under review

குழித்துறை மகாதேவர் கோவில்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(27 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் குழித்துறையில் அமைந்துள்ள சிவன் கோவில். மூலவர் மகாதேவர் எனும் சிவன். சிவன் பிரம்ம விஷ்ணு ஆகிய மூவருக்கும் தனி சன்னதிகள் உள்ளது.
[[File:குழித்துறை.jpg|thumb|முகப்பு, குழித்துறை மகாதேவர் கோவில்]]
குழித்துறை மகாதேவர் கோவில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் குழித்துறையில் அமைந்துள்ள சிவன் கோவில். மூலவர் மகாதேவர் எனும் சிவன். சிவன் பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவருக்கும் தனி சன்னதிகள் உள்ளன.
 
== இடம் ==
நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் குழித்துறை சந்திப்பிலிருந்து கிழக்கு நோக்கிப் பிரியும் சாலையில் குழித்துறை தபால் நிலையம் அருகே பிரியும் சிறிய சாலையின் முடிவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் சிறிய பாறைக்குன்றின் மேல் குழித்துறை மகாதேவர் கோவில் உள்ளது. கோவிலை பாறைகளும் ஆறும் சூழ்ந்திருக்கின்றன. மேற்கு வாசலின் இடது புறம் குடியிருப்புகளும் வலது புறம் சாமுண்டீஸ்வரி கோவிலும் படித்துறையும் உள்ளன. 
 
== மூலவர் ==
குழித்துறை மகாதேவர் கோவிலில் மகாதேவர் என்னும் சிவன் மற்றும் விஷ்ணு இருவரும் மூல தெய்வங்களாக உள்ளனர். பிரம்மாவுக்கான  கருவறை பிற்காலத்தில் அமைக்கப்பட்டு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மார்கழி மாதத் திருவிழா சிவன், விஷ்ணு இருவருக்குமுரியது. 
 
== தொன்மம் ==
[[File:குழித்துறை2.jpg|thumb|மேற்கு வாயில்(சங்கு சின்னத்துடன்)]]
குழித்துறை மகாதேவர் கோவில் சார்ந்து புராண கதைகள் இல்லை. கோவிலைக் கட்டிய திருவிதாங்கூர் அரச குடும்பம் தொடர்புடைய ஆலயம் என்பதால் திருவிதாங்கூர் வரலாற்றோடு தொடர்புடைய கதைகள் உள்ளன.
 
====== மார்த்தாண்டன் பிள்ளை கதை ======
ஒரு காலத்தில் துறைமுகமாக இருந்த இடத்தில் ஆய் அரசர் ராஜவர்மாவால் ஆலயம் கட்டப்பட்டது. பூஜைகள், வேதபாடசாலை, ஊட்டுபுரை, களரிப் பயிற்சி என சிறப்பாக இயங்கி வந்தது. பிற்காலத்தில் திருவிதாங்கூர் அரசாட்சியின் போது முகலாயர் ஆக்கிரமிப்பில் ஆலயம் சிதைக்கப்பட்டது. எட்டுவீட்டு பிள்ளைமார்களில் ஒருவரான மார்த்தாண்டன் பிள்ளை மற்றும் இடத்தறை போற்றி இருவர் தலைமையில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு பூஜைகள் நடந்து வந்துள்ளன. பின்னர் மார்த்தாண்ட வர்மா ஆட்சிக் காலத்தில் மார்த்தாண்டன் பிள்ளையுடன் எட்டுவீட்டுப் பிள்ளைமார் கல்குளத்தில் தூக்கிலேற்றிக் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் எ(இ)டத்தறை போற்றியும் காலமானார். மார்த்தாண்டன் பிள்ளையின் ஆத்மா பகையுடன் ஆலயத்தில் பிரம்ம ராட்சசனாக நிலை கொள்வதாக நம்பப்படுகிறது.
 
== கோவில் அமைப்பு ==
குழித்துறை மகாதேவர் கோவில் சிறிய குன்றின் மேல் பாறைகள் சூழ்ந்து உள்ளது. கோவிலின் கிழக்கிலும், தெற்கிலும் ஆறு ஓடுகிறது. கிழக்கு வெளி வாசல் இல்லை, தென்கிழக்கு மூலையில் ஆற்றுக்கு செல்லப் படித்துறை உள்ளது. மேற்கு வெளி வாசல் முன் இரண்டு யானைகள் மற்றும் சங்கு கொண்ட திருவிதாங்கூர் அரசச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. 
 
====== வெளிப்பிராகாரம் ======
மேற்கு வெளி வாசல் வழியாக மட்டுமே கோவிலினுள் செல்ல முடியும். உள்ளே இடப்பக்கம் பெரிய கோவில் மணியும்  அலுவலகமும் உள்ளன. வடக்கு வெளிப்பிரகாரத்தில் பாறை மேல் நாகசிற்பங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இப்பாறையில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன, கீழ்ப் பகுதியில் சிறிதும் பெரிதுமாக இரண்டு கல் சிவலிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. வெளிப்பிரகாரத்தின் வடகிழக்கில் முகப்பு பகுதிக்குச் செல்ல பாறையில் படிகள் செதுக்கப்பட்டுள்ளன.  கிழக்கு வெளிப்பிராகாரத்தில் கிணறும் மரங்களும் உள்ளன. கிழக்குப் பிரகாரத்தில் கொடிமர பலிபீடங்கள் இருந்த தடங்கள் காணப்படுகின்றன.  தெற்கு வெளிப் பிராகாரத்தில் ஊட்டுபுரைக்கான வாயில் உள்ளது, வெளியே கேரள பாணி ஊட்டுபுரை உள்ளது. தென்மேற்கு மூலையில் கம்பி அளியிடப்பட்ட இரு மேடைகள் மேல் கல் விளக்குகள் நாகர் சிற்பங்கள் மற்றும் கணபதி சிற்பங்கள் உள்ளன.
[[File:குழித்துறை3.jpg|thumb|கோவில் மணி, அலுவலகம்]]
 
