under review

காரைக்கால் சோணாசி பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected text format issues)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Karaikal Sonasi Pillai|Title of target article=Karaikal Sonasi Pillai}}

காரைக்கால் சோணாசி பிள்ளை (சோமசுந்தரம்) (1888 - பிப்ரவரி 21, 1967) ஒரு தவில் கலைஞர்.

== இளமை, கல்வி ==
== இளமை, கல்வி ==
தில்லையாடி என்னும் ஊரில் வாழ்ந்த தவில்காரர் நடேச பிள்ளை - குப்பம்மாள் இணையருக்கு 1888-ஆம் ஆண்டு சோமசுந்தரம்  என்ற சோணாசி பிள்ளை பிறந்தார்.  

சோணாசி பிள்ளை, தில்லையாடி ஸ்ரீநிவாஸ பிள்ளையிடம் ஒன்பதாண்டுகள் குருகுலவாசமாக இருந்து தவில் கற்றார்.

== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
சோணாசி பிள்ளைக்கு விஸ்வநாத பிள்ளை என்ற தம்பியும்,  குஞ்சம்மாள் (கணவர்: தவில் கலைஞர் திருமாகாளம் ராஜப்பா பிள்ளை), பட்டம்மாள் (கணவர்: நாதஸ்வரக் கலைஞர் கூறைநாடு முத்தையா பிள்ளை), வாலாம்பாள் (கணவர்: திருக்கொட்டாவரம் நடேசப் பிள்ளை) என மூன்று தங்கைகளும் இருந்தனர்.  

திருவாழப்புத்தூர் சொக்கலிங்கம் பிள்ளை என்னும் தவில்கலைஞரின் தங்கை ரத்தினம்மாள் என்பவரை சோணாசி பிள்ளை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர். மகன் வடிவேல் ஒரு தவில்கலைஞராக இருந்து இருபத்துமூன்று வயதில் காலமானார். மகள் மாரிமுத்தம்மாள் தவில்கலைஞர் பொறையார் வேணுகோபால பிள்ளையின் முதல் மனைவி.

== இசைப்பணி ==
== இசைப்பணி ==
இடக்கரத்தால் வலந்தலையை முழக்கும் சோணாசி பிள்ளையின் வாசிப்பு புகழ் பெற்றது. சோணாசி பிள்ளை பல நாதஸ்வரக் கலைஞர்களுக்கு வாசித்தாலும் இறைக் கைங்கரியம் முக்கியம் என எண்ணியவர். அதனால் காரைக்கோவிற்பத்து ஸ்ரீ பார்வதீசர் ஆலய சேவகத்தை ஏற்று காரைக்காலில் குடியேறினார். அறுபத்து நான்கு வயதில் பார்வதீசர் ஆலயத்தில் இருந்து விலகி, காரைக்கால் சிவன் கோவில், பெருமாள் கோவில் இரண்டிலும் தவில் கைங்கரியம் செய்தார்.

திருச்சேறை முத்துக்கிருஷ்ண பிள்ளை முதல்முறை யாழ்ப்பாணத்தில் வாசிக்கச் சென்றபோது சோணாசி பிள்ளைதான் தவில் வாசிக்க உடன் சென்றவர். தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் வாசித்துப் புகழ் பெற்றவர்.

====== உடன் வாசித்த கலைஞர்கள் ======
====== உடன் வாசித்த கலைஞர்கள் ======
காரைக்கால் சோணாசி பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்கு தவில் வாசித்திருக்கிறார்:

* திருநள்ளாறு வீராஸ்வாமி பிள்ளை
* திருநள்ளாறு வீராஸ்வாமி பிள்ளை
* திருப்பாம்புரம் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை

Line 25: Line 17:
* [[இஞ்சிக்குடி பிச்சைக்கண்ணுப் பிள்ளை]]

* [[திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை]]
* [[திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை]]
====== மாணவர்கள் ======
====== மாணவர்கள் ======
காரைக்கால் சோணாசி பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

* காரைக்கால் வைத்தியநாத பிள்ளை
* காரைக்கால் வைத்தியநாத பிள்ளை
* திருவேட்டக்குடி குஞ்சுப் பிள்ளை
* திருவேட்டக்குடி குஞ்சுப் பிள்ளை
Line 34: Line 24:
* பொறையார் வேணுகோபால் பிள்ளை (மருமகன்)
* பொறையார் வேணுகோபால் பிள்ளை (மருமகன்)
* ஸ்ரீதரன் (கேரளம்)
* ஸ்ரீதரன் (கேரளம்)
== மறைவு ==
== மறைவு ==
காரைக்கால் சோணாசி பிள்ளை பிப்ரவரி 21, 1967 அன்று தன் எழுபத்தொன்பதாம் வயதில் மறைந்தார்.

