கர்ணாமிர்த சாகரம்

From Tamil Wiki
Revision as of 21:10, 9 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "கர்ணாமிர்த சாகரம் ( 1917,1946)) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் எழுதிய இசைநூல். தமிழிசையின் பண்பாட்டு அடித்தளம், அதன் வரலாற்று பின்னணி, அதன் பண்களின் அமைப்பு, பண்கள் உருவாகும் கணிதமுறை ஆகியவற...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கர்ணாமிர்த சாகரம் ( 1917,1946)) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் எழுதிய இசைநூல். தமிழிசையின் பண்பாட்டு அடித்தளம், அதன் வரலாற்று பின்னணி, அதன் பண்களின் அமைப்பு, பண்கள் உருவாகும் கணிதமுறை ஆகியவற்றை விவாதிக்கும் கலைக்களஞ்சியத்தன்மை கொண்ட நூல். தமிழிசை இயக்கத்தின் மூலநூல்களில் ஒன்று

எழுத்து, வெளியீடு

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் 1912 முதல் தமிழிசை ஆய்வில் ஈடுபட்டார். 1912 முதல் 1916 வரையிலான காலகட்டத்தில் ஏழு இசைமாநாடுகளைச் சொந்தச் செலவில் தஞ்சையில் நடத்தினார். அன்றைய புகழ்மிக்க இசையறிஞர்கள் அதில் கலந்துகொண்டனர். அவற்றில் நிகழ்ந்த விவாதங்களின் அடிப்படையில் தன் ஆய்வுமுடிவுகளை தொகுத்து அவர் எழுதிய நூல் இது. முதல்நூல் 1917ல் வெளியாகியது. 1200 பக்கங்களில் நான்கு பகுதிகளாக அமைந்தது.

கர்ணாமிர்த சாகரத்தின் இரண்டாம்நூலின் மூன்று பகுதிகளின் 256 பக்கங்களை அச்சிட்டிருந்த நிலையில் ஆபிரகாம் பண்டிதர் மறைந்தார். ஆகவே அவர் மகள் மரகதவல்லி துரைபாண்டியன் அவர் எழுதியிருந்த குறிப்புகளின் அடிப்படையில் கர்ணாமிர்தசாகரம் நூலை எழுதி முடித்தார். அவர் மகள் ஞானச்செலவம் தவப்பாக்கியம் அவருக்கு இசைக்குறிப்புகளில் உதவிசெய்தார். ஆபிரகாம் பண்டிதரின் மகன் டாக்டர் ஆ.சுந்தரபாண்டியன் 1946ல் இரண்டாம் பகுதியை வெளியிட்டார். பின்னர் அவை ஒரே நூலாக வெளியிடப்பட்டன.

உள்ளடக்கம்

இணைப்பு


.