====== கோவில் முகப்பு ======
கோவில் முகப்பு அகன்று கேரள பாணி ஓட்டுக் கூரையுடன் காணப்படுகிறது. கிழக்கு முகப்பின் தெற்கு பக்க வாசல் சிவன் கருவறை முன்பும் வடக்கு பக்க வாசல் விஷ்ணு கருவறை முன்பும் உள்ளன. நடுவில் ஒரு சிறிய வாசல் பிரம்மா கருவறை முன்பாக உயரத்தில் உள்ளது. நடுவாசல் வழி பிரம்மா கருவறையை பார்க்க மட்டுமே முடியும் உள்ளே செல்ல முடியாது. தெற்கு மற்றும் வடக்கு வாசல்கள் முன் நான்கு தூண்கள் கொண்ட ஓட்டு கூரையால் ஆன மாடங்கள் உள்ளன. மாடங்களில் பலிபீடங்கள் உள்ளன. முகப்பு சுவர்களில் கல் விளக்குகள் சீரான இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன.
 
====== கொடிமரங்கள் ======
கோவில் முகப்பின்  முன் சிவன் கோவில் மற்றும் விஷ்ணு கோவில் வாசல்கள் முன்  தேக்கு மரத்தின் மீது செம்பு தகட்டால் பொதியப்பட்ட இரண்டு கொடிமரங்கள் பீடத்தின் மீது 2000-ல் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் சிவன் கோவில் கொடிமரம் 2016-ல் முறிந்து விழுந்துள்ளது. பின் ஆருடம் பார்க்கப்பட்டு கொடிமரம் வேண்டாம் என்று முடிவானதால் கொடிமரங்கள் மற்றும் கொடிமர பீடங்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டன. இப்போது திருவிழாக் காலங்களில் மட்டும் தற்காலிக கமுகு அல்லது மூங்கில் மரத்தாலான கொடிமரம் நடப்படுகிறது. 
 
====== உள்பிரகாரம் ======
 
கிழக்கு வாயில் உள்ளே தூண்களுடன் திண்ணை ஒட்டுக் கூரையுடன் உள்ளது. தென் கிழக்கு மூலை சுற்றாலை மீது பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு அறையில் பூஜைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. கோவிலின் நான்கு புறமும் இது போன்று திண்ணை, ஓட்டுக் கூரை கொண்ட சுற்றாலை உள்ளது. தெற்கு சுற்றாலையின் பெரும்பகுதி அறைகளாக மாற்றப்பட்டு கோவில் காரியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.  தென் மேற்கு மூலை சுற்றாலை திண்ணையில் விநாயகர் கருவறை உள்ளது. மேற்கு திருச்சுற்றில் ஒரு வாயில் உள்ளது. ஆலய பணியாளர்கள், பூசகர் மேற்கு வாயிலைப் பயன்படுத்துகின்றனர். வடமேற்கு மூலையில் சிறிய அறையில் சில தெய்வங்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. வட கிழக்கு மூலையில் பாறைப்பகுதி தரைமட்டத்திலிருந்து உயர்ந்து காணப்படுகிறது. 
 
====== சிவன் கோவில் ======
[[File:குழித்துறை4.jpg|thumb|நாகர் சிற்பங்கள், தென்மேற்கு மூலை]]
சிவன் கோவில் கருவறை மற்றும் நந்தி மண்டபம் என்னும் அமைப்பைக் கொண்டது. நந்தி மண்டபம் நான்கு கல்தூண்களுடன் மர அளிகள் மேல் ஓட்டு கூரையுடன் காணப்படுகிறது. கல்லால் ஆன நந்திச் சிற்பம் உள்ளது, சரவிளக்குகள், தொங்கு விளக்குகள், மணிகள் உள்ளன, குடை மற்றும் நாகம் கொண்ட ஒரு பெரிய விளக்கு உள்ளது. மூலவர் சிவன் மகாதேவர் என்று அழைக்கப்படுகிறார். 
 
கருவறை கூம்பு வடிவ கூரையுடன் வட்ட வடிவில் உள்ளது. மேற்கூரை மரப்பலகையால் வேயப்பட்டு செப்புத்தகடு போர்த்தப்பட்டுள்ளது. கூரையின் உச்சியில் நான்கு புறங்களில் பாம்புகளும் மூன்று குடங்கள் கொண்ட கலசமும் உள்ளன.கருவறைக்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 
 
====== பிரம்மா கோவில் ======
பிரம்மா கோவில் சதுர வடிவ அர்த்த மண்டபம் மற்றும் செவ்வக வடிவ கருவறை கொண்டது. கூரை கேரள பாணி ஓட்டுக் கூரை. கூரையின் உச்சியில் கலசம் வைக்கப்பட்டுள்ளது. பிரம்மாவுக்கான  கருவறையில் சிவலிங்கம் உள்ளது. முகமண்டபம், வாகனம் இல்லை. 
 
