second review completed

காதற்பெருமையும் கடுங்குடிச் சிறுமையும் அல்லது கிருபாம்பிகை

From Tamil Wiki

காதற்பெருமையும் கடுங்குடிச் சிறுமையும் அல்லது கிருபாம்பிகை (1912) தமிழில் மது ஒழிப்பு நோக்கத்துடன் எழுதப்பட்ட முதல் நாவல். இதை சோ.ரா. ஸ்ரீனிவாச பிள்ளை எழுதினார்.

நூலாசிரியர்

சோ.ரா. ஸ்ரீனிவாசபிள்ளை காங்கிரஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவர்

கதைச்சுருக்கம்

வித்யாசாகரனின் மனைவி கிருபாம்பிகை. இவர்கள் காதலித்து மணம் புரிந்துகொண்டவர்கள். வித்யாசாகரன் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி சீரழிகிறான். மனம் உடைந்த கிருபாம்பிகை தற்கொலை செய்துகொள்ள முயல்கிறாள். ஆனால் பின்னர் மனம் தேறி வெவ்வேறு கோயில்களுக்குச் சென்று வேண்டிக்கொண்டும் தன் காதலின் வலிமையாலும் கணவனை மீட்கிறாள்.

இலக்கிய இடம்

தமிழில் மதுவிலக்கு கோரி எழுதப்பட்ட முதல் நாவல். இந்நாவல் எழுதப்பட்டு மேலும் பத்தாண்டுகளுக்குப் பின்னரே தமிழகத்தில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் ஆரம்பித்தது. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியின் கள்ளுக்கடை ஏலம் விடும் முறையால் மக்கள் குடித்து அழிகிறார்கள் என்னும் எண்ணமும் அதற்கு எதிரான கருத்துக்களும் அன்றே காங்கிரசுக்குள் இருந்தன. இந்நாவல் பின்னர் வெளிவந்த திக்கற்ற பார்வதி (சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்) தியாகு (சிவசங்கரி) போன்ற மதுவிலக்கு நாவல்களுக்கு முன்னோடியானது.



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.