குலாம் காதிறு நாவலர்

From Tamil Wiki
Revision as of 13:31, 9 March 2022 by Ramya (talk | contribs) (Created page with "குலாம் காதிறு நாவலர் தமிழ் புலவர். இவரது நூல்களை தமிழக அரசு 2007இல் நாட்டுடைமையாக்கியது. == இலக்கிய வாழ்க்கை == இவர் தமிழ், அரபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். கவிதை...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

குலாம் காதிறு நாவலர் தமிழ் புலவர். இவரது நூல்களை தமிழக அரசு 2007இல் நாட்டுடைமையாக்கியது.

இலக்கிய வாழ்க்கை

இவர் தமிழ், அரபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். கவிதை இலக்கியங்கள் பத்தொன்பது. உரைநடை இலக்கியங்கள் ஏழு. மொழிபெயர்ப்பு நூல்கள் மூன்று. இலக்கண நூல்கள் இரண்டு. இதர நூல்கள் இரண்டு. காப்பியங்கள், கலம்பகங்கள், கோவைகள், அந்தாதிகள், மாலைகள், உரை நூல்கள் என இவர் 24 நூல்களை எழுதினார். காப்பியங்கள், கலம்பகம், கோவைகள், அந்தாதிகள், மாலைகள், உரைநூல்கள் என அவர் இயற்றிய இலக்கிய வகைகள். நாகூர் நாயகத்தின் வரலாற்றை முதல் முதலில் நூலாகக் கொண்டு வந்தவர் குலாம் காதிறு நாவலர். நான்காவது நக்கீரர் என்று அழைக்கப்படுகிறார். மறைமலை அடிகளார் இவரின் மாணவர்.

நூல் பட்டியல்

  • புலவராற்றுப்படை
  • நாகூர்ப் புராணம்
  • ஆரிபு நாயகப் புராணம்
  • ஆரிபு நாயக வசனம்
  • உமறு பாஷா யுத்த சரித்திரம் (நான்கு பாகங்கள்)
  • கன்ஜுல் கறாமத்து
  • அரபுத் தமிழ் அகராதி
  • முகாஷஃபா மாலை
  • பொருந்தா இலக்கணம்
  • குவாலீர்க் கலம்பகம்
  • நாகூர்க் கலம்பகம்
  • திருமக்காத் திரிபந்தாதி
  • சமுத்திர மாலை
  • பிரபந்தத் திரட்டு
  • மும்மணிக் கோவை
  • மதுரைக் கோவை
  • சித்திரக்கவித்திரட்டு
  • சீறா வசன காவியம்
  • திருமணிமாலை வசனம்
  • நன்னூல் விளக்கம்
  • தரீக்குல் ஜன்னா உரை
  • நபிகள் பிரான் நிர்யாணமான்மிய உரை
  • பதாயிகுக் கலம்பகம்
  • அறபுத்தமிழ் அகராதி

உசாத்துணை