under review

கவிப்பித்தன்

From Tamil Wiki
Revision as of 03:29, 7 February 2024 by Kaliprasadh (talk | contribs) (நிறைவு)

கவிப்பித்தன் ( நவம்பர் 10, 1971 ) தமிழில் எழுதிவரும் கவிஞர் மற்றும் நாவலாசிரியர். கவிதைகள் சிறுகதைகள் நாவல்கள் எழுதியுள்ளார்.

கவிப்பித்தன்

பிறப்பு, கல்வி

கவிப்பித்தன் ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டத்தில் வாலாஜா வட்டத்தைச் சார்ந்த நீவாநதிக்கரை கிராமமான வசூரில் திரு.மு.கண்ணன் - திருமதி. சக்கரவேணி இணையருக்கு மகனாய்ப் பிறந்தார்.( வசூர், தற்போது இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளது ). இவரது இயற்பெயர் தேவராஜு

தொடக்ககக் கல்வியை வசூர் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியினை வள்ளிமலை - அரசு உயர்நிலைப் பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியைப் பொன்னை - அரசினர் மேநிலைப்பள்ளியிலும் கற்றார்.

செய்யாறில் உள்ள அறிஞர் அண்னா அரசு கலைக்கல்லூரியில் விலங்கியல் பிரிவில் தனது அறிவியல் இளங்கலையை நிறைவு செய்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலை பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

கவிப்பித்தனின் மனைவி திருமதி மஞ்சுளா. இவர்களுக்கு ஆகஸ்டு 22, 1999 ல் திருமணம் ஆனது. ஓவியா மற்றும் சிந்து ஆகிய இரு மகள்கள் உள்ளனர்  . நிலவழகன் என்கிற ஒரு மகன் இருக்கிறார்.

கவிப்பித்தன் அரசு ஊழியராக உள்ளார். வருவாய்த் துறையில் வட்டாட்சியராகப் பணிபுரிகிறார்

இலக்கிய வாழ்க்கை

கவிப்பித்தனின் இயற்பெயர் தேவராஜு என்பதாகும். புதுமைப்பித்தன் பெயர் மீதிருந்த ஈர்ப்பினால் கவிப்பித்தன் என்ற புனைப் பெயரை வைத்துக் கொண்டார்.

’முதுகெலும்புகள்’ என்கிற கவிதை 1992 ம் ஆண்டு வெளியானது. இவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது ’ஒரு மேகத்தின் தாகம்’ என்கிற கவிதைத் தொகுப்பு வெளியானது. ஆண்மை வதை என்கிற முதல் சிறுகதை 2000 ம் ஆண்டிலும், நீவாநதி என்கிற முதல் நாவல் 2015 ம் ஆண்டிலும் வெளியானது.

புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், வண்ணதாசன், கி.ரா, தி.ஜானகிராமன், எஸ்.ராமகிஷ்ணன், ஜெயமோகன், பிரபஞ்சன், கந்தர்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, ச.தமிழ்ச்செல்வன், வண்ணநிலவன், முகில் இவர்களோடு ஏராளமான சக படைப்பாளிகளும் ஏதேனும் ஒரு இழையினூடாக தனக்கு முன்னோடிகளாக இருப்பதாக குறிப்பிடுகிறார்.

விருதுகள்/ பரிசுகள்

  • ஊர்ப்பிடாரி தொகுப்பு - சிறந்த சிறுகதை தொகுப்பிற்கான கவிதை உறவு பரிசு
  • பிணங்களின் கதை தொகுப்பு - ஜெயந்தன் விருது மற்றூம் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
  • மடவெளி நாவல் - ஆனந்த விகடன் நம்பிக்கை விருது
  • நீவாநதி - எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயத்தின் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது
  • பாலி சிறுகதை தொகுப்பு - திருமாவளவனின் எழுச்சித் தமிழர் விருது மற்றும் படைப்பு இலக்கிய விருது
  • ஈமம் நாவல் - செளமா இலக்கிய விருது மற்றும் முற்போக்கு மேடை இலக்கிய விருது

இலக்கிய இடம்

கவிப்பித்தன் வட ஆற்காடு மக்களின் வாழ்க்கைப்பாடுகளை அம்மக்கள் புழங்கும் மொழியிலேயே எழுதுபவர். அடித்தட்டு மக்களின் வாழ்வியலை பாதிக்கும் புற காரணிகளையும் அது மக்களுக்குள் உருவாக்கும் எதிர்வினைகளையும் தனது கதைகளில் பதிவு செய்கிறார். இயல்புவாதக் கதைகளை எழுதுபவர். கதைகளின் வடிவம் குறித்த மெனக்கெடல் குறிப்பிடத்தக்கது என்றும் வசிகரத்தை உண்டாக்கும் நடை என்றும் அஜயன் பாலா இவரது கதைகள் குறித்து மதிப்பிட்டுள்ளார் மரணம் அல்லது விபத்து போன்ற எதிர்பாரா அனுபவங்களை பேரதிசயமாக காணும் பார்வை கொண்ட கதைகள் என்றும் வேலூர் மாவட்டத்தின் தனித்த சொல்லாட்சிகளையும் பழக்கவழக்கங்களையும் பதிவு செய்தவர் என்றும் கனலி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்

நூல் பட்டியல்

கவிதைத்தொகுதி
  • ஒரு மேகத்தின் தாகம் (1993)
  • யாருமற்ற கனவில் (1999)
சிறுகதைகள்
  • இடுக்கி (2007)
  • ஊர்ப்பிடாரி (2012)
  • பிணங்களின் கதை (2014)
  • சிப்பாய் கணேசன் (2016 )
  • சாவடி (2019)
  • பாலி (2021)
நாவல்கள்
  • நீவாநதி (2015)
  • மடவளி (2017)
  • ஈமம் (2021)
  • சேங்கை (2023)

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.