first review completed

கீர் ஜொகாரி தமிழ்ப்பள்ளி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 96: Line 96:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{First Review Completed}}
{{First review completed}}
[[Category:மலேசிய பண்பாடு]]
[[Category:மலேசிய பண்பாடு]]

Revision as of 07:35, 20 April 2024

பள்ளிச்சின்னம்

கீர் ஜொகாரி தமிழ்ப்பள்ளி முன்னர் தாப்பா ரோடு தமிழ்ப்பள்ளி என அறியப்பட்டது. கீர் ஜொகாரி தமிழ்ப்பள்ளி மலேசியாவின் பேராக் மாநிலத்தின் தாப்பா பட்டணத்தில் அமைந்திருக்கும் தமிழ்ப்பள்ளி. இப்பள்ளியின் மலேசியக் கல்வி அமைச்சுப் பதிவெண் ABD0074.

பள்ளி வரலாறு

பள்ளி முகப்பு வளாகம்

1930-ம் ஆண்டில் தாப்பா ரோடு தமிழ்ப்பள்ளி தாப்பா ரோடு ரயில் நிலையத்தின் முன்புறம் இருந்த கட்டிடமொன்றில் இயங்கிவந்தது. அக்காலத்தில் தொடர் வண்டித் துறையில் பணியாற்றிய பணியாளர்களின் குழந்தைகளே தாப்பா ரோடு தமிழ்ப்பள்ளியில் பயின்று வந்தனர். 1938-ல் ரயில் துறையில் பணியாற்றிய சாமுவேல் என்பவரின் முயற்சியினால் தாப்பா ரோடு அரசினர் தமிழ்ப்பள்ளி என்ற பெயரில் இப்பள்ளி நிறுவப்பட்டது. தாப்பா ரோடு தமிழ்ப்பள்ளிக் கட்டுமானப்பணியினைக் கல்வித் துறையின் நிதியுதவியுடன் தொடர்வண்டி துறை மேற்கொண்டது. தாப்பா ரோடு தமிழ்ப்பள்ளி 18.8 pole ( 1 pole : 25.29 sq km) பரப்பளவில் அமைக்கப்பட்டது. ஜப்பானியர் ஆட்சிக் காலத்திலும் தாப்பா ரோடு தமிழ்ப்பள்ளி தொடர்ந்து இயங்கி வந்தது.  இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான 1945 முதல் 1947 வரையிலான காலக்கட்டத்தில், தாப்பா ரோடு தமிழ்ப்பள்ளியின் கட்டிடம் அரிசிக்கிடங்காக ஆங்கிலேய அரசால் பயன்படுத்தப்பட்டது. அக்காலத்தில், தாப்பா ரோடு தேசியப்பள்ளியில் இப்பள்ளி தற்காலிகமாக இயங்கியது.

கட்டிட வரலாறு

1947-ல் மீண்டும் பழைய கட்டிடத்திலே தாப்பா ரோடு தமிழ்ப்பள்ளி செயற்படத் தொடங்கியது. 1947 -ல் தொடர்வண்டி துறையின் உதவியுடன் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான வீடுகள் கட்டப்பட்டன. 1948-ல் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளியாக அரசு முழு உதவி பெறும் பள்ளியாகத் தாப்பா ரோடு பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது.

