being created

குழித்துறை மகாதேவர் கோவில்: Difference between revisions

From Tamil Wiki
Line 21: Line 21:


====== சிவன் கோவில் ======
====== சிவன் கோவில் ======
சிவன் கோவில் கருவறை மற்றும் நந்தி மண்டபம் என்னும் அமைப்பைக் கொண்டது. நந்தி மண்டபம் நான்கு கல்தூண்களுடன் மர அளிகள் மேல் ஓட்டு கூரையுடன் காணப்படுகிறது. கல்லால் ஆன நந்திச் சிற்பம் உள்ளது, இரண்டு சரவிளக்குகள் இரண்டு மணிகள் தொங்க விடப்பட்டுள்ளன, குடை மற்றும் நாகம் கொண்ட ஒரு பெருய விளக்கு உள்ளது.
கருவறை கூம்பு வடிவ கூரையுடன் வட்ட வடிவில் உள்ளது. மேற்கூரை மரப்பலகையால் வேயப்பட்டு செப்புத்தகடு போர்த்தப்பட்டுள்ளது. கூரையின் உச்சியில் நான்கு புறங்களில் பாம்புகளும் மூன்று குடங்கள் கொண்ட கலசமும் உள்ளன.கருவறைக்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 


====== பிரம்மா கோவில் ======
====== பிரம்மா கோவில் ======

Revision as of 23:38, 23 August 2023

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் குழித்துறையில் அமைந்துள்ள சிவன் கோவில். மூலவர் மகாதேவர் எனும் சிவன். சிவன் பிரம்ம விஷ்ணு ஆகிய மூவருக்கும் தனி சன்னதிகள் உள்ளது.

இடம்

மூலவர்

தொன்மம்

கோவில் அமைப்பு

குழித்துறை மகாதேவர் கோவில் சிறிய குன்றின் மேல் பாறைகள் சூழ்ந்து உள்ளது. கோவில் கிழக்கே ஆற்றை நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு வெளி வாசல் இல்லை, தென்கிழக்கு மூலையில் படித்துறை உள்ளது. மேற்கு வெளி வாசல் முன் இரண்டு யானைகள் மற்றும் சங்கு கொண்ட திருவிதாங்கூர் அரசச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

வெளிப்பிராகாரம்

மேற்கு வெளி வாசல் வழி மட்டுமே கோவிலினுள் செல்ல முடியும். மேற்கு வெளி வாசல் உள்ளே இடப்பக்கம் வெளிப்பிரகாரத்தில் பெரிய கோவில் மணி மற்றும் அலுவலகம் உள்ளது. வடக்கு வெளிபிரகாரத்தில் பாறை மேல் நாகசிற்பங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இப்பாறையில் கல்வெட்டுகள் காணப்படுகிறது. பாறையின் கீழ் பகுதியில் சிறிதும் பெரிதுமாக இரண்டு சிவலிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கிழக்கு வெளிப்பிராகாரத்தில் கிணறு மற்றும் மரங்கள் உள்ளன. தெற்கு வெளி பிராகாரத்தில் ஊட்டுபுரைகான வாயில் உள்ளது, வெளியே கேரள பாணி ஊட்டுபுரை உள்ளது. தென்மேற்கு மூலையில் கம்பி அளியிடப்பட்ட இரு மேடைகள் மேல் கல் விளக்குகள் நாகர் சிற்பங்கள் மற்றும் கணபதி சிற்பங்கள் உள்ளன.

கோவில் முகப்பு

கோவில் முகப்பு அகன்று கேரள பாணி ஓட்டுக் கூரையுடன் காணப்படுகிறது. கிழக்கு முகப்பின் தெற்கு பக்க வாசல் சிவன் கருவறை முன்பும் வடக்கு பக்க வாசல் விஷ்ணு கருவறை முன்பும் உள்ளன. நடுவில் ஒரு சிறிய வாசல் உயரத்தில் பிரம்மா கருவறை முன்பாக உள்ளது. நடுவாசல் வழி பிரம்மா கருவறையை பார்க்க மட்டுமே முடியும் உள்ளே செல்ல முடியாது. தெற்கு மற்றும் வடக்கு வாசல்கள் முன் நான்கு தூண்கள் கொண்ட ஓட்டு கூரையால் ஆன மாடங்கள் உள்ளன. மாடங்களில் பலிபீடங்கள் உள்ளன. முகப்பு சுவர்களில் கல் விளக்குகள் சீரான இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன.

உள்பிரகாரம்

கிழக்கு வாயில் உள்ளே தூண்களுடன் திண்ணை ஒட்டுக் கூரையுடன் உள்ளது. தென் கிழக்கு மூலையில் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு அறையில் பூஜை பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. கோவிலின் நான்கு புறமும் இது போன்று திண்ணை, ஓட்டுக் கூரை கொண்ட சுற்றாலை உள்ளது. தெற்கு சுற்றாலையின் பெரும்பகுதி அறைகளாக மாற்றப்பட்டு கோவில் காரியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. தென் மேற்கு மூலை சுற்றாலை திண்ணையில் விநாயகர் கருவறை உள்ளது. மேற்கு திருச்சுற்றில் ஒரு வாயில் உள்ளது. ஆலய பணியாளர்கள், பூசகர் மேற்கு வாயிலை பயன்படுத்துகின்றனர். வடமேற்கு மூலையில் சிறிய அறையில் சில தெய்வங்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. வட கிழக்கு மூலையில் பாறைபகுதி தரைமட்டத்திலிருந்து உயர்ந்து காணப்படுகிறது.

சிவன் கோவில்

சிவன் கோவில் கருவறை மற்றும் நந்தி மண்டபம் என்னும் அமைப்பைக் கொண்டது. நந்தி மண்டபம் நான்கு கல்தூண்களுடன் மர அளிகள் மேல் ஓட்டு கூரையுடன் காணப்படுகிறது. கல்லால் ஆன நந்திச் சிற்பம் உள்ளது, இரண்டு சரவிளக்குகள் இரண்டு மணிகள் தொங்க விடப்பட்டுள்ளன, குடை மற்றும் நாகம் கொண்ட ஒரு பெருய விளக்கு உள்ளது.

கருவறை கூம்பு வடிவ கூரையுடன் வட்ட வடிவில் உள்ளது. மேற்கூரை மரப்பலகையால் வேயப்பட்டு செப்புத்தகடு போர்த்தப்பட்டுள்ளது. கூரையின் உச்சியில் நான்கு புறங்களில் பாம்புகளும் மூன்று குடங்கள் கொண்ட கலசமும் உள்ளன.கருவறைக்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பிரம்மா கோவில்
விஷ்ணு கோவில்

கருவறைகள்

பூஜைகளும் விழாக்களும்

வரலாறு

கல்வெட்டுகள்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.