குடந்தை.ப.சுந்தரேசனார்

From Tamil Wiki
Revision as of 04:09, 7 March 2022 by Tamizhkalai (talk | contribs)

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் (28. 05. 1914 – 09. 06. 1981)தமிழிசை மீட்புப் போராளியாக இருந்து தமிழகம் முழுவதும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணம் செய்து தமிழிசை பரப்பிய இசைமேதை . தமிழ் இலக்கியங்களில் பொதிந்து கிடந்த அரிய இசை நுட்பங்களைக் குறிப்பாகச் சிலப்பதிகாரத்தின் இசைக்கூறுகளை, தமிழர்களின் செம்மாந்த இசைப்புலமையை எளிய தமிழில் எடுத்துரைத்தவர்.

பிறப்பு,கல்வி

குடந்தை.பா.சுந்தரேசனார் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குடந்தையில் பஞ்சநாதம் பிள்ளை, குப்பம்மாள் ஆகியோருக்கு மே 28, 1914 அன்று பிறந்தார். வறுமையினால் நான்காம் வகுப்புக்குமேல் கல்வி பெற இயலவில்லை. நகைக்கடையில் வேலை செய்துகொனண்டே பல நூல்களைத் தானே கற்றார்.. இசை மீது இருந்த ஈடுபாட்டால் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம், பேராசிரியர் சாம்பமூர்த்தியின் இசைநூல்கள் இவற்றின் இசைத்தட்டுக்களைக் கேட்டு இசையறிவை வளர்த்துக் கொண்டார்.

(பிடில்) கந்தசாமி தேசிகர்,வேப்பத்தூர் பாலசுப்பிரமணியம், மற்றும் 1935 முதல் 17 ஆண்டுகளுக்கு, குடந்தை வேதாரண்யம் இராமச்சந்திரன் ஆகியோரிடம் செவ்விசை பயின்றார்.