கல்கி சதாசிவம்

From Tamil Wiki
Revision as of 08:11, 20 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "கல்கி சதாசிவம் (டி.சதாசிவம்) (தியாகராஜ சதாசிவம்) தமிழ் இதழியலாளர்களின் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர். கல்கி வாரஇதழின் நிறுவனர் மற்றும் நிர்வாகி. சுதந்திரப்போராட்ட வீரர். பாடகி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கல்கி சதாசிவம் (டி.சதாசிவம்) (தியாகராஜ சதாசிவம்) தமிழ் இதழியலாளர்களின் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர். கல்கி வாரஇதழின் நிறுவனர் மற்றும் நிர்வாகி. சுதந்திரப்போராட்ட வீரர். பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கணவர்.

பிறப்பு, கல்வி

கல்கி சதாசிவம்

திருச்சி மாவட்டத்தில் ஆங்கரையில் செப்டம்பர் 4, 1902ல் பிறந்தார்.சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபடும்பொருட்டு பள்ளிக் கல்வியை கைவிட்டார். தந்தை பெயர் தியாகராஜன்.

தனிவாழ்க்கை

சதாசிவம் அபிதகுசலாம்பாளை ஐ மணந்தார். அவருக்கு இரு மகள்கள். 1940 ஜூலையில் அபிதகுசலாம்பாள் மறைந்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமியை 1936 ஜூலைமாதம் மதுரையில் சந்தித்தார். ராஜாஜியின் அறிவுரையின்படி அவரை 1940ல் மணம்புரிந்துகொண்டார். எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு குழந்தைகள் இல்லை.

அரசியல் வாழ்க்கை

சதாசிவம் சுப்ரமணிய சிவாவின் பாரத் சமாஜ் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1920 முதல் ராஜாஜியின் அறிமுகம் கிடைத்தது. ராஜாஜி வழிநடத்திய கதர் இயக்கத்தில் பணியாற்றினார். அப்போது ஊர் ஊராகச் சென்று தேசபக்திப் பாடல்களைப் பாடி கதர் விற்பனை செய்தார். கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியை அப்போது சந்தித்தார்.

இதழியல்

1941ல் கல்கியுடன் இணைந்து கல்கி வார இதழை தொடங்கினார். 1954ல் கல்கி கிருஷ்ணமூர்த்தி மறைந்தபின் முழுப்பொறுப்பையும் ஏற்று இதழை நடத்தினார்.

மறைவு

கல்கி சதாசிவம் சென்னையில் நவம்பர் 22, 1997ல் தனது 95வது வயதில் காலமானார்.