being created

கரு. ஆறுமுகத்தமிழன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:கரு. ஆறுமுகத்தமிழன்2.png|thumb|267x267px|கரு. ஆறுமுகத்தமிழன் (நன்றி: Shruti tv)]]

[[File:கரு. ஆறுமுகத்தமிழன்.png|thumb|கரு. ஆறுமுகத்தமிழன்1]]

கரு. ஆறுமுகத்தமிழன் (ஆறுமுகம்) (பிறப்பு: 1970) எழுத்தாளர், பேச்சாளர், சைவ அறிஞர், பேராசிரியர். சைவம் சார்ந்த நூல்கள் எழுதினார்.
கரு. ஆறுமுகத்தமிழன் (ஆறுமுகம்) (பிறப்பு: 1970) எழுத்தாளர், பேச்சாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். சைவ அறிஞர், பேராசிரியர். சைவ இலக்கியம், அரசியல் சார்ந்த கட்டுரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதினார். சைவ உரைகள் நிகழ்த்தினார்.
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
கரு. ஆறுமுகத்தமிழனின் இயற்பெயர் ஆறுமுகம். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பழ. கருப்பையா, கமலா இணையருக்கு ஒரே மகனாகப் பிறந்தார். மதுரை இலட்சுமிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். மதுரை செளராஷ்டிரா பள்ளியில் மேல்நிலைக்கல்வி வரை பயின்றார். சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் மெய்யியலில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றார். அதே கல்லூரியில் ‘திருமூலரின் மெய்யியலும் சமயமும்-ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழியாகத் தமிழில் முதுகலைப்பட்டமும் பெற்றார்.  

Line 20: Line 20:
சென்னை வானொலியில் காலை தமிழ்ச் சுவை என்னும் நிகழ்ச்சிக்காக வழங்கப்பட்ட இலக்கியம், மெய்யியல் சார்ந்த சிற்றுரைகள் நூலாகத் தொகுக்கப்பட்டு ”நட்ட கல்லைத் தெய்வமென்று” என்னும் தலைப்பில் தமிழினி வெளியீடாக 2013-ல் வந்தது. இந்து தமிழ் திசை நாளேட்டின் ஆனந்தசோதி இணைப்பில் உயிர் வளர்க்கும் திருமந்திரம் என்னும் தலைப்பில் எழுதிய நூற்றியிருபது கட்டுரைகள் அதே தலைப்பில் நூலாகத் தொகுக்கப்பட்டு இந்து தமிழ் திசை பதிப்பகத்தால் 2020-ல் இரண்டு பகுதிகளாக வந்தது.

சென்னை வானொலிக்காக ஆற்றிய திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி உரைகள் தொகுக்கப்பட்டுப் ”பெண் உகந்த பெரும்பித்தன்” என்ற தலைப்பில் தமிழினி வெளியீடாக 2023-ல் வந்தது.  
சென்னை வானொலிக்காக ஆற்றிய திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி உரைகள் தொகுக்கப்பட்டுப் ”பெண் உகந்த பெரும்பித்தன்” என்ற தலைப்பில் தமிழினி வெளியீடாக 2023-ல் வந்தது. இணையாசிரியராக இருந்து எழுதிய ”The Yoga of Siddha Tirumular: Essays on the Tirumandiram” என்னும் நூல் 2006-ல் பாபாஜி கிரியா யோகா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
===== மொழிபெயர்ப்பு =====  
===== மொழிபெயர்ப்பு =====  
சித்தர் யோக ஆய்வு மையத்தில் பணி செய்த காலத்தில் திருமந்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியில் ஒரு பகுதியாகத் திருமந்திரத்தின் ஐந்தாம் தந்திரத்தை மொழிபெயர்க்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு அது 2010-ல் பாபாஜி கிரியா யோகா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
சித்தர் யோக ஆய்வு மையத்தில் பணி செய்த காலத்தில் திருமந்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியில் ஒரு பகுதியாகத் திருமந்திரத்தின் ஐந்தாம் தந்திரத்தை மொழிபெயர்த்தார். இது 2010-ல் பாபாஜி கிரியா யோகா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
 
