standardised

கீ. ஏகாம்பரம்

From Tamil Wiki
Revision as of 10:21, 10 October 2022 by Manobharathi (talk | contribs)

கீ. ஏகாம்பரம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் அறிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

கீ. ஏகாம்பரம் மானிப்பாயிலிருந்து அறிவியல் நூல்களை முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்து அச்சேற்றிய சாமுவேல் கிரீன் வைத்தியரின் மாணவர். இவரின் பெயரைக் கொண்ட ஒரு வீதி இன்றும் யாழ்ப்பாணத்தில் உள்ளது.

இலக்கிய வாழ்க்கை

கீ. ஏகாம்பரம் மருத்துவத்துறையில் அச்சேற்றப்பட்ட நூல்களுக்கு காரணமானவர்களுள் ஒருவர். நோய் தீர்க்க வைத்தியர்களுக்கு உதவிபுரியும் வகையில் "வைத்தியாகரம்" என்னும் நூலை (Hooper's Physicians) தமிழில் மொழி பெயர்த்தார். 1872-ல் கிரீன் வைத்தியரால் இந்நூல் பிரசுரிக்கப்பட்டது.

ஹென்றி மார்ட்டின் வட்டுக்கோட்டையிலே "உதய தாரகை” (1841) என்னும் செய்தித்தாள் தொடக்கப்பட்டபோது இதழாசிரியர்களுள் ஒருவராக இருந்தார். "எஸ்தர் விலாசம்” என்னும் நூலை இயற்றினார். ”யாழ்ப்பாணம் பற்றிய குறிப்புகள்” (Notes of Jaffna), ”யாழ்ப்பாணத்து ஆசனக் கோவிலின் வரலாறு” ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டார்.

நூல் பட்டியல்

  • எஸ்தர் விலாசம்
  • யாழ்ப்பாணம் பற்றிய குறிப்புகள்
  • யாழ்ப்பாணத்து ஆசனக் கோவிலின் வரலாறு
மொழிபெயர்ப்பு
  • வைத்தியாகரம்

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்:மு. கணபதிப் பிள்ளை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.