குடவாயில் பாலசுப்ரமணியன்

From Tamil Wiki
Revision as of 19:20, 13 June 2022 by Navingssv (talk | contribs)

குடவாயில் பாலசுப்ரமணியம் (பிறப்பு: ஜூன் 15, 1948) தமிழக கல்வெட்டு ஆய்வாளர், கலைவரலாற்றாசிரியர். தஞ்சாவூர் மாவட்டக் கல்வெட்டு மற்றும் கோவில்கள் பற்றி ஆய்வு செய்தவர். தஞ்சை மாவட்ட கோவில்களை ஆராய்ந்து விரிவாக பதிவு செய்தவர். தமிழக கோபுரகலை என்னும் நூலை எழுதியவர்.

பிறப்பு, கல்வி

குடவாயில் பாலசுப்ரமணியம் ஜூன் 15, 1948 அன்று திருவாரூர் மாவட்டம் குடவாயில் வட்டம் பெருமங்கலம் கிராமத்தில் முனுசாமி சோழகர், அபயாம்பாள் தம்பதியருக்குப் பிறந்தார். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் இளங்கிலை விலங்கியல் பட்டம் பெற்றார் (பி.எஸ்.சி). சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ வரலாறு பயின்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் (வரலாறு) பட்டம் பெற்றார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி (கட்டிடக்கலை) பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

குடவாயில் பாலசுப்ரமணியம் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தின் பதிப்பக மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

கலை வாழ்க்கை