கீரன் கூட்டம்

From Tamil Wiki
Revision as of 22:47, 14 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "கீரன் கூட்டம் :கீரன் குலம். கொங்குவேளாளக் கவுண்டர்களின் உட்குழுக்களான அறுபது கூட்டங்களில் ஒன்று. சங்ககாலம் முதல் நக்கீரன், கீரனார் போன்ற பல பெயர்கள் உள்ளன. நக்கீரன் சங்கில் வள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கீரன் கூட்டம் :கீரன் குலம். கொங்குவேளாளக் கவுண்டர்களின் உட்குழுக்களான அறுபது கூட்டங்களில் ஒன்று. சங்ககாலம் முதல் நக்கீரன், கீரனார் போன்ற பல பெயர்கள் உள்ளன. நக்கீரன் சங்கில் வளையல்கள் செய்யும் குலத்தவர் என இறையனார் அகப்பொருள் கூறுகிறது. நக்கீரன் என்னும் சங்ககாலப் பெயர்களுக்கும் இப்பெயருக்குமான தொடர்பு நிறுவப்படவில்லை.

(பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்)

வரலாறு

காங்கேய நாட்டுக் கீரனூர் கீரன் குலத்தவரின் முதற்காணியாகும். நசியனூர், கோடத்தூர், கண்ணிவாடி ஆகிய பிற ஊர்கள் இவர்களின் காணி ஊர்கள்

உசாத்துணை