கிழார்ப் பெயர்பெற்றோர் புலவர் வரிசை

From Tamil Wiki
Revision as of 20:26, 22 April 2022 by Ramya (talk | contribs) (Created page with "புலவர் கா. கோவிந்தன் சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 8, கிழார்ப்பெயர் பெயர் பெற்றோர் என்ற தலைப்பில் சங்ககாலப் புலவர்களைத் தொகுத்தார். == கிழார்ப் பெயர்பெற்றோர் == எட்டுத்தொகை, பத்து...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

புலவர் கா. கோவிந்தன் சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 8, கிழார்ப்பெயர் பெயர் பெற்றோர் என்ற தலைப்பில் சங்ககாலப் புலவர்களைத் தொகுத்தார்.

கிழார்ப் பெயர்பெற்றோர்

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு பாடிய புலவர்களுள் பலருக்கு ‘கிழார்’ என்ற சிறப்புப் பெயர் இருந்தது. தொல்காப்பியத்தின் வழி கிழார் என்பது வேளாளரைக் குறிக்கும் சொல். திருத்தொண்டர் புராணம் பன்னிரெண்டாம் செய்யுளிலும் இதற்கான சான்று உள்ளது. நாற்பத்தியொரு புலவர்களை புலவர் கா. கோவிந்தன் வகைப்படுத்தினார்.

இலக்கணம்
  • தொல்காப்பியம்

ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவியும்
யாரும் சார்த்தி அவை அவை பெறுமே
...
அம்பர்கிழான் நாகன், வல்லங்கிழான் மாறன்
என்பன வேளார்க்குறியன

சான்று
  • திருத்தொண்டர் புராணம்: 12

நாடெங்கும் சோழன்முனந் தெரிந்தே ஏற்றும்
நற்குடி நாற் பத்தெண்ணா யிரத்து வந்த
கூடைக்கிழான், புரிசைக்கிழான், குலவுசீர்வெண்
குளப்பாக் கிழான் வரிசைக் குளத்து ழான்முன்
தேடுபுக ழாரிவரும் சிறந்து வாழச்
சேக்கிழார் குடியிலிந்தத் தேச முய்யப்
பாடல்புரி அருண்மொழித்தே வரும்பின் நந்தம்
பாலறா வாயரும்வந் துதித்து வாழ்ந்தார்

கிழார்ப் பெயர்பெற்ற புலவர்கள்

  • அரிசில் கிழார்
  • ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
  • ஆலத்தூர் கிழார்
  • ஆவூர் கிழார்
  • ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
  • ஆவூர் மூலங்கிழார்
  • ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்
  • இடைக்குன்றூர் கிழார்
  • உகாய்க்குடி கிழார்
  • உமட்டூர்கிழார் மகனார் பரங்கொற்றனார்
  • ஐயூர் மூலங்கிழார்
  • கருவூர் கிழார்
  • காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
  • காரி கிழார்
  • கிள்ளிமங்கலங் கிழார்
  • கிள்ளிமங்கலங் கிழார்மகனார் சோகோவனார்
  • குறுங்கோழியூர் கிழார்
  • குன்றூர்கிழார் மகனார் கண்ணத்தனார்
  • கூடலூர் கிழார்
  • கொடியூர்கிழார் மகனார் நெய்தல் தத்தனார்
  • கோவூர் கிழார்
  • கோழியூர்கிழார் மகனார் செழியனார்
  • செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்
  • துறையூர் ஓடைகிழார்
  • நல்லாவூர் கிழார்
  • நெய்தல் சாய்த்துய்த்த ஆவூர் கிழார்
  • நொச்சி நியமங்கிழார்
  • புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்
  • பெருங்குன்றூர் கிழார்
  • பொதும்பில் கிழான் வெண்கண்ணனார்
  • பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார்
  • மதுரை மருதங்கிழார் மகனார் சோகுத்தனார்
  • மதுரை மருதங்கிழார் மகனார் இளம்போத்தனார்
  • மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
  • மருங்கூர்கிழார் பெருங்கண்ண னனார்
  • மாங்குடி கிழார் மாடலூர் கிழார்
  • மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்
  • மிளைகிழான் நல்வேட்டனார்
  • வடமோதங் கிழார்
  • வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார்

உசாத்துணை

  • புலவர் கா. கோவிந்தன் – திரு நெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-8: கிழார்ப்பெயர் பெயர் பெற்றோர்]