under review

காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
(One intermediate revision by one other user not shown)
Line 1: Line 1:
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி சிலாங்கூர் மாநிலத்தில், பெட்டாலிங் பெர்டானா மாவட்டத்தில் உள்ளது. இப்பள்ளி பூஞ்சோங் நகரில் அமைந்துள்ளது. காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாகும். இப்பள்ளியின் மலேசியக் கல்வி அமைச்சின் பதிவெண் BBD8451.
காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில், பெட்டாலிங் பெர்டானா மாவட்டத்தில் உள்ளது. இப்பள்ளி பூஞ்சோங் நகரில் அமைந்துள்ளது. அரசு உதவி பெறும்   இப்பள்ளியின் மலேசியக் கல்வி அமைச்சின் பதிவெண் BBD8451.
[[File:Sjkt castlefield edited.jpg|thumb|காசல்பீல்டு பள்ளிச்சின்னம்]]
[[File:Sjkt castlefield edited.jpg|thumb|காசல்பீல்டு பள்ளிச்சின்னம்]]


Line 25: Line 25:
க.முருகன், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் (2015)
க.முருகன், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் (2015)


{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:மலேசிய பண்பாடு]]
[[Category:மலேசிய பண்பாடு]]

Revision as of 20:00, 6 May 2024

காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில், பெட்டாலிங் பெர்டானா மாவட்டத்தில் உள்ளது. இப்பள்ளி பூஞ்சோங் நகரில் அமைந்துள்ளது. அரசு உதவி பெறும் இப்பள்ளியின் மலேசியக் கல்வி அமைச்சின் பதிவெண் BBD8451.

காசல்பீல்டு பள்ளிச்சின்னம்

வரலாறு

1928-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி முதலில் வாகனப் பட்டறையில் செயல்பட்டது.  60 மாணவர்களையும் 3 ஆசிரியர்களையும் கொண்டு இப்பள்ளி தொடங்கியது. காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி 1930-லிருந்து 1940-ம் ஆண்டு வரை 300 மாணவர்களைக் கொண்டு செயல்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் 1950-ம் ஆண்டு, லோட் 3191 என்ற நிலத்துடன் 22 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கிடைக்கப்பெற்றது. 1970 -ம் ஆண்டு வாக்கில் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியில் மேலும் ஓர் இணைக்கட்டிடம் எழுப்பப்பட்டது. 1988-ம் ஆண்டு இப்பள்ளி காசல்பீல்டு தோட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இவ்விடமாற்றம் சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகா ஆணையின் கீழ் நடந்தது. தோட்ட நிர்வாகத்தால் கொடுக்கப்பட்ட பழைய மருத்துவமனைக் கட்டிடத்தில் பள்ளி உருமாற்றம் கண்டு செயல்படத்தொடங்கியது.

புதிய கட்டிடம்

பூச்சோங் நகரில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியின் போது  நெடுஞ்சாலை விரிவாக்க நிறுவனம் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியின் நிலத்தைப் பயன்படுத்தியதால், பள்ளிக்கு நஷ்ட ஈடாகப் புதிய கட்டிடத்தைக் கட்டித்தர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவ்வேளையில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் ம.இகா தேசிய தலைவராகவும் இருந்த டத்தோ ச.சாமிவேலுவின் ஆதரவோடு நெடுஞ்சாலை விரிவாக்க நிறுவனத்தினர் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளிக்குப் புதிய கட்டிடம் கட்டித்தரச் சம்மதித்தனர். 2004-ம் ஆண்டு புதிய மூன்று மாடி கட்டிடம் எழுப்பப்பட்டது. போதிய அடிப்படை வசதிகளோடும் ஒரு சிற்றுண்டிச்சாலையோடும் இப்பள்ளிக் கட்டிடம் நேர்த்தியாகக் கட்டப்பட்டது. தொடர்ந்து 2011-ம் ஆண்டு கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் பாலர் பள்ளி ஒன்று திறக்கப்பட்டது.

பள்ளி இட மாற்றச் சர்ச்சை

பூஞ்சோங் நகரின் நெடுஞ்சாலைக்கு மிக அருகில் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளிக் கட்டிடம் அமைந்துள்ளதால்  அதிக வாகனங்களின் இரைச்சல்,  கல்வி கற்கும் சூழலுக்கு இடையூறாக இருப்பதால், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பள்ளி வாரியமும் இணைந்து பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றப் போராடினர்.  இதனால் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம் கிடைத்தது. வழங்கப்பட்ட நிலத்தில் புதிய கட்டிடம் எழுப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  இவ்வேளையில் புதிய கட்டிடம் தொடர்பான பல சர்ச்சைகள் எழுந்தன. அப்போது சுகாதாரத் துணை அமைச்சராக  இருந்த டத்தோ ஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம் அவர்கள் புதிய கட்டிடத்திற்கான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் 2 கோடி செலவில் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளிக் கட்டிடம் புதிய இடத்தில் எழும் எனவும் தெரிவித்தார்.

இன்றைய நிலை

காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி

இன்றளவும் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி நெடுஞ்சாலையின் அருகிலேதான் செயல்பட்டு வருகின்றது. காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி புதிய இடத்திற்கு  இடம்பெயரும் என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் தொடர்ந்து தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவருகின்றனர்.

பள்ளி முகவரி

SJK T CASTLEFIELD
BATU 11 3/4,
47100 PUCHONG,
SELANGOR DARUL EHSAN

உசாத்துணை

க.முருகன், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் (2015)


✅Finalised Page