கள்ளோ காவியமோ

From Tamil Wiki
Revision as of 10:16, 3 June 2022 by Jeyamohan (talk | contribs)

கள்ளோ காவியமோ ( 1947) மு.வரதராசன் எழுதிய நாவல். பெண்விடுதலையை மரபார்ந்த ஒழுக்கப் பார்வை மீறாமல் முன்வைக்கும் நாவல். பெண்களுக்கு சமூக அமைப்பு அளிக்கும் இன்னல்களையும் அவர்கள் மீதான அடக்குமுறையையும் முதன்மையாகப் பேசுகிறது

எழுத்து ,வெளியீடு

மு. வரதராசன் இந்நாவலை 1947ல் எழுதினார். இது மு.வ. எழுதிய இரண்டாவது நாவல். முதல் நாவல் செந்தாமரை. இதை அவரே தன்னுடைய பாவை பதிப்பக வெளியீடாக பிரசுரித்தார்.

கதைச்சுருக்கம்

மங்கை இளமையில் தாயை இழந்தவள். தந்தை குடிகாரர். அத்தையின் வளர்ப்பில் கொடுமைக்குள்ளாகும் மங்கைவர் ரயிலில் சந்திக்க நேர்ந்த ஒரு குடும்பத்துடன் சென்று அவர்களின் வீட்டு வேலைக்காரியாக ஆகிறாள். அந்த இல்லத்து பெரியவரின் தூண்டுதலால் எழுதப்படிக்க கற்கிறாள். அந்த வீட்டைச்சேர்ந்த அருளப்பனும் மங்கையும் ஒருவருக்கொருவர் விரும்புகிறார்கள். அருளப்பனின் சகோதரி மணமுடித்து பெங்களூருக்குச் செல்கையில் மங்கையையும் உடன் அனுப்புகிறார்கள். அங்கே அவள் வேலைக்காரியாக பணியாற்றுகிறாள். அருளப்பனின் தந்தைக்கு இக்காதல் தெரியவருகிறது. அவர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார். அவர்களுக்கு தேன்மொழி என்னும் குழந்தை பிறக்கிறது

மங்கை மீது அருளப்பன் சந்தேகமும் கசப்பும் அடைகிறான். மங்கை கணவனையும் தேன்மொழியையும் விட்டுவிட்டு பம்பாய்க்குச் சென்று அங்கே ஒரு வட இந்தியரின் உணவு விடுதியில் பணிபுரிகிறாள். மங்கை சென்றபின் தன் தவறை அருளப்பன் உணர்கிறான். ஆனால் பல ஆண்டுகள் கழித்தும் ர்ங்கூச் விட்டுப் பிரிந்து பம்பாய் செல்கிறாள். அங்கொரு மார்வாடியின் துணையோடு அவரின் உணவு விடுதியில் வடநாட்டுப் பெண்ணுருவில் மேற்பார்வையாளராகிறாள். மங்கையின் பிரிவிற்குப் பிறகு, அருளப்பன் தன்மீதான தவறை உணர்கிறான். ஆண்டுகள் கழிந்தும் மங்கை திரும்பவில்லை. மங்கை இறந்துவிட்டதாகத் தேன்மொழி நம்பவைக்கப் படுகிறாள். பணிநிமித்தமாகப் பம்பாய் செல்லும் அருளப்பன் எதிர்பாரா விதமாக உணவுவிடுதியொன்றில் வடநாட்டுப் பெண் உருவில் மேற்பார்வையாளராக இருக்கும் மங்கையைச் சந்திக்கிறான். இருவரும் ஊர் திரும்புகின்றனர். மருமகளை மனதார வரவேற்கிறார் பெரியவர். மகள் தேன்மொழியோ மங்கையைச் சிறிதும் ஏற்க மறுக்கிறாள். மங்கை, மன உளைச்சலால் நோய்வாய்ப்படுகிறாள். அவள் மரணிக்கும் பொழுதில் மகள் தேன்மொழி “அம்மா” என்றழைக்கிறாள். கதை நிறைவடைகிறது.