====== விஷ்ணு கோவில் ======
[[File:குழித்துறை5.jpg|thumb|விஷ்ணு கருவறை]]
விஷ்ணு கோவில் கருவறை மற்றும் முகமண்டபம் என்னும் அமைப்பைக் கொண்டது. நான்கு தூண்கள் கொண்ட முகமண்டபத்தில் கருடன் சிற்பம் மற்றும் சரவிளக்குகள், மணிகள் உள்ளன. முகமண்டபம் மிக எளிய வேலைபாடுகளுள்ள மர விட்டத்தின் மேல் ஓடு வேயப்பட்ட கூரையைக் கொண்டது.
 
கருவறை வட்ட வடிவத்தில், பரப்பலகை வேயப்பட்டு செம்பு தகடு போர்த்தப்பட்ட கூம்பு வடிவ மேற்கூரையைக் கொண்டது. கூரையின் உச்சியில் மூன்று குடங்கள் கொண்ட கலசம், நான்கு உலோக நாகங்கள் நான்கு திசைகளிலும் உள்ளன. கருவறையில் விஷ்ணுவின் விக்கிரகம்  உள்ளது.  
 
====== சாமுண்டீஸ்வரி கோவில் ======
குழித்துறை மகாதேவர் கோவிலுடன் தொடர்புடைய சாமுண்டீஸ்வரி கோவில் மகாதேவர் கோவில் வளாகத்தின் வெளியே தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது. அரச குடும்பத்தின் பரதேவதையான சாமுண்டீஸ்வரி கோவில் ஓலைக்கூரையாக இருந்து 2007-ல் புதுப்பிக்கப்பட்டது.  சாமுண்டீஸ்வரி கோவிலின் தெற்கே இக்கோவில்களை முன்காலத்தில் பராமரித்து வந்த நிர்வாகிகள் தங்கிய கட்டிடம் பாழடைந்து காணப்படுகிறது. 
 
(பார்க்க [[குழித்துறை சாமுண்டீஸ்வரி கோவில்]])
 
== பூஜைகளும் விழாக்களும் ==
குழித்துறை மகாதேவர் கோவில் பூஜைகள் கேரள தாந்திரிக முறைபடி நடைபெறுகின்றன. தினம் ஐந்து காலப் பூஜை நடைபெறும். திருப்பலி முன்னர் மூன்று முறை நடத்தப்பட்டு இப்போது பூசகர் ஒருவரே உள்ள காரணத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. பிரதோஷம், ஆயில்யம், மிருத்யுஞ்சய ஹோமம் ஆகியவை சிறப்பு பூஜைகளாக நடைபெறுகின்றன. ஆடி அமாவாசை பலி நடைபெறுகிறது; இப்பலி தமிழ், கேரள மாத கணக்குகளின் வேறுபாட்டால் சில ஆண்டுகளில் இரண்டு முறை நடைபெறும். வாவு பலி நிகழும் முக்கிய இடங்களில் ஒன்று இக்கோயில்.
 
====== வாவு பலி ======
[[File:குழித்துறை8.jpg|thumb|மேற்குத் திருச்சுற்று]]
கர்கிடக மாதம்  என்னும் மலையாள மாதத்தில் கறுத்த வாவு (அமாவாசை) நாளில் இறந்த முன்னோர்களுக்கு உறவுகளால் பலி தர்ப்பணம் கோவிலை ஒட்டி குழித்துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் செய்யப்படும். கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அதிக மக்கள் அன்று இக்கோவிலுக்கு  வருகின்றனர். 
 
====== திருவனந்தபுரம் நவராத்திரி விழா ======
 
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் திருவிதாங்கூர் சமஸ்தானம் நடத்தும் நவராத்திரி விழா ஆண்டுதோறும் நடைபெறும். விழாவில் பங்கெடுக்க [[சுசீந்திரம் முன்னுதித்த அம்மன் கோவில்|சுசீந்திரம் முன்னுதித்த அம்மன்]], [[வேளிமலை குமாரசுவாமி கோவில்]] முருகன் மற்றும்  [[பத்மநாபபுரம் அரண்மனை]] தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய கோவிலின் விக்கிரகங்கள் (உற்சவ மூர்த்திகள்)  திருவிதாங்கூர் அரசரின் வீரவாள் முன்னே செல்ல ஊர்வலமாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படும். ஊர்வலம்  முதல் நாள் இரவு குழித்துறை மகாதேவர் கோவிலுடன் இணைந்த [[குழித்துறை சாமுண்டீஸ்வரி கோவில்|சாமுண்டீஸ்வரி கோவிலில்]] வந்து தங்கி, இரண்டாம் நாள் காலைபுறப்பட்டு நெய்யாற்றின்கரை கிருஷ்ணன் கோவில் சென்று தங்கி ,அடுத்தநாள் புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும். திரும்பிச் செல்லும்போதும் ஊர்வலம் இதே முறையில் தங்கிச்செல்லும். சாமுண்டீஸ்வரி கோவிலில் மூர்த்திகளின் வாகனங்களை நிறுத்துவதற்காக  பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 
 
====== மார்கழித் திருவிழா ======
குழித்துறை மகாதேவர் கோவில் திருவிழா மார்கழி மாதம் உத்திராட நட்சத்திரம் தொடங்கி திருவாதிரை நட்சத்திரம் வரை எட்டு நாட்கள் நடைபெறும். திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நிரந்தரக் கொடிமரம் இல்லாததால் கமுகமரம் அல்லது மூங்கில் மரத்தாலான தற்காலிகக் கொடிமரம் கொண்டு வரப்பட்டு பூஜைகள் முடித்து கொடி ஏற்றப்படும். திருவிழா நாட்களில் நிர்மால்ய பூஜை தொடங்கி ஐந்து கால பூஜை மற்றும் திருபூதப்பலி நடைபெறும்.
 
