கா. கைலாசநாதக் குருக்கள்

From Tamil Wiki
Revision as of 14:48, 20 April 2022 by Navingssv (talk | contribs) (Created page with "கா. கைலாசநாதக் குருக்கள் (15 ஆகஸ்ட் 1921 - 08 ஆகஸ்ட் 2000) ஆய்வாளர், எழுத்தாளர், இலங்கை யாழ்பாணத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். == பிறப்பு, கல்வி == கா. கைலாசநாதக் குருக்கள் யாழ்பாணத்தில...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கா. கைலாசநாதக் குருக்கள் (15 ஆகஸ்ட் 1921 - 08 ஆகஸ்ட் 2000) ஆய்வாளர், எழுத்தாளர், இலங்கை யாழ்பாணத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

கா. கைலாசநாதக் குருக்கள் யாழ்பாணத்தில் உள்ள நல்லூரில் 15 ஆகஸ்ட் 1921 அன்று பிறந்தார். இவரது நல்லூர் சிவஸ்ரீ கார்த்திகேயக் குருக்கள், சுந்தராம்பாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.

கைலாசநாதக் குருக்கள் தன் சமஸ்கிருத தமிழ் ஆரம்பக்கல்வியை சிவஸ்ரீ நா. சுப்பிரமணிய சிவாச்சாரியாரிடமும், தந்தை சிவஸ்ரீ கார்த்திகேயக் குருக்கள் மற்றும் சிவஸ்ரீ தியாகராஜ குருக்களிடமும் பெற்றார். நல்லூர்மங்கையர்கரசி வித்தியாசாலையில் ஆரம்பக்கல்வி பயின்றார். யாழ்பாணத்தில் உள்ள திருநெல்வேலி ஊரிலுள்ள பரமேஸ்வரா கல்லூரியில் மேற்படிப்பு பயின்றார்.

படிப்பிற்கு நடுவே வேதக்கல்வியை 1930 முதல் 1940 வரை சிவஸ்ரீ தியாகராஜ குருக்களிடமும், வைக்கம் பிரம்மஸ்ரீ சிதம்பர சாஸ்திரிகள் சுன்னாகம் பிரம்மஸ்ரீ பி.வி. சிதம்பர சாஸ்திரிகள் கோப்பாய் பிரம்மஸ்ரீ ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் ஆகியோரிடத்தில் பயின்றார்.

1941 ஆம் ஆண்டு ஆங்கிலம், கணிதம், தமிழ், வரலாறு அடங்கிய லண்டன் மெட்ரிகுலேஷன் பரிட்சையில் வென்றார். 1943 ஆம் ஆண்டு லண்டன் இண்டர்மீடியேட் கலைப் பரீட்சையில் தேறினார். பின் மீண்டும் 1943 - 44 ஆண்டுகளில் வியாகரண சிரோமணி பிரம்மஸ்ரீ தி.கே. சிதம்பரநாத சாஸ்திரிகளிடம் சமஸ்கிருந்த மொழியில் விஷேச பயிற்சி பெற்றார்.

1944 ஆம் ஆண்டு கொழும்பு இலங்கைப் பல்கலைக்கழகத்தில் உயர் படிப்பிற்காக அனுமதிப் பெற்றார். 1945 ஆம் ஆண்டு சம்ஸ்கிருதம், தமிழ், பாளி மொழிகள் அடங்கிய முதலாண்டு கலைத்தேர்வு எழுதி வெற்றிப் பெற்றார்.

தனி வாழ்க்கை

கைலாசநாதக் குருக்கள் 04 பிப்ரவரி 1940 அன்று சிவஸ்ரீ சாம்பசிவக் குருக்கள், சுந்தரம்பா தம்பதியரின் மகளான திரிபுரசுந்தரியை மணந்தார்.