கவிமாலை

From Tamil Wiki
Revision as of 13:52, 8 September 2022 by Latha (talk | contribs) (Created page with "'''கவிமாலை''' கவிமாலை என்னும் தமிழ் இலக்கிய அமைப்பு, சிங்கப்பூரில் கவிதை வழி தமிழ் வளர்ப்பதையும் தமிழ்க் கவிஞர்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு, 2000ஆம் ஆண்டில் கவியரசு கண்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கவிமாலை

கவிமாலை என்னும் தமிழ் இலக்கிய அமைப்பு, சிங்கப்பூரில் கவிதை வழி தமிழ் வளர்ப்பதையும் தமிழ்க் கவிஞர்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு, 2000ஆம் ஆண்டில் கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளாகிய 24 ஜூன் அன்று தொடங்கப்பட்டது. பிச்சினிக்காடு இளங்கோவால் தொடங்கப்பட்டது.


பிறகு கவிதைக்காகக் கவிஞர்களே நடத்தும் அமைப்பாக மாறியது. கவிதை ஆர்வமுடையவர்களை ஒன்றிணைக்கும் விதமாக மாதாந்திரச் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மரபுக்கவிதை, நவீன கவிதை உட்பட அனைத்துக் கவிதை வடிவங்களுக்கும் இடமளிக்கிறது. வளர் தமிழ் இயக்கமும், தேசிய நூலக வாரியமும் நடத்திவரும் முக்கிய தமிழ்மொழி சார்ந்த திட்டங்களில் பங்களிக்கிறது.

கவிமாலையின் பல தமிழ் வெளியீடுகள் ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளிவந்துள்ளன. தங்கமுனை விருதுபெற்ற சீன, மலாய், ஆங்கிலக் கவிதைகள் ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்ற தொடராகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிப்பதிவுடன் காணொளிகளாக வெளியிடப்பட்டன. அன்றாடம் ஒரு தமிழ்க் கவிதையை, 2019 முதல், சமூக ஊடகக் குழுக்களில் பகிர்ந்துவருவது முக்கியமான மற்றொரு பங்களிப்பு. இளையரைக் கவிதையின்பால் ஈர்க்கும் முயற்சியாக 2019இல் ‘விதைகள்’ என்னும் மாணவரணி தொடங்கப்பட்டது. தொழில்நுட்ப உதவியுடன் மாணவர்களுக்காக மாணவர்களே வடிவமைக்கும் நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொழில்நுட்பக் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்காகக் கவிதைப் பயிலரங்குடன் கவிதை, மொழிபெயர்ப்புப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

கவிமாலை  வழங்கிவரும் முக்கிய விருதுகள், பரிசுகள்:

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்திற்குப் பணியாற்றிய சான்றோருக்கு 2003 முதல் ஆண்டுதோறும் இலக்கியக் கணையாழி விருது; சிங்கப்பூரில் வெளியிடப்படும் சிறந்த கவிதைப் புத்தகத்துக்கு 2009 முதல் ஆண்டுதோறும்  தங்கப்பதக்கம் விருது; திங்கள்தோறும் நிகழும் போட்டிகளில் பங்கெடுக்கும் சிறந்த இளங்கவிஞருக்கு 2010 முதல் தங்கமுத்திரை விருது


மாதாந்திரச் சந்திப்புகள்

2000ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை தேசிய நூலக வாரியத்தில் மாதாந்திரச் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.  இதுவரையில் 266 மாதாந்திரச் சந்திப்புகள் நடந்தேறியுள்ளன.   மாதாந்திரக் கவிதைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.    சமூக ஊடகங்களில் போட்டிகள் நடத்துவதோடு நாள்தோறும் ஒரு கவிதையைப் பகிர்ந்து வாசிப்பை ஊக்குவிக்கிறது. சிங்கப்பூர் தமிழ் மொழி மாதம் முழுவதும் முப்பது நாட்களும் மின்னிலக்க காணொளி படைப்புகள், வலையுரைகள் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறது.  சிங்கப்பூரின் மூத்த படைப்பாளர்கள் முப்பது பேரின் வரலாறும் வரிகளும், சிற்றிலக்கிய வலையுரைகள் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. 