====== வேட்டை ======
[[File:குழித்துறை9.jpg|thumb|படித்துறை]]
மார்கழித் திருவிழாவின் ஏழாம் நாள் குழித்துறை தபால் அலுவலகம் முன் பந்தல் அமைக்கப்பட்டு வேட்டை நிகழ்சி நடைபெறும். வேட்டை நடத்தும் வேட்டைக் குறுப்பு ஆலய அலுவலக அறையில் வந்து அமர்வார். அவரை ஆலய அலுவலக ஊழியர் தீப்பந்தத்துடன் சென்று புத்தாடை கொடுத்து மாலை மரியாதை செய்து வேட்டைக்கு அழைப்பார். பின்னர் தீப்பந்தம் பிடித்தபடி அவரை ஊழியர் வேட்டை பந்தல் வரை அழைத்து வருவார். பக்தர்கள் பேச்சு சத்தம் எதுவும் இல்லாமல் அமைதியாக பின் தொடர்வர். கோவில் திருவிழாவிற்கு ஆண்டுதோறும் கேரளா மாநிலம் திரிசூரிலிருந்து வரும் தந்திரி வேட்டை குறுப்பிற்கு மாலை அணிவித்து தும்ப இலையில் பிராசாதம் கொடுத்து மரியாதை செய்வார். பின்னர் தந்திரி வில், அம்பு, வேட்டை வாள் கொடுத்து வேட்டையைத் தொடங்கச் சொல்லிக்  கோருவார். வேட்டை நிகழ்ச்சியின் அதிகாரம் முழுக்க மூர்த்திகள் ஆலயம் திரும்பும் வரை வேட்டை குறுப்பிடம்  இருக்கும். வேட்டை குறுப்பு சிவன் மற்றும் விஷ்ணுவின் வேட்டைகளை பந்தலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு இளநீர் தேங்காய்கள் மீது அம்பு ஏய்வது போல் சென்று அம்பால் தொட்டு நடிப்பார். வேட்டை முடிந்தவுடன் மேளதாளங்கள் முழங்க ஆரவாரத்துடன் ஊர்வலம் திரும்ப கோவில் வந்து சேரும்.
 
====== ஆறாட்டு ======
மார்கழி மாதத் திருவிழாவின் கடைசி நாள் ஆறாட்டு நிகழ்சி நடைபெறும். இரண்டு யானைகள் மீது சிவன் மற்றும் விஷ்ணுவின் உற்சவ மூர்த்திகள் ஏற்றப்பட்டு அருகில் குழித்துறை சப்பாத்து பாலம் அருகே வ.உ.சி. மைதானத்தில் உள்ள சாலைக்குடி கடவு வரை ஊர்வலம் செல்வர். அங்கு அமைக்கப்பட்ட தற்காலிக பந்தலில் மூர்த்திகள் வைக்கப்பட்டு தந்திரிகளால் பூஜைகள் செய்யப்படும். பின்னர் மூர்த்திகளுடன் தந்திரிகள் ஆற்றில் இறங்கி மூன்று முறை முழ்கி எழுவர். மூர்த்தி சிற்பங்கள் பந்தலுக்கு கொண்டுவரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் மூன்று முறை முங்கி எழுந்து மூர்த்திகளை ஆற்று நீரால் சுத்தம் செய்வர். மூர்த்திகள் பந்தலுக்கு எடுத்து வரப்பட்டு ஆடை, பூமாலை அணிவிக்கப்பட்டு ஆற்றில் பலிதர்பணம் முடித்து பூஜைகள், அபிஷேகம், தீபாராதானை நடைபெறும். உற்சவ மூர்த்திகள் யானை மீது ஏற்றப்பட்டு, கோவில் வந்து வெளிபிரகாரத்தை ஏழுச் சுற்றுகள் சுற்றி முடித்தபின்  கோவில் உள்ளே வைக்கப்படுவர்.
 
கொடி இறக்கப்பட்டு பட்டசு வெடிக்கப்பட்டு திருவிழா நிறைவுறும்.
 
== வரலாறு ==
[[File:குழித்துறை10.jpg|thumb|கல்வெட்டு, நாகர்கள், வடக்குப் பிரகாரம்]]
குழித்துறை மகாதேவர் கோவில் திருவிதாங்கூர் அரச குடும்பத்துடன் தொடர்புடையாக இருந்துள்ளது. ஆலய மதில்களில் திருவிதாங்கூர் அரசின் சங்கு முத்திரை காணப்படுகிறது. இவ்வாலையத்துடன் இணைந்த அம்மன் கோவில் அரச குடும்பத்தின் பரதேவதை என்று கூறப்படுகிறது. 14-ம் நூற்றாண்டில் வழிபாட்டிற்குரியதாக இருந்திருக்க வேண்டும்.
 
====== கல்வெட்டு ======
பொ. யு. 15-ம் நூற்றாண்டு கல்வெட்டு பிராமணர்களுக்கு நிபந்த உணவு, வெற்றிலை அடைக்காய் அளிப்பதை பற்றிய செய்தியை கொண்டுள்ளது. வடக்கு வெளிப்பிரகாரப் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது.
 
== உசாத்துணை ==
 
* தென்குமரி கோவில்கள், முனைவர் ஆ.கா. பெருமாள், சுதர்சன் புக்ஸ், இரண்டாம் பதிப்பு - 2018.
* கன்னியாகுமரி மாவட்ட கல்வெட்டுகள், அ. கா. பெருமாள், சுதர்சன் புக்ஸ், இரண்டாம் பதிப்பு - 2023.
* தகவல்கள், நன்றி - வெங்கட்ராமன், நிர்வாகத் தலைவர், குழித்துறை மகாதேவர் கோவில்.
 
