second review completed

கபிலரகவல்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 7: Line 7:

==நூல் அமைப்பு==
==நூல் அமைப்பு==
கபிலரகவல் 137 அடிகளாலான அகவற்பாவால் ஆனது. செல்வம், இளமை இவற்றின் நிலையாமையைக் கூறி, நற்செயல்கள் செய்வதின் அவசியத்தைக் கூறுகிறது.மனிதர்கள் அனைவரும் ஒன்றே, பிறப்பால் உயர்வு, தாழ்வு இல்லை,. சிறப்பு செயல்களினால் வருவது, பிறப்பாலல்ல என்பதையும் வலியுறுத்துகிறது.
கபிலரகவல் 137 அடிகளாலான அகவற்பாவால் ஆனது. செல்வம், இளமை இவற்றின் நிலையாமையைக் கூறி, நற்செயல்கள் செய்வதின் அவசியத்தைக் கூறுகிறது.மனிதர்கள் அனைவரும் ஒன்றே, பிறப்பால் உயர்வு, தாழ்வு இல்லை,சிறப்பு செயல்களினால் வருவது, பிறப்பாலல்ல என்பதையும் வலியுறுத்துகிறது.

அந்தணர்கள் இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகளில் இடும் உணவால் நீத்தார் பசி தீர்வார்காளா? யவனம் முதலிய நாடுகளில் சாதி பாகுபாடுகள் இல்லை. அந்தணர் குலமும் இல்லை. அங்கு மக்கள்  வாழவில்லையா? - என்ற கேள்விகளை எழுப்புகிறது.

கபிலரின் உடன் பிறந்தவர்களின் பெயரையும் அவர்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சமூக மக்களுடன் வாழ்ந்ததும் குறிப்பிடப்படுகிறது.  
கபிலரின் உடன் பிறந்தவர்களின் பெயரையும் அவர்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சமூக மக்களுடன் வாழ்ந்ததும் குறிப்பிடப்படுகிறது.

==பாடல் நடை==
==பாடல் நடை==

Revision as of 11:03, 13 December 2023

கபிலரகவல் (பொ.யு. பதினைந்தாம் நூற்றாண்டு) கபிலர் என்பவரால் எழுதப்பட்ட தமிழ் நீதி நூல். சாதி, சமய வேறுபாடுகளை எதிர்த்து பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்ற கருத்தை வலியுறுத்தி, பொதுவான நீதிகளைக் கூறும் நூல். நிலையாமையைக் கூறி, நற்செயல்களையே செய்யும்படி அறிவுறுத்துகிறது.

ஆசிரியர்

கபிலரகவலை எழுதிய கபிலரைப் பற்றிய பல மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. கபிலரகவலை இயற்றிய கபிலர் திருவாரூரில் பகவன் என்ற அந்தணருக்கும், ஆதி எனும் தாழ்ந்த குலப் பெண்ணுக்கும் பிறந்தவர் என கபிலரகவல் கூறுகிறது. தந்தை அவருக்கு உபநயனம் செய்வித்தபோது அந்தணர்கள் அவரது தாயின் குலத்தைக் காரணம் காட்டி நிகழ்வுக்குத் தடை விதித்தபோது சாதிப் பாகுபாடுகளை எதிர்த்து கபிலகரவலைப் பாடியதாகக் கூறப்படுகிறது.

திருவள்ளுவர், அதியமான், உப்பை, உருவை, ஔவை, வள்ளி என்ற பெயருடையவர்கள் இவரது உடன் பிறந்தவர்கள் என்பதும் அவர்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தவர்கள் என்றும் இந்நூல் மூலம் அறிய வருகிறது. ஊத்துக்காட்டில் வண்ணர் அகத்தில் உப்பையும், காவிரிப்பூம்பட்டினத்தில் சான்றார் வீட்டில் உறுவையும், பாணர் வீட்டில் ஔவையும், குறவர் வீட்டில் வள்ளியும், திருமயிலையில் பறையர் வீட்டில் வள்ளுவரும், வஞ்சியில் அதிகன் வீட்டில் அதியமானும் வளர்ந்தனர் எனவும் கபிலகரவல் கூறுகிறது. இத்தகவல்களுக்கான சான்றுகள் இல்லை.

நூல் அமைப்பு

கபிலரகவல் 137 அடிகளாலான அகவற்பாவால் ஆனது. செல்வம், இளமை இவற்றின் நிலையாமையைக் கூறி, நற்செயல்கள் செய்வதின் அவசியத்தைக் கூறுகிறது.மனிதர்கள் அனைவரும் ஒன்றே, பிறப்பால் உயர்வு, தாழ்வு இல்லை,சிறப்பு செயல்களினால் வருவது, பிறப்பாலல்ல என்பதையும் வலியுறுத்துகிறது.

அந்தணர்கள் இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகளில் இடும் உணவால் நீத்தார் பசி தீர்வார்காளா? யவனம் முதலிய நாடுகளில் சாதி பாகுபாடுகள் இல்லை. அந்தணர் குலமும் இல்லை. அங்கு மக்கள் வாழவில்லையா? - என்ற கேள்விகளை எழுப்புகிறது.

கபிலரின் உடன் பிறந்தவர்களின் பெயரையும் அவர்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சமூக மக்களுடன் வாழ்ந்ததும் குறிப்பிடப்படுகிறது.

பாடல் நடை

நன்று செய்வீர், இன்றே செய்வீர்

பெருக்காறு ஒத்தது செல்வம்பெருக்காற்று
இடிகரையொத்தது இளமை இடிகரை
வாழ்மரம் ஒத்தது வாழ்நாள் ஆதலால்
ஒன்றேசெய்யவும் வேண்டும் அவ்வொன்றும்
நன்றேசெய்யவும் வேண்டும் அந்நன்றும் 30
இன்றேசெய்யவும் வேண்டும் அவ்வின்றும்
இன்னேசெய்யவும் வேண்டும் அவ்வின்னும்
நாளைநாளை யென்பீ ராகில்
நம்னுடை முறைநாள் ஆவதுமறியீர்
நமனுடை முறைநாள் ஆவதுமறியீர் 35

பிறப்பில் வேறில்லை

பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண்மின்
இறந்தவரா யுமை யிவ்விடை யிருத்திப்
பாவனை மந்திரம் பலபடவுரைத்தே
உமக்கவர்புத்திரர் ஊட்டினபோது 60
அடுபசியால் குலைந்து ஆங்கவர் மீண்டு
கையேந்தி நிற்பது கண்டதார் புகலீர்
அருந்தியவுண்டியால் ஆர்பசி கழிந்தது
ஒட்டியர் மிலேச்சர் ஊணர் சிங்களர்
இட்டிடைச் சோனகர் யவனர் சீனத்தர் 65
பற்பலர்நாட்டிலும் பார்ப்பார் இலையால்
முற்படைப் பதனில் வேறாகிய முறைமைபோல்
நால்வகைச் சாதியிந் நாட்டினில் நாட்டி நீர்
மேல்வகை கீழ்வகை விளங்குவது ஓழுக்கால்
பெற்றமும் எருமையும் பிறப்பினில்வேறே 70

உசாத்துணை

✔ Second review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.