மாணவர்களுக்கான பரிசுகள்

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கவிதைப் போட்டி, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான கவிதை சொல்லும் போட்டி, மொழிபெயர்ப்புப் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.


கவிமாலையின் கணையாழி இலக்கிய விருது

  சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்திற்கும் மொழி வளர்ச்சிக்கும் தொடர்ந்து தொண்டாற்றிய சிறந்த இலக்கியப் படைப்பாளிக்கு  கணையாழி இலக்கிய விருது கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது  .

ஆண்டுதோறும் கவிமாலை அமைப்பின் தேர்வுக்குழு விருதுக்குரியவரைத் தேர்வு செய்கிறது. விருதாளரின் மொழிசார்ந்த பட்டறிவு, படைப்பிலக்கியப் பங்களிப்பு,  தமிழ் சார்ந்த பிற செயற்பாடுகளின் அடிப்படையில்  விருதுக்குரியவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இவ்விருது ஒரு சவரன் தங்கக் கணையாழியுடன்(மோதிரம்) சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது

கணையாழி விருது பெற்றவர்கள்

2003   திரு. பி.கிருஷ்ணன்      

2004   வெண்பாச் சிற்பி கவிஞர் இக்குவனம்    

2005   திரு. ஜே.எம்.சாலி          

2006   திரு. பா.கேசவன் (சிங்கப்பூர் சித்தார்த்தன்)   

2007   திரு. பி.பி.காந்தம்         

2008   திரு.மு.தங்கராசன்       

2009   கவிஞர் பெ.திருவேங்கடம்    

2010   திரு. ஏ.பி.ராமன் 

2011   திரு. வை. சுதர்மன்       

2012   கவிஞரேறு திரு. அமலதாசன்          

2013   எழுத்தாளர் இராம.கண்ணபிரான்

2014   முனைவர். பேராசிரியர் சுப. திண்ணப்பன்     

2015   திரு. எஸ்.எஸ். சர்மா    

2016   திரு. பால பாஸ்கரன்   

2017   கவிஞர் பாத்தேறல் இளமாறன்      

2018   கவிஞர் பாத்தூறல் முத்துமாணிக்கம்     

2019   கவிஞர் பாத்தென்றல் முருகடியான்

2020   விருதாளர் இராம்.நாராயணசாமி

2021   எழுத்தாளர் பொன் சுந்தரராசு

2022   தமிழாசிரியர் சி.சாமிக்கண்ணு


தங்க முத்திரை விருது


வளர்ந்துவரும் இளங்கவிஞருக்கான தங்கமுத்திரை விருது  கடந்த 2010-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அரை சவரன் தங்கக் காசுடன் சான்றிதழும் இவ்விருதுடன் வழங்கப்படுகிறது. 


தங்க முத்திரை விருது பெற்றவர்கள்

2010   லலிதா சுந்தர்      

2011   பனசை நடராசன்         

2012   பீஷான் கலா       

2013   சபாமுத்து நடராசன்    

2014   தாயுமானவன் மதிக்குமார்   

2015   ராஜு ரமேஷ்       

2016   தாம் சண்முகம்  

2017   காசிநாதன் சுதா

2018   பாலமுருகன்       

2019   ஜோசப் சேவியர்

2020   அ.பிரபாதேவி     

2021   அஷ்ரப் அலி

2022   இரா.அருள்ராஜ்

தங்கப்பதக்க விருது

சிங்கப்பூரின் சிறந்த கவிதை நூலுக்கான தங்கப் பதக்க விருது  2009-ம் ஆண்டிலிருந்து  வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது சிங்கப்பூரில் ஆண்டுதோறும்  வெளியிடப்படும் கவிதை நூல்களுள், சிறந்ததாகத் தேர்வு செய்யப்படும் நூலின் ஆசிரியருக்கு வழங்கப்படுகிறது;

கவிமாலை நிர்வாகிகளால் நியமிக்கப்படும் தேர்வுக்குழுவில் சிங்கப்பூரைச் சேர்ந்த நடுவர் ஒருவரும், இரண்டு வெவ்வேறு நாட்டின்  நடுவர்கள் இருவருமாக மூவரின் தேர்வுக்குட்பட்டு வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார்.