== இணைப்புகள் ==
 
* [https://goo.gl/maps/7kVanzu3hRD3uN4v6 குழித்துறை மகாதேவர் கோவில் - Google Map]
* [https://490kdbtemples.wordpress.com/about/277th-kdb-276-arulmigu-kuzhithurai-mahadevar-thirukkovil-kuzhithurai-vilavancode-taluk-major-temple/ குழித்துறை மகாதேவர் கோவில் - கன்னியாகுமரி மாவட்ட தேவசக் கோவில்கள்]
* [https://www.youtube.com/watch?v=nYwYrlFjaSE&pp=ygVL4K6V4K-B4K604K6_4K6k4K-N4K6k4K-B4K6x4K-IIOCuruCuleCuvuCupOCvh-CuteCusOCvjSDgrpXgr4vgrrXgrr_grrLgr40g ஆறாட்டு - காணொலி]
* [https://twitter.com/DinakaranNews/status/735848083511083009 கொடிமரம் முறிவு - தினமலர் செய்தி]
{{Finalised}}
[[Category:Tamil Content]]

Latest revision as of 08:14, 24 February 2024

முகப்பு, குழித்துறை மகாதேவர் கோவில்

குழித்துறை மகாதேவர் கோவில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் குழித்துறையில் அமைந்துள்ள சிவன் கோவில். மூலவர் மகாதேவர் எனும் சிவன். சிவன் பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவருக்கும் தனி சன்னதிகள் உள்ளன.

இடம்

நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் குழித்துறை சந்திப்பிலிருந்து கிழக்கு நோக்கிப் பிரியும் சாலையில் குழித்துறை தபால் நிலையம் அருகே பிரியும் சிறிய சாலையின் முடிவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் சிறிய பாறைக்குன்றின் மேல் குழித்துறை மகாதேவர் கோவில் உள்ளது. கோவிலை பாறைகளும் ஆறும் சூழ்ந்திருக்கின்றன. மேற்கு வாசலின் இடது புறம் குடியிருப்புகளும் வலது புறம் சாமுண்டீஸ்வரி கோவிலும் படித்துறையும் உள்ளன.

மூலவர்

குழித்துறை மகாதேவர் கோவிலில் மகாதேவர் என்னும் சிவன் மற்றும் விஷ்ணு இருவரும் மூல தெய்வங்களாக உள்ளனர். பிரம்மாவுக்கான கருவறை பிற்காலத்தில் அமைக்கப்பட்டு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மார்கழி மாதத் திருவிழா சிவன், விஷ்ணு இருவருக்குமுரியது.

தொன்மம்

மேற்கு வாயில்(சங்கு சின்னத்துடன்)

குழித்துறை மகாதேவர் கோவில் சார்ந்து புராண கதைகள் இல்லை. கோவிலைக் கட்டிய திருவிதாங்கூர் அரச குடும்பம் தொடர்புடைய ஆலயம் என்பதால் திருவிதாங்கூர் வரலாற்றோடு தொடர்புடைய கதைகள் உள்ளன.

மார்த்தாண்டன் பிள்ளை கதை

ஒரு காலத்தில் துறைமுகமாக இருந்த இடத்தில் ஆய் அரசர் ராஜவர்மாவால் ஆலயம் கட்டப்பட்டது. பூஜைகள், வேதபாடசாலை, ஊட்டுபுரை, களரிப் பயிற்சி என சிறப்பாக இயங்கி வந்தது. பிற்காலத்தில் திருவிதாங்கூர் அரசாட்சியின் போது முகலாயர் ஆக்கிரமிப்பில் ஆலயம் சிதைக்கப்பட்டது. எட்டுவீட்டு பிள்ளைமார்களில் ஒருவரான மார்த்தாண்டன் பிள்ளை மற்றும் இடத்தறை போற்றி இருவர் தலைமையில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு பூஜைகள் நடந்து வந்துள்ளன. பின்னர் மார்த்தாண்ட வர்மா ஆட்சிக் காலத்தில் மார்த்தாண்டன் பிள்ளையுடன் எட்டுவீட்டுப் பிள்ளைமார் கல்குளத்தில் தூக்கிலேற்றிக் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் எ(இ)டத்தறை போற்றியும் காலமானார். மார்த்தாண்டன் பிள்ளையின் ஆத்மா பகையுடன் ஆலயத்தில் பிரம்ம ராட்சசனாக நிலை கொள்வதாக நம்பப்படுகிறது.

கோவில் அமைப்பு

குழித்துறை மகாதேவர் கோவில் சிறிய குன்றின் மேல் பாறைகள் சூழ்ந்து உள்ளது. கோவிலின் கிழக்கிலும், தெற்கிலும் ஆறு ஓடுகிறது. கிழக்கு வெளி வாசல் இல்லை, தென்கிழக்கு மூலையில் ஆற்றுக்கு செல்லப் படித்துறை உள்ளது. மேற்கு வெளி வாசல் முன் இரண்டு யானைகள் மற்றும் சங்கு கொண்ட திருவிதாங்கூர் அரசச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

