being created

குறவஞ்சி

From Tamil Wiki
Revision as of 23:05, 4 May 2024 by Tamizhkalai (talk | contribs) (Created page with "குறவஞ்சி பாடல் நாடக வடிவத்தில் அமைந்த சிற்றிலக்கியம். சிற்றிலக்கிய வகைமைகளில் குறிப்பிடத்தக்கது. == பெயர்க்காரணம் == குறவஞ்சி என்பது குற+வஞ்சி என்று பிரியும். வஞ்சி என்றால் வ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

குறவஞ்சி பாடல் நாடக வடிவத்தில் அமைந்த சிற்றிலக்கியம். சிற்றிலக்கிய வகைமைகளில் குறிப்பிடத்தக்கது.

பெயர்க்காரணம்

குறவஞ்சி என்பது குற+வஞ்சி என்று பிரியும். வஞ்சி என்றால் வஞ்சிக்கொடி போன்ற பெண் என்று பொருள். குறவஞ்சி என்பது குறவர் குலத்தில் பிறந்த வஞ்சிக்கொடி போன்ற பெண் என்ற பொருளைத் தரும். இந்த நூலில் குறத்தி குறி கூறுதல், குறத்தி குறவனுடன் உரையாடுதல், குறத்தியின் செயல்கள், குறி வகைகள் போன்றவை முதன்மை இடம் பெறுவதால் இந்த இலக்கிய வகை குறவஞ்சி என்ற பெயரைப் பெற்றுள்ளது.

குறவஞ்சி நூல்கள் பெயர் பெறும் முறை
  • இடத்தின்/நாட்டின் பெயரால் பெயர் பெறுதல்- திருக்குற்றாலக் குறவஞ்சி, திருஈங்கோய்மலைக் குறவஞ்சி, சிவன்மலைக் குறவஞ்சி
  • தலைவன் பெயரால் பெயர் பெறுதல்-சரபேந்திர பூபாலக் குறவஞ்சி
  • பாட்டுடைத் தலைவன் பெயரால் பெயர் பெறுதல்-தியாகேசர் குறவஞ்சி
  • இடம், தலைவன் பெயர் இரண்டாலும் பெயர் பெறுதல்-தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி
  • தலைவியின் பெயரால் பெயர் பெறுதல்- தமிழரசு குறவஞ்சி
  • குறத்தியின் பெயரால் பெயர் பெறுதல்-துரோபதைக் குறவஞ்சி






🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.