குமாரதேவர்

From Tamil Wiki
Revision as of 07:54, 19 March 2022 by Ramya (talk | contribs) (Created page with "குமாரதேவர் தமிழ்ப்புலவர். கர்நாடக வீர சைவ மரபினைச் சார்ந்தவர். இவர் இயற்றிய மகாராஜா துறவு நூல் பெரும்புகழ் பெற்றது. == வாழ்க்கைக் குறிப்பு == கன்னட நாட்டு அரசர். சாந்தலிங்க அடிக...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

குமாரதேவர் தமிழ்ப்புலவர். கர்நாடக வீர சைவ மரபினைச் சார்ந்தவர். இவர் இயற்றிய மகாராஜா துறவு நூல் பெரும்புகழ் பெற்றது.

வாழ்க்கைக் குறிப்பு

கன்னட நாட்டு அரசர். சாந்தலிங்க அடிகளின் சீடர். இவரது திருமடம் துறையூர் ஆதீனத்திற்கு கட்டுப்பட்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் திருக் குமாரதேவர் மடம் உள்ளது. இங்கு இவர் தியானம் செய்த குகை உள்ளது. இவர் விருதாச்சலம் பெரியநாயகி சமேத பழமலைநாதர் மீது பாடல் பாடியுள்ளார்.

நூல் பட்டியல்

  • மகாராஜா துறவு
  • அத்வைத உண்மை
  • ஆகம நெறியகவல்
  • உபதேச சித்தாந்தக் கட்டளை
  • சகச நிட்டை
  • சிவதரிசன அகவல்

உசாத்துணை