under review

காசியபன்

From Tamil Wiki
Revision as of 20:24, 17 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reviewed by Je)
காசியபன்

காசியபன் (பி.குளத்து ஐயர்) (1920-2008) தமிழில் கவிதைகளும், அசடு என்னும் நாவலும் எழுதிய எழுத்தாளர். திருவனந்தபுரத்தில் இருந்த இலக்கியக்குழுவில் உருவான படைப்பாளி.

பிறப்பு, கல்வி

காசியபன் 1920-ல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். தத்துவத்தில் பி.ஏ.படித்தார். கேரளப் பல்கலைகழகத்தி தமிழை இரண்டாமொழியாக எடுத்து படித்தார். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றினார்.

இலக்கிய இடம்

காசியபன் குறைத்துச் சொல்லுதல் என்னும் அழகியல் பாணியை கடைப்பிடித்தவர். உணர்ச்சிகளோ காட்சிகளோ எவ்வளவு சுருக்கமாகச் சொல்லப்பட முடியுமோ அவ்வளவு சுருக்கமாகச் சொல்ல முயன்றவர். இவருடைய அசடு தமிழின் நல்ல நாவல்களில் ஒன்று என்று சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார்.

படைப்புகள்

  • அசடு நாவல் -1978
  • கிரகங்கள் நாவல் - 1980
  • வீழ்ந்தவர்கள்
  • பேசாத மரங்கள் கவிதை
  • கோணல் மரம் சிறுகதைகள்புகள்


✅Finalised Page