being created

கலா நிலயம்

From Tamil Wiki
Revision as of 23:52, 9 July 2022 by ASN (talk | contribs) (Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கலாநிலயம் இதழ்

வழக்குரைஞர்; கல்வியாளர்; சொற்பொழிவாளர்; நாடக இயக்குநர் என பல்துறைச் செயல்பாட்டாளராக இருந்தவர் டி.என். சேஷாசலம். இலக்கியத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் இவர் தோற்றுவித்த இதழ் ‘கலா நிலயம்’. 1928 தொடங்கி, 1935 வரை வெளி வந்தது இவ்விதழ்.

எழுத்து, பிரசுரம்

‘Madras Young Men's Association Night School’ என்ற இரவுப் பள்ளி மூலம், ஆர்வமுள்ள மாணவர்களுக்கும், படிப்பைப் பாதியில் கைவிட்டவர்களுக்கும் ஆங்கில மற்றும் தமிழ் இலக்கியத்தைப் போதித்து வந்தார் டி.என். சேஷாசலம். அவை இலக்கியத்தில் ஆர்வமுள்ள பிறருக்கும் பயன்பட வேண்டும் என்று நினைத்தார். அதன் காரணமாக ஜனவரி 5, 1928-ல், இவர் ஆரம்பித்த இதழ் தான் ‘கலா நிலையம்.’ கலா நிலையம் என்பது  டி.என். சேஷாசலம் நடத்தி வந்த நாடகக் குழுவின் பெயர். அவரது இலத்தின் பெயரும் அதுதான். அந்தப் பெயரையே தான் புதிதாக ஆரம்பித்த இதழுக்கும் சூட்டினார் சேஷாசலம்.

‘வியாழன் தோறும் வெளிவரும் வாரப் பத்திரிகை’ என்ற அறிவிப்புடன் கலா நிலையம் வெளியானது. இதழின் நோக்கங்களாகச் சேஷாசலம், தமிழைப் பிழையறக் கற்றுக் கொள்ளுதல், ஆங்காங்கு உள்ள தமிழ்ப் புலவர்களை ஒருங்கிணைத்து இதழுக்கு எழுத வைத்து இலக்கிய வளம் சேர்த்தல், ஆங்கில மொழியின் பெருமையை, சிறப்பை அனைவரும் அறியும் பொருட்டு சிறந்த படைப்புகளை மொழிபெயர்த்து அளித்தல் போன்றவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்.





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.