வெற்றியாளருக்கு இரண்டு சவரன் தங்கப்பதக்கமும் சான்றிதழும் வழங்கப்படுகிறது

சிறந்த கவிதை நூலுக்கான கவிமாலையின் தங்கப்பதக்க விருது பெற்றவர்கள்

2009   பிச்சினிக்காடு இளங்கோ    

2011   மு. தங்கராசன்   

2012   பா.திருமுருகன்  

2013   அ.கி.வரதராசன் 

2014   மாதங்கி     

2015   பார்வதி பூபாலன்          

2016   மலர்விழி இளங்கோவன்        

2017   முத்துப்பேட்டை மாறன்         

2018   சி.கருணாகரசு   

2019   அ. இன்பா

2021  க.பாலமுருகன்


கவிமாலை சார்பில் வெளியிடப்பட்ட நூல்கள்

            நமது கவிமாலை கடந்த காலங்களில் பல்வேறு நூல்வெளியீடுகள், இசைவட்டு வெளியீடுகள் ஆகியவற்றை நடத்தி, அவற்றை வெளியிடும் கவிஞர்களையும் படைப்பாளிகளையும் ஊக்கப்படுத்தி வருகிறது..  இலக்கிய படைப்புகளை வெளியிட்டும், வெளியீடுகளுக்கு கவிமாலை தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கவிமாலையில் மாதம்தோறும் படைக்கப்படும் கவிதைகளில் சிறந்த கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு, பங்குபெறும் அனைத்து கவிஞர்களின் கவிதைகளும் இடம்பெறும் வண்ணம் நூலாகத் தொகுக்கப்பட்டு ஆண்டுதோறும் கவிமாலை கவிதை தொகுப்பு வெளியிடப்படுகிறது.


1          2003   க. து. மு. இக்பால்                        காகிதவாசம்

2          2003   மா . அன்பழகன்             ஒன்றில் ஒன்று

3          2003   மா . அன்பழகன்             இப்படிக்குநான்

4          2003   வை. சுதர்மன்                              தணியாத தாகங்கள்

5          2004   சி. கருணாகரசு                           தேடலை சுவாசி

6          2004   பிச்சினிக்காடு இளங்கோ     உயிர்க்குடை

7          2004   பிச்சினிக்காடு இளங்கோ     இரவின் நரை

8          2005   க. து. மு. இக்பால்     வானவர்கள் மண்ணில் இருக்கிறார்கள்

9          2005   ந . வீ .  விசயபாரதி                    நிழல்மடி

10        2005   பிச்சினிக்காடு இளங்கோ     முதலோசை

11        2005   பிச்சினிக்காடு இளங்கோ     பூமகள்

12        2005   பிச்சினிக்காடு இளங்கோ     தலைமனம்

13        2005   பிச்சினிக்காடு இளங்கோ     அதன்பேர் அழகு

14        2005   பிச்சினிக்காடு இளங்கோ     மழை விழுந்த நேரம்

15        2005   மா . அன்பழகன்             விடியல் விளக்குகள்

16        2006   ந. வீ. விசயபாரதி                       திரவியதேசம்

17        2006   மா . அன்பழகன்             உடன்படுசொல்

18        2007   மா . அன்பழகன்             இன்னும் கேட்கிற சத்தம்

19        2008   ந . வீ .  சத்தியமூர்த்தி                தூரத்து மின்னல் 

20        2008   பிச்சினிக்காடு இளங்கோ     காதல்தீ

21        2008   மலர்விழி இளங்கோவன்         கருவறைப்பூக்கள்

22        2008   பிச்சினிக்காடு இளங்கோ     அரிநெல்

23        2008   கவிமாலை                                   கூடி வாழ்த்தும் குயில்கள்

