கார்த்திக் பாலசுப்ரமணியன்

From Tamil Wiki
எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியன்


கார்த்திக் பாலசுப்பிரமணியன் ஓரு தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், நாவல், விமர்சன கட்டுரைகள் என தொடர்ந்து எழுதி வருகிறார். குறிப்பாக அவர் பணியாற்றும் மென்பொருள் நிறுவனங்களின் பின்புலத்தில் அழ்பணி சார்ந்து நமக்கிருக்கும் பொது பிம்பங்களை கேள்விக்குட்படுத்தும் வகையிலான இயல்புவாத கதைகளை உளவியல் கோணத்திலிருந்து எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

கார்த்திக் பாலசுப்பிரமணியன் மே 5, 1987 அன்று ராஜபாளையத்தில் பாலசுப்பிரமணியன் - காளீஸ்வரி இணையருக்கு மகனாக பிறந்தார். இராஜபாளையம் பி.ஏ.சி.எம். மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் பொறியியல் இளநிலை படிப்பை கோவை அம்ரிதா பொறியியல் கல்லூரியில் பயின்றார்.

கோவை அம்ரிதா பொறியியல் கல்லூரியில் தொடர்ந்தார்.

தனி வாழ்க்கை

பிப்ரவரி 22, 2013 திவ்யா ராஜேந்திரனை மணந்தார். வியன் என்றொரு மகன் உள்ளார். தற்போது சென்னையில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இலக்கிய பங்களிப்பு

எழுத்தாளர் அசோகமித்திரனை தனது ஆதர்சமாக கொண்ட கார்த்திக் பாலசுப்ரமணியனின் முதல் சிறுகதை 'பொதுப் புத்தி' உயிரோசை இணைய இதழில் வெளிவந்தது.

2017 ஆம் ஆண்டு முதல் சிறுகதை தொகுப்பான டொரினா வெளிவந்தது. இவருடைய நாவலான 'நட்சத்திரவாசிகள்' மென்பொருள் துறையில் உள்ள சிக்கல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. நமக்கு பொதுவாக தென்படும் ஒளிமிகுந்த பக்கத்திற்கு அப்பால் உள்ள அதன் இருண்ட பக்கங்களை நம்பகமான பாத்திர சித்தரிப்புகள் கொண்டு பேசியதால் வாசகர் கவனத்தைப் பெற்றது. 'இரு கோப்பைகள்' 'லிண்டா தாமஸ்' போன்ற அயல் நாட்டு கதைக்களங்களை கொண்ட கதைகள் கவனம் பெற்றன.

விருதுகள்/ பரிசுகள்

  • டொரினா - க.சீ.சிவக்குமார் நினைவு சிறுகதை விருது
  • நட்சத்திரவாசிகள் - வாசகசாலை சிறந்த நாவல் விருது - 2020
  • க.நா.சு சிறுகதை பரிசு 2021

நூல்பட்டியல்

1. டொரினா - சிறுகதைத் தொகுப்பு - 2017 - யாவரும்

2. நட்சத்திரவாசிகள் - நாவல் - 2019 - காலச்சுவடு

3. ஒளிரும் பச்சைக் கண்கள் - சிறுகதைத் தொகுப்பு - 2021 - காலச்சுவடு

உசா துணை

கார்த்திக் பாலசுப்ரமணியனின் தளம்

வெளி இணைப்பு

விகடன் படிப்பறையில் நட்சத்திரவாசிகள் குறித்து