கிறிஸ்டோபர் ஆன்றணி

From Tamil Wiki
Revision as of 13:37, 19 September 2022 by Ramya (talk | contribs) (Created page with "கிறிஸ்டோபர் ஆன்றணி (பிறப்பு: மே 1, 1973) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் எழுதியுள்ளார். == பிறப்பு, கல்வி == கிறிஸ்டோபர் ஆன்றணி மே 1, 1973-ல் கன்னியாக்குமரி மாவட்டம் வள்ளவிளை...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கிறிஸ்டோபர் ஆன்றணி (பிறப்பு: மே 1, 1973) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் எழுதியுள்ளார்.

பிறப்பு, கல்வி

கிறிஸ்டோபர் ஆன்றணி மே 1, 1973-ல் கன்னியாக்குமரி மாவட்டம் வள்ளவிளை கடற்கரை கிராமத்தில் அந்தோனி, கர்லீனாள் இணையருக்கு பிறந்தார். மார்த்தாண்டன்துறை புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். தூத்தூர் புனித யூதா கல்லூரியில் கணிதத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார். பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் கணிதத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

கிறிஸ்டோபர் ஆன்றணி கணினி மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். கிறிஸ்டோபர் ஆன்றணி செப்டம்பர் 11, 2002-ல் ஆரோக்கியமேரியை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு, மனைவியின் ஊரான, இரவிபுத்தன்துறை கடற்கரை கிராமத்திற்கு இடம்பெயர்ந்தார். பிள்ளைகள் ஃபெல்டன் கிறிஸ்டோபர், ரொனால்ட் கிறிஸ்டோபர், ரையன் கிறிஸ்டோபர், ஆரோன் கிறிஸ்டோபர். தற்போது அமெரிக்காவின் மிக்‌ஷிகன் மாகாணத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

கிறிஸ்டோபர் ஆன்றணியின் முதல் சிறுகதை, கடலாழம் 2013-ல் ஜெயமோகன் தளத்தில் வெளியானது. மீனவர்களான முக்குவர் வரலாற்றை அடிப்படையாககொண்டு 2015-ல், எழுதப்பட்ட துறைவன் நாவல் சுஜாதா விருது (2016) பெற்றது. மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தற்போது தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறார்.

நூல்கள்

நாவல்
  • துறைவன் (முக்கடல் பதிப்பகம்)
கட்டுரை
  • இனயம் துறைமுகம் (எதிர் வெளியீடு)
  • கடலுக்கு தவமிருக்கும் சிறைமீன்கள் (சேலாளி பதிப்பகம்)
  • மீன்வள மசோதா 2021 (எதிர் வெளியீடு)

உசாத்துணை