குமரன் (தமிழர் தடம்)
From Tamil Wiki
குமரன் பயணி, தமிழர் தடம் என்ற வலைதளம், யூடியூப் தளம் வைத்துள்ளார். பயணி. சிற்றூர்களிலுள்ள வரலாறு, கலை, பண்பாடு சார்ந்தவைகளை ஆவணப்படுத்தினார்.
வாழ்க்கைக் குறிப்பு
குமரன் இயந்திரவியல் பொறியியல் படித்தார்.
தமிழர் தடம்
சிறிய ஊர்களில் வரலாறு, பாறை ஓவியங்கள், கோவில்கள், கோட்டைகள், கல்வெட்டுகள் மற்றும் பிற கலை, பண்பாடு சார்ந்தவைகளை ஆவணப்படுத்தும் நோக்கோடு ”தமிழர் தடம்” என்ற வலைதளத்தையும், யூடியூப் சேனலையும் 2017-ல் ஆரம்பித்தார். தமிழின் வரலாற்றையும் சிறப்பையும் சொல்வதை ”TAMILAR THADAM” குறிக்கோளாகக் கொண்டது. "கோட்டைகள், பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள் வரலாற்றுச் சுவடுகள் இவற்றை காண என்னோடு இணைந்திடுங்கள்" என்பதை இவர் தளத்தின் முழக்க வரியாக வைத்துள்ளார்.
உசாத்துணை
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.