24        2009   மா . அன்பழகன்             Bubble of feeling

25        2009   மா . அன்பழகன்             ஆயபுலம்

26        2009   மா . அன்பழகன்             என்பா நூறு

27        2009   கவிமாலை                                   பொன்மாலை பூக்கள்

28        2010   நூர்ஜஹான் சுலைமான்         உயிர்நிலவு

29        2010   மா . அன்பழகன்             என் வானம் நான் மேகம்

30        2010   ந. வீ. விசயபாரதி                       பூட்டுகள்

31        2010   ந. வீ. விசயபாரதி                       புலமைக்கு மரியாதை

32        2010   ந . வீ. விசாயபாரதி                    பூக்கள் உடையும் ஓசை

33        2010   கி. கோவிந்தராசு                        வேர்களின் வியர்வை

34        2011   கவிமாலை                                   பளிங்கு மொட்டு

35        2011   கோ. அருண்முல்லை                பொய்யா நெறி

36        2011   தியாக ரமேஷ்                              நினைவுப் பருக்கைகள்

37        2011   ந . வீ .  சத்தியமூர்த்தி     சிந்தைகவர்ந்த சிவனடியார்கள்

38        2011   பா. திருமுருகன் ஊதாங்கோலும்  ஒருதுண்டு நெருப்பும்

39        2011   மா . அன்பழகன்             BEYOND THE RELAM

40        2012   கவிமாலை                                   ஒருதுளி கடல்

41        2012   கோ. கண்ணன்                           கண்கொத்திப் பறவை

42        2012   நவநீதம் ரமேஷ்                          மௌன மொழிகள்

43        2012   பால குமரேசன்                           முகங்கள்

44        2012   பிச்சினிக்காடு இளங்கோ     அந்த நான் இல்லை நான்

45        2012   பூச்சோங்  சேகர்                         நண்பன்

46        2012   மா . அன்பழகன்             கவித் தொகை

47        2012   முத்துக்குமார்                             பக்திப் பாடல்கள்

48        2013   ஆ . உமாபதி                                 விழிகள் சுமந்த கனவுகள்

49        2013   கவிமாலை                                   கதவு திறந்தது

50        2013   கி. கோவிந்தராசு                       மனவெளிப் பூக்கள்

51        2013   கி. கோவிந்தராசு                        களமாடிய சொற்கள்

52        2013   சி. கருணாகரசு                           நீ வைத்த மருதாணி

53        2013   ந. வீ. விசயபாரதி                       வால் முளைத்த காதுகள்

54        2013   ந. வீ. விசயபாரதி                      தனி வழி

55        2013   மா . அன்பழகன்             திரைஅலையில் ஓர் இலை

56        2013   முனைவர் ஆறுமுகம்               தாகம்

57        2014   கவிமாலை                                     மீண்டும் ஒருமுறை

58        2014   கீழை அ. கதிர்வேல்                   நகைச்சுவை நானூறு

59        2014   தவமணி                                         எளிய  தமிழ் இலக்கணம்

60        2014   பார்வதி பூபாலன்                       அருள் மலர்கள்

61        2014   பார்வதி பூபாலன்                       தமிழ் உலா

62        2014   உ. செல்வராசு      கல்வியில் சிறந்து கலங்கரைவிளக்காய் மின்னிடு

63        2014   ந. வீ. சத்தியமூர்த்தி                   ஏணிப்படிகள்

64        2014   ந. வீ. சத்தியமூர்த்தி                   பார்வை “கள்”

65        2014   தமிழ்மதி                                        ஒரு துளி மழை

66        2014   தமிழ் கிறுக்கன்                          முருகன் காவடிச் சிந்து

67        2014   கோ. அருண்முல்லை                நாத்திகன் வேள்வி

68        2014   தியாக ரமேஷ்                              மரப்பாச்சி பொம்மைகள்

69        2015   கவிமாலை                                   இன்னும் கொஞ்சம் வெட்கம்

