குடந்தை.ப.சுந்தரேசனார்: Difference between revisions

From Tamil Wiki
Line 22: Line 22:


பஞ்சமரபு நூலுக்கு உரையெழுதியுள்ளார்.
பஞ்சமரபு நூலுக்கு உரையெழுதியுள்ளார்.
== படைப்புகள் ==
* இசைத்தமிழ்ப் பயிற்சி நூல் (1971)
* முதல் ஐந்திசைப் பண்கள் (1956)
* முதல் ஐந்திசை நிரல்
* முதல் ஆறிசை நிரல்
* முதல் ஏழிசை நிரல்
=== வெளிவராத நூல்கள் ===
ஓரேழ்பாலை
இரண்டாம் ஏழிசை நிரல்
பரிபாடல் இசைமுறை
பாணர்கள் பயிற்றுவித்த இசைமுறை
இசைத்தமிழ்ப் ப்யிற்சி நூல்
இசைத்தமிழ் அகரநிரல்
வேனிற்காதை இசைப்பகுதி விளக்கம்
சேக்கிழார் கண்ட இசைத்தமிழ்
சமயக்குரவர்கள் கைக்கொண்ட இசைத்தமிழ்
பெரும்பண்கள் பதிநாறு
நூற்றுமூன்று பண்கள் தாளநூல்கள்
கடித இலக்கிய இசைத்தமிழ்க் குறிப்புகள்
இசைத்தமிழ்-தமிழிசப்பாடல்கள்
இசைத்தமிழ் வரலாறு

Revision as of 05:00, 7 March 2022

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் (28. 05. 1914 – 09. 06. 1981)தமிழிசை மீட்புப் போராளியாக இருந்து தமிழகம் முழுவதும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணம் செய்து தமிழிசை பரப்பிய இசைமேதை . தமிழ் இலக்கியங்களில் பொதிந்து கிடந்த அரிய இசை நுட்பங்களைக் குறிப்பாகச் சிலப்பதிகாரத்தின் இசைக்கூறுகளை, தமிழர்களின் செம்மாந்த இசைப்புலமையை எளிய தமிழில் எடுத்துரைத்தவர்.

பிறப்பு,கல்வி

குடந்தை.பா.சுந்தரேசனார் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குடந்தையில் பஞ்சநாதம் பிள்ளை, குப்பம்மாள் ஆகியோருக்கு மே 28, 1914 அன்று பிறந்தார். வறுமையினால் நான்காம் வகுப்புக்குமேல் கல்வி பெற இயலவில்லை. நகைக்கடையில் வேலை செய்துகொனண்டே பல நூல்களைத் தானே கற்றார்.. இசை மீது இருந்த ஈடுபாட்டால் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம், பேராசிரியர் சாம்பமூர்த்தியின் இசைநூல்கள் இவற்றின் இசைத்தட்டுக்களைக் கேட்டு இசையறிவை வளர்த்துக் கொண்டார். சைவத்திருமுறைகளைப் பயின்றார். தெலுங்கு, ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றார்.

(பிடில்) கந்தசாமி தேசிகர்,வேப்பத்தூர் பாலசுப்பிரமணியம், மற்றும் 1935 முதல் 17 ஆண்டுகளுக்கு, குடந்தை வேதாரண்யம் இராமச்சந்திரன் ஆகியோரிடம் செவ்விசை பயின்றார்.

தனி வாழ்க்கை

இவர் 1944இல் சொர்ணத்தம்மாளை மணந்தார். 1947இல் ஒரு குழந்தை பிறந்து, இறந்தது. அதன்பின் குழந்தைப்பேறில்லை.

கல்விப்பணி

புலவர் வகுப்பு இசையாசிரியர்-திருவையாறு அரசர் கல்லூரி (1949-1952)

தேவார இசை விரிவுரையாளர்-அண்னாமலைப் பல்கலைக்கழகம் (1952-1955)


இசைப்பணி

.இவர் சிலப்பதிகாரம், திருமுறைகள், சிற்றிலக்கியங்கள் போன்றவற்றில் சிறந்த இசைப்பயிற்சி பெற்றவர். இவர் ஒவ்வொரு ஊராகச் சென்று, பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களைப் பாடி விரிவுரை செய்தவர். மூவர் தேவாரத்தை முறையுறப் பாடி அதில் அமைந்து கிடக்கும் பண்ணழகையும், பண்ணியல்பையும் எடுத்துக்காட்டுவதில் வல்லவர். குமரகுருபரரின் தொடுக்கும் கடவுள் பழம்பாடலை இவர் குரலில் கேட்கத் தமிழையின் ஆற்றல் விளங்கும்.

அருள்திரு. விபுலானந்த அடிகள், தாம் எழுதிய யாழ்நூலை அண்ணாமலைப் பல்கலைக்கழக அரங்கில் (1947) அரங்கேற்றம் செய்தபோது சுந்தரேசனார் அதற்குப் பண்ணிசைத்தார்.

பஞ்சமரபு நூலுக்கு உரையெழுதியுள்ளார்.

படைப்புகள்

  • இசைத்தமிழ்ப் பயிற்சி நூல் (1971)
  • முதல் ஐந்திசைப் பண்கள் (1956)
  • முதல் ஐந்திசை நிரல்
  • முதல் ஆறிசை நிரல்
  • முதல் ஏழிசை நிரல்

வெளிவராத நூல்கள்

ஓரேழ்பாலை

இரண்டாம் ஏழிசை நிரல்

பரிபாடல் இசைமுறை

பாணர்கள் பயிற்றுவித்த இசைமுறை

இசைத்தமிழ்ப் ப்யிற்சி நூல்

இசைத்தமிழ் அகரநிரல்

வேனிற்காதை இசைப்பகுதி விளக்கம்

சேக்கிழார் கண்ட இசைத்தமிழ்

சமயக்குரவர்கள் கைக்கொண்ட இசைத்தமிழ்

பெரும்பண்கள் பதிநாறு

நூற்றுமூன்று பண்கள் தாளநூல்கள்

கடித இலக்கிய இசைத்தமிழ்க் குறிப்புகள்

இசைத்தமிழ்-தமிழிசப்பாடல்கள்

இசைத்தமிழ் வரலாறு