இணையாசிரியராக இருந்து எழுதிய ”The Yoga of Siddha Tirumular: Essays on the Tirumandiram” என்னும் நூல் 2006இல் பாபாஜி கிரியா யோகா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
* திருமூலர்: காலத்தின் குரல் (2004, தமிழினி)

* நட்ட கல்லைத் தெய்வமன்று (2011. தமிழினி)
* நட்ட கல்லைத் தெய்வமன்று (2011, தமிழினி)
* உயிர் வளர்க்கும் திருமந்திரம் பாகம் 1
* உயிர் வளர்க்கும் திருமந்திரம் பாகம் 1
* உயிர் வளர்க்கும் திருமந்திரம் பாகம் 2
* உயிர் வளர்க்கும் திருமந்திரம் பாகம் 2
Line 43: Line 41:
* [https://www.youtube.com/watch?v=wY7CfTxaRZY&t=1s&ab_channel=Jeyamohan கொற்றவை - கரு.ஆறுமுகத்தமிழன் - நற்றுணை கலந்துரையாடல்]

* [https://www.youtube.com/watch?v=_fyHm8wdnCY&ab_channel=AnnaCentenaryLibrary%2CChennai பொன்மாலைப் பொழுது பேராசிரியர் கரு ஆறுமுகத்தமிழன்]

== உசாத்துணை ==
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
* [https://www.hindutamil.in/author/789-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81.%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D கரு. ஆறுமுகத்தமிழன் கட்டுரைகள்: இந்து தமிழ் திசை]

Revision as of 09:23, 31 March 2024

கரு. ஆறுமுகத்தமிழன் (நன்றி: Shruti tv)
கரு. ஆறுமுகத்தமிழன்1

கரு. ஆறுமுகத்தமிழன் (ஆறுமுகம்) (பிறப்பு: 1970) எழுத்தாளர், பேச்சாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். சைவ அறிஞர், பேராசிரியர். சைவ இலக்கியம், அரசியல் சார்ந்த கட்டுரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதினார். சைவ உரைகள் நிகழ்த்தினார்.

பிறப்பு, கல்வி

கரு. ஆறுமுகத்தமிழனின் இயற்பெயர் ஆறுமுகம். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பழ. கருப்பையா, கமலா இணையருக்கு ஒரே மகனாகப் பிறந்தார். மதுரை இலட்சுமிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். மதுரை செளராஷ்டிரா பள்ளியில் மேல்நிலைக்கல்வி வரை பயின்றார். சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் மெய்யியலில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றார். அதே கல்லூரியில் ‘திருமூலரின் மெய்யியலும் சமயமும்-ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழியாகத் தமிழில் முதுகலைப்பட்டமும் பெற்றார். பெங்களூர்ப் பல்கலைக்கழகம் வழியாகச் சட்டத்தில் இளநிலை.

தனிவாழ்க்கை

கரு. ஆறுமுகத்தமிழன் மனைவி முத்துலட்சுமி. மகள்கள் கமலா, மெய்யம்மை.

ஆசிரியப்பணி

கரு. ஆறுமுகத்தமிழன் சென்னைப் பல்கலைக்கழகம், மாமல்லபுரம் அரசினர் சிற்ப-கட்டடக் கலைக் கல்லூரி, பூவிருந்தவல்லி திருஇருதயக் கல்லூரி ஆகியவற்றில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றினார். இங்கு இந்திய தத்துவம், சைவ சித்தாந்தம், இந்திய அழகியல் சார்ந்த வகுப்புகள் எடுத்தார். சென்னை, விவேகானந்தர் கல்லூரியின் மெய்யியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