வெளிப்பிராகாரம்

மேற்கு வெளி வாசல் வழியாக மட்டுமே கோவிலினுள் செல்ல முடியும். உள்ளே இடப்பக்கம் பெரிய கோவில் மணியும் அலுவலகமும் உள்ளன. வடக்கு வெளிப்பிரகாரத்தில் பாறை மேல் நாகசிற்பங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இப்பாறையில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன, கீழ்ப் பகுதியில் சிறிதும் பெரிதுமாக இரண்டு கல் சிவலிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. வெளிப்பிரகாரத்தின் வடகிழக்கில் முகப்பு பகுதிக்குச் செல்ல பாறையில் படிகள் செதுக்கப்பட்டுள்ளன. கிழக்கு வெளிப்பிராகாரத்தில் கிணறும் மரங்களும் உள்ளன. கிழக்குப் பிரகாரத்தில் கொடிமர பலிபீடங்கள் இருந்த தடங்கள் காணப்படுகின்றன. தெற்கு வெளிப் பிராகாரத்தில் ஊட்டுபுரைக்கான வாயில் உள்ளது, வெளியே கேரள பாணி ஊட்டுபுரை உள்ளது. தென்மேற்கு மூலையில் கம்பி அளியிடப்பட்ட இரு மேடைகள் மேல் கல் விளக்குகள் நாகர் சிற்பங்கள் மற்றும் கணபதி சிற்பங்கள் உள்ளன.

கோவில் மணி, அலுவலகம்
கோவில் முகப்பு

கோவில் முகப்பு அகன்று கேரள பாணி ஓட்டுக் கூரையுடன் காணப்படுகிறது. கிழக்கு முகப்பின் தெற்கு பக்க வாசல் சிவன் கருவறை முன்பும் வடக்கு பக்க வாசல் விஷ்ணு கருவறை முன்பும் உள்ளன. நடுவில் ஒரு சிறிய வாசல் பிரம்மா கருவறை முன்பாக உயரத்தில் உள்ளது. நடுவாசல் வழி பிரம்மா கருவறையை பார்க்க மட்டுமே முடியும் உள்ளே செல்ல முடியாது. தெற்கு மற்றும் வடக்கு வாசல்கள் முன் நான்கு தூண்கள் கொண்ட ஓட்டு கூரையால் ஆன மாடங்கள் உள்ளன. மாடங்களில் பலிபீடங்கள் உள்ளன. முகப்பு சுவர்களில் கல் விளக்குகள் சீரான இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன.

கொடிமரங்கள்

கோவில் முகப்பின் முன் சிவன் கோவில் மற்றும் விஷ்ணு கோவில் வாசல்கள் முன் தேக்கு மரத்தின் மீது செம்பு தகட்டால் பொதியப்பட்ட இரண்டு கொடிமரங்கள் பீடத்தின் மீது 2000-ல் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் சிவன் கோவில் கொடிமரம் 2016-ல் முறிந்து விழுந்துள்ளது. பின் ஆருடம் பார்க்கப்பட்டு கொடிமரம் வேண்டாம் என்று முடிவானதால் கொடிமரங்கள் மற்றும் கொடிமர பீடங்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டன. இப்போது திருவிழாக் காலங்களில் மட்டும் தற்காலிக கமுகு அல்லது மூங்கில் மரத்தாலான கொடிமரம் நடப்படுகிறது.

உள்பிரகாரம்

கிழக்கு வாயில் உள்ளே தூண்களுடன் திண்ணை ஒட்டுக் கூரையுடன் உள்ளது. தென் கிழக்கு மூலை சுற்றாலை மீது பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு அறையில் பூஜைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. கோவிலின் நான்கு புறமும் இது போன்று திண்ணை, ஓட்டுக் கூரை கொண்ட சுற்றாலை உள்ளது. தெற்கு சுற்றாலையின் பெரும்பகுதி அறைகளாக மாற்றப்பட்டு கோவில் காரியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. தென் மேற்கு மூலை சுற்றாலை திண்ணையில் விநாயகர் கருவறை உள்ளது. மேற்கு திருச்சுற்றில் ஒரு வாயில் உள்ளது. ஆலய பணியாளர்கள், பூசகர் மேற்கு வாயிலைப் பயன்படுத்துகின்றனர். வடமேற்கு மூலையில் சிறிய அறையில் சில தெய்வங்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. வட கிழக்கு மூலையில் பாறைப்பகுதி தரைமட்டத்திலிருந்து உயர்ந்து காணப்படுகிறது.

சிவன் கோவில்
நாகர் சிற்பங்கள், தென்மேற்கு மூலை

சிவன் கோவில் கருவறை மற்றும் நந்தி மண்டபம் என்னும் அமைப்பைக் கொண்டது. நந்தி மண்டபம் நான்கு கல்தூண்களுடன் மர அளிகள் மேல் ஓட்டு கூரையுடன் காணப்படுகிறது. கல்லால் ஆன நந்திச் சிற்பம் உள்ளது, சரவிளக்குகள், தொங்கு விளக்குகள், மணிகள் உள்ளன, குடை மற்றும் நாகம் கொண்ட ஒரு பெரிய விளக்கு உள்ளது. மூலவர் சிவன் மகாதேவர் என்று அழைக்கப்படுகிறார்.

கருவறை கூம்பு வடிவ கூரையுடன் வட்ட வடிவில் உள்ளது. மேற்கூரை மரப்பலகையால் வேயப்பட்டு செப்புத்தகடு போர்த்தப்பட்டுள்ளது. கூரையின் உச்சியில் நான்கு புறங்களில் பாம்புகளும் மூன்று குடங்கள் கொண்ட கலசமும் உள்ளன.கருவறைக்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பிரம்மா கோவில்

பிரம்மா கோவில் சதுர வடிவ அர்த்த மண்டபம் மற்றும் செவ்வக வடிவ கருவறை கொண்டது. கூரை கேரள பாணி ஓட்டுக் கூரை. கூரையின் உச்சியில் கலசம் வைக்கப்பட்டுள்ளது. பிரம்மாவுக்கான கருவறையில் சிவலிங்கம் உள்ளது. முகமண்டபம், வாகனம் இல்லை.

