளங்கலை (Ijazah Sarjana Muda Sains Sukan) பட்டத்தைத் தோற்றுவித்தவர்.

  1. தேசிய விளையாட்டு தலைவர் தேர்ந்தெடுப்பு
  2. Technical and Development Committee, Football Association of Malaysia (FAM), உறுப்பினர். ­(1985-1995)
  3. Malaysian University of Southern California (MUSCA), 1996
  4. Malaysian Amateur Athletic Union (MAAU), 1996

விருதுகள்

  1. J.S.M Johan Mahkota, ஜூன் 1983
  2. டத்தோ விருது, D.P.M.P Darjah Paduka Mahkota Perak – ஏப்ரல் 1987
  3. Professor Emeritus பட்டம், மலாயா பல்கலைகழகம் – 2001
  4. Fellowship Malaysian Historical Society – 2012
  5. The Brand Laureate Most Eminent Brand Icon Leadership விருது, The Asia Pacific Branf Foundation (APBF), 2013
  6. பத்தாம் தேசிய கல்வி நிறைஞர் விருது – 2017
  7. மெர்டேகா விருதுகள் - 2018

இறப்பு

மே 28, 2019ல் நுரையீரலில் பாக்டீரியா தொற்றினால் மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் மரணித்தார். இவரது உடல் ஷா அலாம், நிர்வானா மெமோரியல் பார்க்கில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.