குமரிமைந்தன்

From Tamil Wiki
குமரிமைந்தன்

குமரிமைந்தன் (1937-2021 ) தமிழறிஞர், பண்பாட்டு ஆய்வாளர், தமிழ்த்தேசியச் செயல்பாட்டாளர். குமரிமைந்தன் தமிழகம் தொன்மையான தனிப்பண்பாடு கொண்ட தனித்தேசியம் என்றும், அது தனிநாடாக நீடிக்கவேண்டும் என்றும், அதன் பொருளியல் வளமும் பண்பாட்டு மரபும் இந்திய ஒன்றியத்தால் அழிக்கப்படுகின்றன என்றும் வாதாடியவர்

பிறப்பு, கல்வி

குமரிமைந்தனின் இயற்பெயர் பெரியநாடார். 1937 ல் குமரிமாவட்டம் தெற்கு சூரன்குடியில் பிறந்தார். பொறியியல் படிப்பை சென்னையில் முடித்தார்.

தனிவாழ்க்கை

1960 முதல் 1984 வரை 24 ஆண்டுகள் தமிழகப் பொதுப் பணித்துறையில் பிரிவு அலுவலராக (இளம் பொறியாளராக)ப் பணியாற்றினார். பின்பு விருப்ப ஓய்வுப் பெற்றுச் சொந்தத் தொழில் செய்தார்.

மறைவு

குமரிமைந்தன் 3-ஜூன்-2021 ல் மதுரையில் காலமானார்

நூல்கள்

  • குமரிக்கண்ட வரலாறும் அரசியலும்
  • சாதி வரலாற்றுக்கு ஒரு பதம்: நாடார்களின் வரலாறு
  • இராமர் பாலப் பூச்சாண்டி

உசாத்துணை