under review

கனகி புராணம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:கனகி புராணம் .png|thumb|355x355px|கனகி புராணம் ]]
[[File:கனகி புராணம் .png|thumb|355x355px|கனகி புராணம் ]]
கனகி புராணம் (பொ.யு. பத்தொன்பதாம் நூற்றாண்டு) பழைய பதினெண் புராணங்களுள் ஒன்றன்று. நட்டுவச் சுப்பையனார் எழுதினார்.
கனகி புராணம் (பொ.யு. பத்தொன்பதாம் நூற்றாண்டு) பழைய பதினெண் புராணங்களுள் ஒன்றன்று. ஈழத்துப்புலவர் நட்டுவச் சுப்பையனார் எழுதினார்.
== நூல் பற்றி ==
== நூல் பற்றி ==
இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நட்டுவச் சுப்பையனார் இயற்றிய புராண நூல். இந்நூலின் பாட்டுடைத் தலைவி நாட்டியக் கலையில் சிறந்து விளங்கிய ”கனகி” என்ற கணிகை. இவள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து தன் கலை வன்மையாலும் இலங்கை, இந்திய ஆடவர் பலரைத் தன் வசப்படுத்தினாள் என புராணங்கள் கூறுகிறது,
இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நட்டுவச் சுப்பையனார் இயற்றிய புராண நூல். இந்நூலின் பாட்டுடைத் தலைவி நாட்டியக் கலையில் சிறந்து விளங்கிய ”கனகி” என்ற கணிகை. இவள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து தன் கலை வன்மையாலும் இலங்கை, இந்திய ஆடவர் பலரைத் தன் வசப்படுத்தினாள் என புராணங்கள் கூறுகிறது.

இந்நூல் முழுவதும் கிடைக்கவில்லை. காலம் தோறும் கிடைக்கும் பாக்கள் கோர்க்கப்பட்டு வந்துள்ளன. முதலில் ஜே.ஆர். ஆணல்ட் சதாசிவம்பிள்ளை 1886இல் தமக்குக் கிடைத்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தையும், எடுத்துக்காட்டுக்கு ஒரு பாடலையும் வெளியிட்டார். அதன் பின் நவாலியூர் ந.சி. கந்தையாபிள்ளை தமக்குத் தெரியவந்த கவிகளை 1937இல் வெளியிட்டனர். இன்னும் முழுமையாக தொகுக்கப்படாத நூலை ”எடுத்துக் கொடுப்பவர்களுக்கு 500 ரூபாய் பரிசாக வழங்குவதாகச் சொல்லி மதுரைத் தமிழ்ச் சங்கத்தினர் தீர்மானித்து முயற்சி செய்தனர். இருந்தும் இந்தப்புராணம் முழுமை பெறவில்லை.
இந்நூல் முழுவதும் கிடைக்கவில்லை. காலம் தோறும் கிடைக்கும் பாக்கள் கோர்க்கப்பட்டு வந்துள்ளன. முதலில் ஜே.ஆர். ஆணல்ட் சதாசிவம்பிள்ளை 1886இல் தமக்குக் கிடைத்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தையும், எடுத்துக்காட்டுக்கு ஒரு பாடலையும் வெளியிட்டார். அதன் பின் நவாலியூர் ந.சி. கந்தையாபிள்ளை தமக்குத் தெரியவந்த கவிகளை 1937இல் வெளியிட்டனர். இன்னும் முழுமையாக தொகுக்கப்படாத இந்நூலை ”எடுத்துக் கொடுப்பவர்களுக்கு 500 ரூபாய் பரிசாக வழங்குவதாகச் சொல்லி மதுரைத் தமிழ்ச் சங்கத்தினர் தீர்மானித்து முயற்சி செய்தனர். இருந்தும் இந்தப்புராணம் முழுமை பெறவில்லை.
== பாடல் நடை ==
== பாடல் நடை ==
<poem>
<poem>

Revision as of 17:30, 15 November 2022

கனகி புராணம்

கனகி புராணம் (பொ.யு. பத்தொன்பதாம் நூற்றாண்டு) பழைய பதினெண் புராணங்களுள் ஒன்றன்று. ஈழத்துப்புலவர் நட்டுவச் சுப்பையனார் எழுதினார்.

நூல் பற்றி

இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நட்டுவச் சுப்பையனார் இயற்றிய புராண நூல். இந்நூலின் பாட்டுடைத் தலைவி நாட்டியக் கலையில் சிறந்து விளங்கிய ”கனகி” என்ற கணிகை. இவள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து தன் கலை வன்மையாலும் இலங்கை, இந்திய ஆடவர் பலரைத் தன் வசப்படுத்தினாள் என புராணங்கள் கூறுகிறது.

இந்நூல் முழுவதும் கிடைக்கவில்லை. காலம் தோறும் கிடைக்கும் பாக்கள் கோர்க்கப்பட்டு வந்துள்ளன. முதலில் ஜே.ஆர். ஆணல்ட் சதாசிவம்பிள்ளை 1886இல் தமக்குக் கிடைத்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தையும், எடுத்துக்காட்டுக்கு ஒரு பாடலையும் வெளியிட்டார். அதன் பின் நவாலியூர் ந.சி. கந்தையாபிள்ளை தமக்குத் தெரியவந்த கவிகளை 1937இல் வெளியிட்டனர். இன்னும் முழுமையாக தொகுக்கப்படாத இந்நூலை ”எடுத்துக் கொடுப்பவர்களுக்கு 500 ரூபாய் பரிசாக வழங்குவதாகச் சொல்லி மதுரைத் தமிழ்ச் சங்கத்தினர் தீர்மானித்து முயற்சி செய்தனர். இருந்தும் இந்தப்புராணம் முழுமை பெறவில்லை.

பாடல் நடை

நத்தே பெற்ற முத்தனையாய்,
நவிலும் திருப்பாற் கடல் கடைந்த
மத்தேயனைய தனக் கனகே!
மாரன் கணையை வளர்ப்பவளே!
பத்தோடொன்றிங் கவரென்னப்
பரிதி குலத்துச் சிகாமணிபோல்
புத்தூர் மணியம் சின்னையன் (சண்முகங் காண்)
புறத்தோன் தம்பியுடையானே.

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
  • கனகி புராணம்: ஈழத்துப் புலவர், நட்டுவச் சுப்பையனார்; பதிப்பாசிரியர்: வட்டுக்கோட்டை, மு. இராமலிங்கம்

இணைப்புகள்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.