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013

{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]]
[[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]]

Revision as of 14:39, 3 July 2023

To read the article in English: Karaikal Sonasi Pillai. ‎

காரைக்கால் சோணாசி பிள்ளை (சோமசுந்தரம்) (1888 - பிப்ரவரி 21, 1967) ஒரு தவில் கலைஞர்.

இளமை, கல்வி

தில்லையாடி என்னும் ஊரில் வாழ்ந்த தவில்காரர் நடேச பிள்ளை - குப்பம்மாள் இணையருக்கு 1888-ஆம் ஆண்டு சோமசுந்தரம் என்ற சோணாசி பிள்ளை பிறந்தார். சோணாசி பிள்ளை, தில்லையாடி ஸ்ரீநிவாஸ பிள்ளையிடம் ஒன்பதாண்டுகள் குருகுலவாசமாக இருந்து தவில் கற்றார்.

தனிவாழ்க்கை

சோணாசி பிள்ளைக்கு விஸ்வநாத பிள்ளை என்ற தம்பியும், குஞ்சம்மாள் (கணவர்: தவில் கலைஞர் திருமாகாளம் ராஜப்பா பிள்ளை), பட்டம்மாள் (கணவர்: நாதஸ்வரக் கலைஞர் கூறைநாடு முத்தையா பிள்ளை), வாலாம்பாள் (கணவர்: திருக்கொட்டாவரம் நடேசப் பிள்ளை) என மூன்று தங்கைகளும் இருந்தனர். திருவாழப்புத்தூர் சொக்கலிங்கம் பிள்ளை என்னும் தவில்கலைஞரின் தங்கை ரத்தினம்மாள் என்பவரை சோணாசி பிள்ளை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர். மகன் வடிவேல் ஒரு தவில்கலைஞராக இருந்து இருபத்துமூன்று வயதில் காலமானார். மகள் மாரிமுத்தம்மாள் தவில்கலைஞர் பொறையார் வேணுகோபால பிள்ளையின் முதல் மனைவி.

இசைப்பணி

இடக்கரத்தால் வலந்தலையை முழக்கும் சோணாசி பிள்ளையின் வாசிப்பு புகழ் பெற்றது. சோணாசி பிள்ளை பல நாதஸ்வரக் கலைஞர்களுக்கு வாசித்தாலும் இறைக் கைங்கரியம் முக்கியம் என எண்ணியவர். அதனால் காரைக்கோவிற்பத்து ஸ்ரீ பார்வதீசர் ஆலய சேவகத்தை ஏற்று காரைக்காலில் குடியேறினார். அறுபத்து நான்கு வயதில் பார்வதீசர் ஆலயத்தில் இருந்து விலகி, காரைக்கால் சிவன் கோவில், பெருமாள் கோவில் இரண்டிலும் தவில் கைங்கரியம் செய்தார். திருச்சேறை முத்துக்கிருஷ்ண பிள்ளை முதல்முறை யாழ்ப்பாணத்தில் வாசிக்கச் சென்றபோது சோணாசி பிள்ளைதான் தவில் வாசிக்க உடன் சென்றவர். தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் வாசித்துப் புகழ் பெற்றவர்.

உடன் வாசித்த கலைஞர்கள்

காரைக்கால் சோணாசி பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்கு தவில் வாசித்திருக்கிறார்:

மாணவர்கள்

காரைக்கால் சோணாசி பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

  • காரைக்கால் வைத்தியநாத பிள்ளை
  • திருவேட்டக்குடி குஞ்சுப் பிள்ளை
  • விஸ்வநாத பிள்ளை (தம்பி)
  • பொறையார் வேணுகோபால் பிள்ளை (மருமகன்)
  • ஸ்ரீதரன் (கேரளம்)

மறைவு

காரைக்கால் சோணாசி பிள்ளை பிப்ரவரி 21, 1967 அன்று தன் எழுபத்தொன்பதாம் வயதில் மறைந்தார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013

✅Finalised Page