விஷ்ணு கோவில்
விஷ்ணு கருவறை

விஷ்ணு கோவில் கருவறை மற்றும் முகமண்டபம் என்னும் அமைப்பைக் கொண்டது. நான்கு தூண்கள் கொண்ட முகமண்டபத்தில் கருடன் சிற்பம் மற்றும் சரவிளக்குகள், மணிகள் உள்ளன. முகமண்டபம் மிக எளிய வேலைபாடுகளுள்ள மர விட்டத்தின் மேல் ஓடு வேயப்பட்ட கூரையைக் கொண்டது.

கருவறை வட்ட வடிவத்தில், பரப்பலகை வேயப்பட்டு செம்பு தகடு போர்த்தப்பட்ட கூம்பு வடிவ மேற்கூரையைக் கொண்டது. கூரையின் உச்சியில் மூன்று குடங்கள் கொண்ட கலசம், நான்கு உலோக நாகங்கள் நான்கு திசைகளிலும் உள்ளன. கருவறையில் விஷ்ணுவின் விக்கிரகம் உள்ளது.

சாமுண்டீஸ்வரி கோவில்

குழித்துறை மகாதேவர் கோவிலுடன் தொடர்புடைய சாமுண்டீஸ்வரி கோவில் மகாதேவர் கோவில் வளாகத்தின் வெளியே தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது. அரச குடும்பத்தின் பரதேவதையான சாமுண்டீஸ்வரி கோவில் ஓலைக்கூரையாக இருந்து 2007-ல் புதுப்பிக்கப்பட்டது. சாமுண்டீஸ்வரி கோவிலின் தெற்கே இக்கோவில்களை முன்காலத்தில் பராமரித்து வந்த நிர்வாகிகள் தங்கிய கட்டிடம் பாழடைந்து காணப்படுகிறது.

(பார்க்க குழித்துறை சாமுண்டீஸ்வரி கோவில்)

பூஜைகளும் விழாக்களும்

குழித்துறை மகாதேவர் கோவில் பூஜைகள் கேரள தாந்திரிக முறைபடி நடைபெறுகின்றன. தினம் ஐந்து காலப் பூஜை நடைபெறும். திருப்பலி முன்னர் மூன்று முறை நடத்தப்பட்டு இப்போது பூசகர் ஒருவரே உள்ள காரணத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. பிரதோஷம், ஆயில்யம், மிருத்யுஞ்சய ஹோமம் ஆகியவை சிறப்பு பூஜைகளாக நடைபெறுகின்றன. ஆடி அமாவாசை பலி நடைபெறுகிறது; இப்பலி தமிழ், கேரள மாத கணக்குகளின் வேறுபாட்டால் சில ஆண்டுகளில் இரண்டு முறை நடைபெறும். வாவு பலி நிகழும் முக்கிய இடங்களில் ஒன்று இக்கோயில்.

வாவு பலி
மேற்குத் திருச்சுற்று

கர்கிடக மாதம் என்னும் மலையாள மாதத்தில் கறுத்த வாவு (அமாவாசை) நாளில் இறந்த முன்னோர்களுக்கு உறவுகளால் பலி தர்ப்பணம் கோவிலை ஒட்டி குழித்துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் செய்யப்படும். கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அதிக மக்கள் அன்று இக்கோவிலுக்கு வருகின்றனர்.

திருவனந்தபுரம் நவராத்திரி விழா

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் திருவிதாங்கூர் சமஸ்தானம் நடத்தும் நவராத்திரி விழா ஆண்டுதோறும் நடைபெறும். விழாவில் பங்கெடுக்க சுசீந்திரம் முன்னுதித்த அம்மன், வேளிமலை குமாரசுவாமி கோவில் முருகன் மற்றும் பத்மநாபபுரம் அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய கோவிலின் விக்கிரகங்கள் (உற்சவ மூர்த்திகள்) திருவிதாங்கூர் அரசரின் வீரவாள் முன்னே செல்ல ஊர்வலமாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படும். ஊர்வலம் முதல் நாள் இரவு குழித்துறை மகாதேவர் கோவிலுடன் இணைந்த சாமுண்டீஸ்வரி கோவிலில் வந்து தங்கி, இரண்டாம் நாள் காலைபுறப்பட்டு நெய்யாற்றின்கரை கிருஷ்ணன் கோவில் சென்று தங்கி ,அடுத்தநாள் புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும். திரும்பிச் செல்லும்போதும் ஊர்வலம் இதே முறையில் தங்கிச்செல்லும். சாமுண்டீஸ்வரி கோவிலில் மூர்த்திகளின் வாகனங்களை நிறுத்துவதற்காக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

மார்கழித் திருவிழா

குழித்துறை மகாதேவர் கோவில் திருவிழா மார்கழி மாதம் உத்திராட நட்சத்திரம் தொடங்கி திருவாதிரை நட்சத்திரம் வரை எட்டு நாட்கள் நடைபெறும். திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நிரந்தரக் கொடிமரம் இல்லாததால் கமுகமரம் அல்லது மூங்கில் மரத்தாலான தற்காலிகக் கொடிமரம் கொண்டு வரப்பட்டு பூஜைகள் முடித்து கொடி ஏற்றப்படும். திருவிழா நாட்களில் நிர்மால்ய பூஜை தொடங்கி ஐந்து கால பூஜை மற்றும் திருபூதப்பலி நடைபெறும்.