பள்ளிக்கட்டிடம்

1960-ல் தாப்பா ரோடு தமிழ்ப்பள்ளிக்குச் சில மைல்கள் தூரம் இருந்த தாப்பா தோட்டத்தமிழ்ப்பள்ளி மூடப்பட்டது. அப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் தாப்பா ரோடு தமிழ்ப்பள்ளியில் தங்களின் கல்வியைத் தொடர்ந்தனர். ஜூலை 21, 1966 -ல் மாணவர் எண்ணிக்கை உயர்வால் ஏற்பட்ட வகுப்பறைப் பற்றாக்குறை சிக்கலைக் களைய ஆண்டு மூன்று தொடங்கி ஆறு வரையிலான மாணவர்கள் தாப்பா ரோடு இடைநிலைப்பள்ளியில் தற்காலிகமாகக் தங்கள் கல்வியைத் தொடர்ந்தனர். பள்ளிக்கான கூடுதல் கட்டிடத்தைக் கட்டுவதற்கு அப்போதைய மலேசியக்கல்வியமைச்சர் கீர் ஜொகாரி ஒப்புதல் அளித்தார்.  மூன்று ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் பள்ளிக்கான புதிய கட்டிடம் எழுப்பப்பட்டது. 5 ஜனவரி 1969-ல் கல்வி அமைச்சர் கீர் ஜொகாரி பள்ளிக்கான புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார். புதிய கட்டிடம் எழ ஒப்புதல் தந்த கல்வியமைச்சரின் முயற்சியை நினைவுகூறும் வகையில் பள்ளியின் பெயர் கீர் ஜொகாரி தமிழ்ப்பள்ளி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.1999-ல் அரசு நிதியுதவியுடன் பள்ளிச்சிற்றுண்டிச்சாலை கட்டப்பட்டது. 1992 ஆம் ஆண்டு தாப்பா நாடளுமன்ற உறுப்பினர் டத்தோ குமரன் மற்றும் பொதுமக்களின் நிதியுதவியுடன் மூன்று வகுப்பறைகள் கட்டப்பட்டன. 1992-ல் பள்ளியில் பாலர் பள்ளியும் செயற்படத் தொடங்கியது. 1999-ல் மூன்று வகுப்பறைகளுடன் கூடிய துணைக்கட்டிடம் எழுப்பப்பட்டது. 2004-ல் புதிய கணினி அறை கட்டப்பட்டது.

பள்ளித் தலைமையாசிரியர் பட்டியல்

எண் பெயர் பணியாற்றிய ஆண்டு
1.        திரு சவரிமுத்து மார்ச்சு2, 1948
2.        திரு சவாரியார் மார்ச் 3, 1948-ஜூன் 13, 1948
3.        திரு எஸ்.எம்.மைக்கல் ஜூன் 14, 1948- மார்ச் 31, 1949
4.        திரு எஸ்.குழந்தை ஏப்ரல் 1, 1949-செப்டெம்பர் 20, 1950
5.        திரு சாமுவேல் செப்டெம்பர் 29, 1950-ஜனவரி 1, 1953
6.        திரு பி.ஏ.ஆரோக்கியசாமி ஜனவரி 2,1953-ஏப்ரல் 28,1955
7.        திரு ஜே.அந்தோணி சாமி ஏப்ரல் 29, 1955-மார்ச் 16, 1962
8.        திரு எஸ். மாரிமுத்து மார்ச் 17, 1962- டிசம்பர் 31, 1965
9.        திரு வி.கருப்பையா ஜனவரி 1, 1966- ஜூன் 12, 1984
10.    திரு ஆர்.சுந்தரம் 1984-அக்டோபர் 19,1993
11.    திருமதி எஸ். ரத்தின திலகம் அக்டோபர் 19, 1993-பிப்ரவரி 19, 1994
12.    திரு என்.மாணிக்கம் பிப்ரவரி 20, 1994-மே 16, 2003
13.    திருமதி எஸ். ரத்தின திலகம் மே 17, 2003 – ஏப்ரல் 30,2017
14.    திருமதி எம்.வாசுகி மே 17, 2017 – நவம்பர் 30, 2018
15.    திரு ஜி.தியரன் டிசம்பர் 1, 2018 – ஆகஸ்டு 16, 2022
16.    திரு ஜி குமரன் செப்டம்பர் 22, 2022-

பள்ளி முகவரி

Sekolah Jenis Kebangsaan (T) Khir Johari
Tapah Road
35400, Tapah Road
Negeri Perak, Malaysia

உசாத்துணை

  • மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ், மலேசியக்கல்வி அமைச்சு, 2016
  • பள்ளி இதழ், 2023


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.