standardised

கல்லாடனார் ( உரையாசிரியர்)

From Tamil Wiki
Revision as of 22:54, 12 April 2022 by Tamaraikannan (talk | contribs)

கல்லாடனார் (உரையாசிரியர்) (பொ.யு. 15-16-ஆம் நூற்றாண்டு) தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதியவர்.

அனைத்து கல்லாடனார்களும்: பார்க்க கல்லாடனார்

காலம்

உரையின் அமைப்பில் இருந்து கல்லாடனார் நச்சினார்க்கினியருக்கு பிறகும் பிரயோகவிவேகநூலருக்கு முன்பும் வாழ்ந்திருக்கலாம் என ஆய்வாளர் எண்னுகிறார்கள். ஆகவே இவர் பொ.யு. 15-16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது

கல்லாடனார் உரை

கல்லாடனார் உரை தொல்காப்பியம் சொல்லதிகாரத்தில உள்ள ஒன்பது இயல்களில் முதல் ஏழு இயல்களுக்கு முழுமையாகவும் எட்டாம் இயல் இடையியலில் முதல் பத்து நூற்பாக்களுக்கும் கிடைத்துள்ளது. ’’தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தியுரையும் பழைய உரையும்’’- கு. சுந்தரமூர்த்தி எழுதிய விளக்கத்துடன், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் - வெளியீடு - 1184 பதிப்பு 1964-ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இவர் தமது உரையில் 11-ஆம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பிய இளம்பூரணர் உரையையும், 13-ஆம் நூற்றாண்டில் தோன்றிய திருக்குறள் 13-ஆம் நூற்றாண்டு உரையிலிருந்தும் மேற்கோள்களைத் தந்துள்ளார். இவரது உரை 14-ஆம் நூற்றாண்டு நச்சினார்க்கினியரின் உரையைத் தழுவியே செல்கிறது.

உசாத்துணை

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
  • ’தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தியுரையும் பழைய உரையும்’’, கு. சுந்தரமூர்த்தி எழுதிய விளக்கத்துடன், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – வெளியீடு – 1184, ஆண்டு 1964
  • தொல்காப்பிய உரையாசிரியர்கள்


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.