70        2015   கவிமாலை                                   நாடும் நாயகனும்

71        2015   முனைவர் மு.  இளங்கோவன்           கு.சுந்தரேசனார் ஆவணப் படம்

72        2016   எல்ல கிருஷ்ணமூர்த்தி            பாமரை

73        2016   ஏ . பி. இராமன்                             ஏ . பி. இராமன் சிறுகதைகள்

74        2016   கவிமாலை                                   சொல்மழை

75        2016   காரை பெரியசாமி                    விதை தேடும் ஈரம்

76        2016   கி. கோவிந்தராசு                        உணர்வுகள்

77        2016   கி. கோவிந்தராசு                        ஒளி ஓசை கவிதைகள்

78        2016   கி. கோவிந்தராசு                        இசைப்பாட்டு இலக்கியம்

79        2016   கோ. கண்ணன்                           அடம் செய விரும்பு

80        2016   சுப . சத்தியமூர்த்தி                    வரம்தரும் வானவன் – இசைதட்டு

81        2016   தங்கமணி                                     திரவச்சிலைகள்

82        2016   தியாக ரமேஷ்                              மகரந்தச் சேர்க்கை

83        2016   துரை முத்துகிருஷ்ணன்         ஒருதலைக் காமம்

84        2016   துரை முத்துகிருஷ்ணன்         நந்திக்கலம்பகம்

85        2016   மலர்விழி இளங்கோவன்         அலை பிடுங்கிய சொற்கள்

86        2016   மலர்விழி இளங்கோவன்         சொல்வதெல்லாம் பெண்மை

87        2016   மலர்விழி இளங்கோவன்         கடல் சூழ் கவிதைகள்

88        2016   மா . அன்பழகன்             ஆயிழையில்  தாலாட்டு

89        2016   மா . அன்பழகன்             கூவி அழைக்குது காகம் 2

90        2016   மா . அன்பழகன்             கூவி அழைக்குது காகம் 3

91        2016   மா . அன்பழகன்             எர்கு

92        2016   மா . அன்பழகன்             Erhu

93        2016   மா . அன்பழகன்             கூவி அழைக்குது காகம் 1

94        2016   மா . அன்பழகன்             வாய்க்கால் வழியோடி

95        2016   மா . அன்பழகன்             புதுமைத் தேனீ

96        2016   மா . அன்பழகன்             பாதிப்பில் பிறந்த பாடல்கள்

97        2016   முத்துப்பேட்டை மாறன்          ஏதோ ஒரு ஞாபகம்

98        2016   முனைவர் ஆறுமுகம்   தென்தமிழின் உயரிய சிறப்புகள்

99        2016   லலிதா சுந்தர்       சரித்திரங்கள் பிறப்பதில்லை

100     2016   கவிமாலை தமிழை நேசிப்போம் கவிதை வாசிப்போம்

101     2017   சி. கருணாகரசு   சிறகின் பசி

102     2017   சி. கருணாகரசு   அரங்கேறிய சலங்கைகள்

103     2017   சி. கருணாகரசு   காதல் தின்றவன்  

104     2017   நூர்ஜஹான் சுலைமான்         பொன்விழா பூமகள்

105     2017   நூர்ஜஹான் சுலைமான்         இமையாய்க் காப்போம் 

106     2017   பிச்சினிக்காடு இளங்கோ     அதிகாலைப் பல்லவன் 

107     2017   பிச்சினிக்காடு இளங்கோ     ஆதலினால் காதல் செய்தேன்

108     2017   பிச்சினிக்காடு இளங்கோ     அங்குசம் காணா யானைகள்

109     2017   பிச்சினிக்காடு இளங்கோ     தூரிகைச் சிற்பங்கள்

110     2017   பிச்சினிக்காடு இளங்கோ     வியர்வை ஊர் 

111     2017   மா . அன்பழகன் காதல் இசைபட வாழ்தல்

112     2017   மு. ஜஹாங்கீர்                             புதிய நிலா மலர்

