under review

கிருஷ்ணாழ்வார்: Difference between revisions

From Tamil Wiki
(Category:நாடகக் கலைஞர்கள் சேர்க்கப்பட்டது)
(Removed non-breaking space character)
Line 19: Line 19:
* [http://sevvarathai-aachchi.blogspot.com/2009/03/blog-post_3711.html கல்வெட்டுப் பாரம்பரியத்தின் பின்னணியில் (sevvarathai-aachchi.blogspot.com)]
* [http://sevvarathai-aachchi.blogspot.com/2009/03/blog-post_3711.html கல்வெட்டுப் பாரம்பரியத்தின் பின்னணியில் (sevvarathai-aachchi.blogspot.com)]
* [https://youtu.be/524j8Q_WWp4 இசைநாடக மேதை நாடகக் கவிமணி எம்.வி. கிருஷ்ணாழ்வார் | த.சிவபாலு - YouTube]
* [https://youtu.be/524j8Q_WWp4 இசைநாடக மேதை நாடகக் கவிமணி எம்.வி. கிருஷ்ணாழ்வார் | த.சிவபாலு - YouTube]
* [http://archives.thinakaran.lk/Vaaramanjari/2015/11/29/?fn=f1511292 சொல்லத்தான் நினைக்கிறேன் - கரவை தந்த கலைமாமணி  இசை நாடகமேதை | Thinakaran]
* [http://archives.thinakaran.lk/Vaaramanjari/2015/11/29/?fn=f1511292 சொல்லத்தான் நினைக்கிறேன் - கரவை தந்த கலைமாமணி இசை நாடகமேதை | Thinakaran]
* [https://www.tamilauthors.com/01/696.html][https://noolaham.net/project/76/7566/7566.pdf நாடக கவிமணி எம்.வி.கிருஷ்ணாழ்வார், தொகுப்பாசிரியர் மு.கந்தசாமி, எம்.வீ.கிருஷ்ணாழ்வார் நூற்றாண்டு விழாச் சபை, கரவெட்டி இலங்கை, 1998]

* [https://www.tamilauthors.com/01/696.html][https://noolaham.net/project/76/7566/7566.pdf][https://thaiveedu.com/publications/pdf/artists/73.pdf நாடகக் கவிமணி எம்.வீ.கிருஷ்ணாழ்வார், தெளிவத்தை ஜோசப், தாய் வீடு இதழ், மே 2012]

Revision as of 14:50, 31 December 2022

To read the article in English: Krishnalwar. ‎

கிருஷ்ணாழ்வார்

கிருஷ்ணாழ்வார் (1895 -1967) எம். வி. கிருஷ்ணாழ்வார் (மற்ற பெயர்கள்: எம்.வீ.கிருஷ்ணாழ்வார்). இலங்கையின் இடைநாடகக் கலைஞர். பாடகர், கூத்துக்கலைஞர்.

பிறப்பு கல்வி

கிருஷ்ணாழ்வாரின் இயற்பெயர் ஆழ்வார் பிள்ளை. யாழ்ப்பாணம், வடமராட்சி, கரவெட்டியைச் சேர்ந்த வீரகத்தி-இலக்குமி இணையருக்கு 1895-ல் பிறந்தார். இவர் கரவெட்டி சரஸ்வதி வித்தியாலயத்தில் எட்டாம் வகுப்புவரை வரை கல்வி கற்றார்.

தனிவாழ்க்கை

கிருஷ்ணாழ்வார் லட்சுமி அம்மையாரை மணந்தார். ஸ்ரீதேவி என ஒரு மகள். கிருஷ்ணாழ்வாரின் பேரன் யோகேஸ்வரன், பெயர்த்தி யோகேஸ்வரி புவனேஸ்வரி ஆகியோர் புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியா, கனடா நாடுகளில் வாழ்கிறார்கள்.

கலைவாழ்க்கை

கிருஷ்ணாழ்வார் தனது பதினாறாவது உடுப்பிட்டி ஆறுமுகம் அண்ணாவியாரின் நாடகக்குழுவில் சுபத்திரா கல்யாணம் நாடகத்தில் சுபத்திரை வேடம் ஏற்று நடித்தமையால் சுபத்திரை ஆழ்வார் என புகழ்பெற்றார். அரிச்சந்திரன் நாடகத்தில் சந்திரமதியாகவும் ஞானசவுந்தரியாகவும் ராஜபாட் வேடங்களிலும் நடித்துப் புகழ் பெற்றவர். இவர் ஆசுகவியாகப் பாடல்களை எழுதினார். புராண நாடகங்களில் கிருஷ்ணராக நடித்தமையால் "கிருஷ்ணாழ்வார்" எனவும் அழைக்கப்பட்டார். நினைத்ததும் பாடல் புனையும் திறமையால் ஆசுகவி என அழைக்கப்பட்டார். மிக இளம்வயதிலேயே வி.வி.வைரமுத்துவை அடையாளம் கண்டவர் என குறிப்பிடப்படுகிறது

உசாத்துணை

✅Finalised Page