பொறுப்புகள்

  • சித்தர் யோக ஆய்வு மையம் என்ற ஆய்வுத் திட்டத்தில் துணை இயக்குநர்
  • ஐபிஎன் மேலாண்மை, சட்ட ஆலோசனை நிறுவனத்தில் மேலாளர்
  • புதிய தலைமுறை நிறுவனத்தின் புதுயுகம் தொலைக்காட்சிக்கான எழுத்தாளர் குழுவில் உறுப்பினர்

இலக்கிய வாழ்க்கை

கரு. ஆறுமுகத்தமிழன் ஆன்மிகம், சைவம் சார்ந்த நூல்கள் எழுதினார். சைவ இலக்கியங்களுக்கு உரை எழுதினார். இவரின் கட்டுரைகள் தமிழினி. காலச்சுவடு ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.

கரு. ஆறுமுகத்தமிழனின் முதல் நூல் முனைவர் பட்ட ஆய்வேட்டின் திருத்தப்பட்ட வடிவம் ”திருமூலர்: காலத்தின் குரல்” 2004-ல் தமிழினி வெளியீடாக வந்தது. தமிழினி அச்சு இதழாக வெளிவந்து கொண்டிருந்தபோது அதில் தலையங்கங்களும் அரசியல் விமரிசனக் கட்டுரைகளும் எழுதினார். தலையங்கங்கள் நூலாகத் தொகுக்கப்பட்டு ”நாமார்க்கும் குடியல்லோம்” என்ற தலைப்பில் தமிழினி வெளியீடாக 2011-ல் வந்தது.

சென்னை வானொலியில் காலை தமிழ்ச் சுவை என்னும் நிகழ்ச்சிக்காக வழங்கப்பட்ட இலக்கியம், மெய்யியல் சார்ந்த சிற்றுரைகள் நூலாகத் தொகுக்கப்பட்டு ”நட்ட கல்லைத் தெய்வமென்று” என்னும் தலைப்பில் தமிழினி வெளியீடாக 2013-ல் வந்தது. இந்து தமிழ் திசை நாளேட்டின் ஆனந்தசோதி இணைப்பில் உயிர் வளர்க்கும் திருமந்திரம் என்னும் தலைப்பில் எழுதிய நூற்றியிருபது கட்டுரைகள் அதே தலைப்பில் நூலாகத் தொகுக்கப்பட்டு இந்து தமிழ் திசை பதிப்பகத்தால் 2020-ல் இரண்டு பகுதிகளாக வந்தது.

சென்னை வானொலிக்காக ஆற்றிய திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி உரைகள் தொகுக்கப்பட்டுப் ”பெண் உகந்த பெரும்பித்தன்” என்ற தலைப்பில் தமிழினி வெளியீடாக 2023-ல் வந்தது. இணையாசிரியராக இருந்து எழுதிய ”The Yoga of Siddha Tirumular: Essays on the Tirumandiram” என்னும் நூல் 2006-ல் பாபாஜி கிரியா யோகா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

மொழிபெயர்ப்பு

சித்தர் யோக ஆய்வு மையத்தில் பணி செய்த காலத்தில் திருமந்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியில் ஒரு பகுதியாகத் திருமந்திரத்தின் ஐந்தாம் தந்திரத்தை மொழிபெயர்த்தார். இது 2010-ல் பாபாஜி கிரியா யோகா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

நூல் பட்டியல்

  • திருமூலர்: காலத்தின் குரல் (2004, தமிழினி)
  • நட்ட கல்லைத் தெய்வமன்று (2011, தமிழினி)
  • உயிர் வளர்க்கும் திருமந்திரம் பாகம் 1
  • உயிர் வளர்க்கும் திருமந்திரம் பாகம் 2
  • பெண் உகந்த பெரும்பித்தன்: திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும் (2023. தமிழினி)
  • நாமார்க்கும் குடியெல்லோம்
ஆங்கிலம்
  • The Yoga of Siddha Thirumular: Essays on Thirumandiram

உரைகள்

இணைப்புகள்

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.