113     2017   முனை மு  இளங்கோவன்      விபுலானந்தர் ஆவணப் படம்

114     2017   வை. சுதர்மன்      விடுதலைக்கவி வை. சுதர்மன் கவிதைகள்

115     2017   கவிமாலை                         அழகு மகுடம்

116     2018   நீதியரசார் மு. புகழேந்தி        வெள்ளத்தாண்டவம்

117     2018   பாத்தேறல் இளமாறன்            கல்லறை

118     2018   பாத்தேறல் இளமாறன்            அயல்மொழியும்  அருந்தமிழும்

119     2018   பாலசுப்பிரமணியன்  விழித்திருக்கும் நினைவலைகள்

120     2018   மா . அன்பழகன் அடுத்த வீட்டு ஆலங்கன்று

121     2018   விஜயன்                             அம்மா என்றால் அன்பு

122     2018   விஜயன்                             எம் ஜி ஆரின் பயணம்

123     2018   சதீஷ்                                   People of Indian origin in Srilanka

124     2018   சதீஷ்           இலங்கையில் இந்திய வம்சாவளித்  தமிழர்

125     2018   ந. வீ. விசயபாரதி           நிலவின் தோல்வி

126     2018   ந. வீ. விசயபாரதி           சுந்தரத்  தமிழாடல்

127     2018   மா . அன்பழகன் அன்புக்கு அழகு 75

128     2018   ந. வீ. விசயபாரதி           கவியரசர் கண்ணதாசன்

129     2018   கோ. கண்ணன்               காந்தள் சூடி

130     2018   பிச்சினிக்காடு இளங்கோ     காதல் வங்கி

131     2018   பிச்சினிக்காடு இளங்கோ     என்னோடு வந்த கவிதைகள்

132     2018   தங்கவேல்  முருகன்      நினைப்பதற்கு நேரமில்லை

133     2018   கவிமாலை வெளிச்சம்

134     2019   இன்பா                    மூங்கில் மனசு

135     2019   இன்பா                    மழை வாசம்

136     2019   துரை  முத்துகிருஷ்ணன்        இரட்டைமணிமாலை

137     2019   துரை முத்துகிருஷ்ணன்         தமிழ் இலக்கணம்

138     2019   துரை முத்துகிருஷ்ணன்         அகல் விளக்கு

139     2019   க . பாலமுருகன் வைகறைச் சூரியன்

140     2019   மா . அன்பழகன் சொல் வெட்டு 555

141     2019   தங்கமணி க.        பட்டினிப்பாலை

142     2019   இன்பா        யாதுமாகி

143     2019   இன்பா        ஙப்போல்  நிமிர்

144     2019   இன்பா        ஞயம்படச்  சொல்

145     2019   பிச்சினிக்காடு இளங்கோ     மக்கள் மனம்

146     2019   துரை முத்துகிருஷ்ணன்         புலவர் குறளுரை

147     2019   வை. சுதர்மன்      வாழ்வியல் வரலாறு

148     2019   கவிமாலை             அந்த ஒரு சொல்

149     2021   மா . அன்பழகன் டுரியானுள் பலாச்சுழை

150     2021   மா . அன்பழகன் மேகம் மேயும் வீதிகள்

151     2021   மா . அன்பழகன் கூவி அழைக்குது காகம் 4

152     2021   வை. சுதர்மன்      உயிரோவியம்

153     2021   கவிமாலை           மௌன விதைகள்

154     2021   இன்பா                     சிற்றிலக்கியச்சீர்

155     2022   மா . அன்பழகன் டுரியானுக்குள் பலாசுளை

156     2022   மா . அன்பழகன்             ஐம்பதிலும் வாழ்க்கை வரும்

157     2022   மா . அன்பழகன்             கூவி அழைக்கிது காகம் – 4

158     2022   மா . அன்பழகன்             மேகம் மேயும் வீதிகள்


இணை அமைப்பு :  கவிமாலை மாணவரணி


உசாத்துணை

இணைய தள முகவரி : www.kavimaalai.com

தொடர்புக்கு :  [[1]]