கலங்கிய நதி

From Tamil Wiki
Revision as of 23:12, 2 March 2022 by Tamizhkalai (talk | contribs)

இந்திய விடுதலைக்குப்பின் பிரிவினையின் போது ஓடும் ரத்தவெள்ளத்தின் போது நம் தேசப்பிதா சொன்னது ‘ “ஒரு நதியில் வெள்ளம் வரும்போது அது மண்ணடர்ந்து எப்போதையும்விடக் கலங்கலாக இருக்கும். ஆனால் வெள்ளம் வடிந்தபின்னர் அது தெளிவாகிவிடும். முன்னைவிடத் தெளிவாக’’.

பி.ஏ. கிருஷ்ணனின்  கலங்கிய நதி  யில் கலங்கிச், சுழித்தோடும் பிரமபுத்திரா அஸ்ஸாம் மாநிலப் பிரச்சனையின் குறியீடாகிறது-நம்மால் இயன்றதைச் செய்வோம் ,என்றாவது தெளிந்துவிடும்  என்ற மாறா நம்பிக்கையோடு கரையில் காத்திருப்பதைவிட செய்யக்கூடுவதுதான் என்ன?.

அதிகார அமைப்பின் ஊழியன் தான் சார்ந்த அமைப்பின் முரண்களை, செயலின்மையை,அபத்தத்தை எதிர்கொண்டு, அதனால் வெளித்தள்ளப்பட்டு, கலங்கிய நதி தெளியும்போது கண்டடைவதும் காந்தியையே.

ஆசிரியர்

தமிழ்,ஆங்கிலம் இரு மொழிகளிலும் திறம்பட எழுதும் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் புலிநகக் கொன்றை,  கலங்கிய நதி ஆகிய புனைவுகளையும் திரும்பிச் சென்ற தருணம் மற்றும் அக்கிரகாரத்தில் பெரியார் ஆகிய அபுனைவுகளைடயும் எழுதியவர். கம்பராமாயணம் மற்றும் சங்க இலக்கியங்களில் பெரும்புலமை வாய்த்தவர்.