வேட்டை
படித்துறை

மார்கழித் திருவிழாவின் ஏழாம் நாள் குழித்துறை தபால் அலுவலகம் முன் பந்தல் அமைக்கப்பட்டு வேட்டை நிகழ்சி நடைபெறும். வேட்டை நடத்தும் வேட்டைக் குறுப்பு ஆலய அலுவலக அறையில் வந்து அமர்வார். அவரை ஆலய அலுவலக ஊழியர் தீப்பந்தத்துடன் சென்று புத்தாடை கொடுத்து மாலை மரியாதை செய்து வேட்டைக்கு அழைப்பார். பின்னர் தீப்பந்தம் பிடித்தபடி அவரை ஊழியர் வேட்டை பந்தல் வரை அழைத்து வருவார். பக்தர்கள் பேச்சு சத்தம் எதுவும் இல்லாமல் அமைதியாக பின் தொடர்வர். கோவில் திருவிழாவிற்கு ஆண்டுதோறும் கேரளா மாநிலம் திரிசூரிலிருந்து வரும் தந்திரி வேட்டை குறுப்பிற்கு மாலை அணிவித்து தும்ப இலையில் பிராசாதம் கொடுத்து மரியாதை செய்வார். பின்னர் தந்திரி வில், அம்பு, வேட்டை வாள் கொடுத்து வேட்டையைத் தொடங்கச் சொல்லிக் கோருவார். வேட்டை நிகழ்ச்சியின் அதிகாரம் முழுக்க மூர்த்திகள் ஆலயம் திரும்பும் வரை வேட்டை குறுப்பிடம் இருக்கும். வேட்டை குறுப்பு சிவன் மற்றும் விஷ்ணுவின் வேட்டைகளை பந்தலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு இளநீர் தேங்காய்கள் மீது அம்பு ஏய்வது போல் சென்று அம்பால் தொட்டு நடிப்பார். வேட்டை முடிந்தவுடன் மேளதாளங்கள் முழங்க ஆரவாரத்துடன் ஊர்வலம் திரும்ப கோவில் வந்து சேரும்.

ஆறாட்டு

மார்கழி மாதத் திருவிழாவின் கடைசி நாள் ஆறாட்டு நிகழ்சி நடைபெறும். இரண்டு யானைகள் மீது சிவன் மற்றும் விஷ்ணுவின் உற்சவ மூர்த்திகள் ஏற்றப்பட்டு அருகில் குழித்துறை சப்பாத்து பாலம் அருகே வ.உ.சி. மைதானத்தில் உள்ள சாலைக்குடி கடவு வரை ஊர்வலம் செல்வர். அங்கு அமைக்கப்பட்ட தற்காலிக பந்தலில் மூர்த்திகள் வைக்கப்பட்டு தந்திரிகளால் பூஜைகள் செய்யப்படும். பின்னர் மூர்த்திகளுடன் தந்திரிகள் ஆற்றில் இறங்கி மூன்று முறை முழ்கி எழுவர். மூர்த்தி சிற்பங்கள் பந்தலுக்கு கொண்டுவரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் மூன்று முறை முங்கி எழுந்து மூர்த்திகளை ஆற்று நீரால் சுத்தம் செய்வர். மூர்த்திகள் பந்தலுக்கு எடுத்து வரப்பட்டு ஆடை, பூமாலை அணிவிக்கப்பட்டு ஆற்றில் பலிதர்பணம் முடித்து பூஜைகள், அபிஷேகம், தீபாராதானை நடைபெறும். உற்சவ மூர்த்திகள் யானை மீது ஏற்றப்பட்டு, கோவில் வந்து வெளிபிரகாரத்தை ஏழுச் சுற்றுகள் சுற்றி முடித்தபின் கோவில் உள்ளே வைக்கப்படுவர்.

கொடி இறக்கப்பட்டு பட்டசு வெடிக்கப்பட்டு திருவிழா நிறைவுறும்.

வரலாறு

கல்வெட்டு, நாகர்கள், வடக்குப் பிரகாரம்

குழித்துறை மகாதேவர் கோவில் திருவிதாங்கூர் அரச குடும்பத்துடன் தொடர்புடையாக இருந்துள்ளது. ஆலய மதில்களில் திருவிதாங்கூர் அரசின் சங்கு முத்திரை காணப்படுகிறது. இவ்வாலையத்துடன் இணைந்த அம்மன் கோவில் அரச குடும்பத்தின் பரதேவதை என்று கூறப்படுகிறது. 14-ம் நூற்றாண்டில் வழிபாட்டிற்குரியதாக இருந்திருக்க வேண்டும்.

கல்வெட்டு

பொ. யு. 15-ம் நூற்றாண்டு கல்வெட்டு பிராமணர்களுக்கு நிபந்த உணவு, வெற்றிலை அடைக்காய் அளிப்பதை பற்றிய செய்தியை கொண்டுள்ளது. வடக்கு வெளிப்பிரகாரப் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை

  • தென்குமரி கோவில்கள், முனைவர் ஆ.கா. பெருமாள், சுதர்சன் புக்ஸ், இரண்டாம் பதிப்பு - 2018.
  • கன்னியாகுமரி மாவட்ட கல்வெட்டுகள், அ. கா. பெருமாள், சுதர்சன் புக்ஸ், இரண்டாம் பதிப்பு - 2023.
  • தகவல்கள், நன்றி - வெங்கட்ராமன், நிர்வாகத் தலைவர், குழித்துறை மகாதேவர் கோவில்.

இணைப்புகள்

✅Finalised Page