under review

குமாரகுலசிங்க முதலியார்

From Tamil Wiki
Revision as of 22:52, 31 December 2022 by Madhusaml (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

குமாரகுலசிங்க முதலியார் (1826-1884) ஈழத்து தமிழ்ப்புலவர். அரசாங்கப்பணியாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

குமாரகுலசிங்க முதலியார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தெல்லிப்பழை என்னும் ஊரில் அமெரிக்கமிஷன் உபதேசியாராய் இருந்த சோடன் என்பவருக்கு மகனாக 1826-ல் பிறந்தார். வட்டுக்கோட்டைச் சாத்திரசாலையில் கல்வி பயின்றார். அரசாங்கப் பணியாற்றினார். மல்லாகம், யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றங்களில் தலைமை எழுத்தராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். குமாரகுலசிங்க முதலியாரின் இளைய மகளான மங்களநாயகத்தை ஐசாக் தம்பையா மணந்தார்.

இலக்கிய வாழ்க்கை

குமாரகுலசிங்க முதலியார் கீர்த்தனங்கள், பதங்கள், தனிப்பாக்கள் பாடினார். "பதிவிரதை விலாசம்’ என்ற நாடக நூலை இயற்றினார்.

விருது

குமாரகுலசிங்கத்தின் அரசாங்க சேவையைப் பாராட்டி "முதலியார்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.

மறைவு

குமாரகுலசிங்க முதலியார் 1884-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • பதிவிரதை விலாசம்

உசாத்துணை


✅Finalised Page