கம்பதாசன்

From Tamil Wiki
Revision as of 11:37, 14 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "கம்பதாசன் ( ) தமிழ்க்கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். பிறப்பு, கல்வி கம்பதாசனின் இயற்பெயர் அப்பாவு. இராஜப்பா என்ற பெயரும் உண்டு. தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திண்டிவனம் மரு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கம்பதாசன் ( ) தமிழ்க்கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர்.

பிறப்பு, கல்வி

கம்பதாசனின் இயற்பெயர் அப்பாவு. இராஜப்பா என்ற பெயரும் உண்டு. தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திண்டிவனம் மருங்கே உள்ள உலகாபுரம் என்ற கிராமத்தில், (குலாலர்) குயவர் குலத்தில் சுப்பராயர் - பாலம்மாள் தம்பதிக்கு 15 செப்டெம்பர் 1916ல் தேதி பிறந்தார். பெற்றோருக்கு இவர் ஒரே மகன். மற்றவர் ஐவரும் பெண்கள்.

கம்பதாசனின் குடும்பத்தினர் அவரது இளமைப் பருவத்திலேயே சென்னையைச் சேர்ந்த புரசைவாக்கம் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர். அங்குள்ள குயப்பேட்டை நகர சபைப் பள்ளிக் கூட்டத்திலேயேஆறாம் வகுப்புவரை படித்தார். நடிப்புக் கலையிலே ஆர்வம் ஏற்பட்டு படிப்பை விட்டுவிட்டார்.

தனிவாழ்க்கை

நடிகராகவும் பாடகராகவும் திழந்த கம்பதாசன் நடன உலகுடன் அணுக்கமான தொடர்பு கொண்டிருந்தார்.மலையாளக் கவிஞர் வள்ளத்தோள் நாராயணமேனனின் மகளும் நாட்டியக்கலைஞருமான சித்திரலேகாவை மணந்தார். குறுகிய காலத்திலேயே அந்த மணவாழ்க்கை முறிந்தது. பின்னர் கவிஞர் சுசீலா என்ற பாடசாலை ஆசிரியையை மணந்து கொண்டார். அதுவும் தோல்வியில் முடியவே அனுசூசுயா என்ற நடனக்கலைஞரை மணந்தார்..

திதிரைப்பட வாழ்க்கை

மிகவும் இளமைக் காலத்திலேயே ‘திரெளபதி வஸ்திராபரணம்’, ‘சீனிவாச கல்யாணம்’ போன்ற படங்களில் தனது நடிப்புத் திறனைத் காட்டி நின்றார். 1940 ஆம் ஆண்டில் வெளிவந்த வாமன அவதாரம் என்ற படத்திற்கு முதன் முதலாகப் பாடல் எழுதினார். அதனைத் தொடர்ந்து வேணு கானம், மகாமாயா, பூம்பாவை, மங்கையர்க்கரசி, ஞானசெளந்தரி, அவன், வானரதம் போன்ற பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியும், கதை வசனம் எழுதியும் புகழின் உச்சியில் காணப்பட்டார். இதில் அவன், வானரதம், அக்பர் போன்ற திரைப் படங்களில் இவர் எழுதிய பாடல்கள் இன்னும் காலத்தால் அழியாத பாடல்களாகவும், திரைப்பட ரசிகர்களால் மறக்க முடியாத பாடல்களாகவும் காணப்படுகின்றன.

தமிழில் மறுமலர்ச்சிப் பாடல்களை எழுதத் தொடங்கினார். சமதர்மக் கொள்கை கொண்ட கம்பதாசன், தாம் எழுதிய திரைப்படப் பாடல்களில் முற்போக்குக் கருத்துகளை எளிய நடையில் புகுத்தினார்.

தமிழ் உணர்வுமிக்க அவருக்குப் போட்டிகள் நிறைந்த திரையுலகம் அதிக வாய்ப்பைத் தராவிட்டாலும், குரல் அசைவுப் படங்களுக்கு (டப்பிங்) அதிகம் எழுதியிருக்கிறார். "வானரதம்" என்ற இந்தித் திரைப்படத்தின் தமிழாக்கப் பாடலில் எளிய தமிழைப் பயன்படுத்தினார்.

கம்பதாசனின் கவித்திறமையை அடையாளங்காட்டி "கனவு" என்ற கவிதை நூல் 1941இல் வெளிவந்தது.

குடும்பம்[தொகு]

உடல்நலக் குறைவு காரணமாக இராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கவிக்கனல் கம்பதாசன், 1973ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் நாள் காலமானார்.