கண்ணன் கூட்டம்

From Tamil Wiki
Revision as of 20:39, 14 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "கண்ணிற் சிறந்த உறுப்பில்லை, கொங்கு நாட்டின் கண்ணாக விளங்கியவர்கள் கண்ணன் கூட்டத்தினர். கண்ணபெருமானை வணங்கியவர்கள் கண்ணன் குலத்தினர் . கண்ணன் ஆனங்கூர் காணிமுத்தையனை கொங்கு ந...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கண்ணிற் சிறந்த உறுப்பில்லை, கொங்கு நாட்டின் கண்ணாக விளங்கியவர்கள் கண்ணன் கூட்டத்தினர். கண்ணபெருமானை வணங்கியவர்கள் கண்ணன் குலத்தினர் . கண்ணன் ஆனங்கூர் காணிமுத்தையனை கொங்கு நாடதை விளக்கம் செய்தார், என்று அழகுமலைக் குறவஞ்சி கூறுகிறது. கொங்கு நாட்டை நன்கு பெருமையுடையதாக ஆக்கினான்.மூவேந்தருக்கும் எல்லை பற்றிய வேறுபாடு இருந்தது. முத்துச்சாமிக் கவுண்டர் மகன் நல்லத்தம்பி கவுண்டர் மதுக்கரை செல்லாண்டியம்மன்  கோவில் வழக்குதிர்த்து வைத்தான். மூவேந்தரும் மன்றாடிப் பட்டம் கொடுத்து கண்ணிவாடி என்ற ஊரின் தலைமையையும் கொடுத்தனர். கண்ணிவாழ ,கண்ணம்பாழ ஆனது இவன் கண்ணன் குலத்தினன். கண்ணன் குலத்தினர் முதல் காணி கண்ணிவாடிதான் . பொன்பரப்பு என்ற ஊரிலிருந்து நல்லதம்பி அமராவதி ஆற்றைக்கடந்து நத்தைக்காடைவூரில் தங்கினர் .சூரிய காங்கேயன் பிறந்தான் . மோரூரில்  காணி கொண்டு அதனை ஆட்சி செய்தான் .

இந்தவழி முறையில் வந்தவர் முத்துக்கவுண்டர் . இவர் இறந்தபோது மனைவியர் மூவரும் தீப்பாய்ந்து உடன்கட்டை ஏறினர்.தீப்பாய்ந்தம்மன் வீரமார்த்தியம்மன் என்றனர் .நாமக்கல் மோகனூர் சாலையில் இது உள்ளது . மோரூர் நாட்டுக் கண்ணன் குலத்தினர் நல்ல புள்ளியம்மனை வழிபடுகின்றனர் பதினாறு கோயில்களை இவர்கள் கட்டினர் . நன்றாகக் கருதி போற்றியம்மனை முளசிக் கண்ணன் குலத்தினர் வழிபடுகின்றனர் கண்ணிவாடி , காலமங்கலம் , கீழாம்படி,கொளாநல்லி, கோக்களை, சித்தோடு , உஞ்சணை, நசியனூர், தொக்கவாடி , மண்டபத்தூர் , காஞ்சிக்கோயில் , மணியனூர், மாவுருட்டி , சித்தாளந்தூர்,கூத்தா நத்தம், மோரூர், நல்லிபாளையம், மோழிப்பள்ளி, தகடைப்பாடி , மங்கலம் ஆகிய ஊர்கள் கண்ணன் குலத்தினரின் காணியிடங்களாம்.