under review

கூலிம் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
Revision as of 11:16, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கூலிம் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் கெடா மாநிலத்தின் கூலிம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.

பள்ளிச் சின்னம்

பள்ளி வரலாறு

கூலிம் தமிழ்ப்பள்ளி 1945-ம் ஆண்டு தமிழ் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி என்ற பெயரில், மெதடிஸ்ட் கிறிஸ்துவத் தேவாலயத்தில் 45 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது. கூலிம் தமிழ்ப்பள்ளியின் முதல் தலைமையாசிரியராக திரு ராஜநாயகம் பொறுப்பேற்றார். 1949-ம் ஆண்டு தமிழ் மெதடிஸ்ட் பள்ளி என்றழைக்கப்பட்டு வந்த பள்ளி கூலிம் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியாகப் பெயர் மாற்றம் கண்டது. 1964- ஆம் ஆண்டில் தேவாலயத்திலிருந்து பள்ளி வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. கூலிம் பட்டணத்தில் இருந்த பேருந்து நிலையத்தின் அருகிலிருந்த கூலிம் ஆண்கள் மலாய் பள்ளியில் ஒன்று முதல் மூன்று வரையிலான வகுப்புகளும் கூலிம் பெண்கள் மலாய் பள்ளியில் நான்கு முதல் ஆறு வரையிலான வகுப்புகளும் தற்காலிகமாக இயங்கின. வகுப்பறைகள் போதாததால், மாலை வகுப்புகளாகக் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் நிகழ்ந்தன.

புதிய கட்டிடம்

மார்ச் 14, 1986 அன்று ஏழு வகுப்பறைகள் கொண்ட புதிய இரண்டு மாடிக்கட்டிடத்தை அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாமிவேலு திறந்து வைத்தார்.

பள்ளிக்கட்டிடம்

இணைக்கட்டடங்கள்

1990-ம் ஆண்டில் 4 அறைகள் கொண்ட இணைக்கட்டிடம் கட்டப்பட்டது. மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பால், 1995-ல் 3 வகுப்பறைகளுடன் கூடிய இன்னொரு கட்டிடம் கட்டப்பட்டது. தொடர் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பால் 1999 -ம் ஆண்டு புதிய மூன்று மாடிக் கட்டிடம் கட்டப்பட்டது. 2002-ம் ஆண்டு தகவல் தொழிற்நுட்ப வகுப்பறை கட்டப்பட்டது. 2016-ம் ஆண்டு குளிர்சாதன வசதி கொண்ட உருமாற்ற அறை[1] கட்டப்பட்டுச் சிற்றுண்டிச்சாலையும் புதுப்பிக்கப்பட்டது.

பள்ளி முகவரி

Sjk (t) Kulim,
Jalan Tunku Bendahara,
Kampung Bukit Awi, 09000 Kulim

உசாத்துணை

  • மலேசியாவில் 200 ஆண்டுகால தமிழ்க்கல்வி வரலாறு, 2016
  • மாணவர் தீபம் பள்ளி இதழ், 2019

அடிக்குறிப்புகள்

  1. Transformation room-கணினி அறை


✅Finalised Page