being created

ஔவையார்

From Tamil Wiki
Revision as of 06:23, 2 March 2023 by Ramya (talk | contribs) (Created page with "ஔவையார் தமிழ் இலக்கிய மரபில் வாழ்ந்த கவிஞர். தமிழ் மரபில் எட்டுக்கும் மேற்பட்ட அவ்வைகள் வாழ்ந்து மறைந்ததாக சொல்லப்படுகிறது. == ஒளவைகள் == தமிழறிஞர் தாயம்மாள் அறவாணன் எழுதிய “அவ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஔவையார் தமிழ் இலக்கிய மரபில் வாழ்ந்த கவிஞர். தமிழ் மரபில் எட்டுக்கும் மேற்பட்ட அவ்வைகள் வாழ்ந்து மறைந்ததாக சொல்லப்படுகிறது.

ஒளவைகள்

தமிழறிஞர் தாயம்மாள் அறவாணன் எழுதிய “அவ்வையார் படைப்புக் களஞ்சியம்” என்கிற நூல் எட்டு அவ்வையரை முன்வைக்கிறது.

  • சங்கப்பாடல்களைப பாடியவள்.
  • தனிப்பாடல்களில் கம்பனோடு பூசல் செய்பவள்.
  • ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி என்று நீதி சொல்லிப் பாடியவள்.
  • விநாயகர் அகவலும், திருக்குறளைப் போல் அவ்வைகுறளும் பாடியவள்.
  • நிகண்டுகள் செய்தவள்
  • அசதிக் கோவை, பந்தன் அந்தாதி, பெட்டகம் போன்ற நூல்களை யாத்தவள்.
  • கல்வி ஒழுக்கம், கணபதி ஆசிரிய விருத்தம், வேழமுகம் ஆகிய நூல்களை எழுதியவள்.
  • நீதி ஒழுக்கம், தரிசனப்பத்து எழுதியவள்.

புகழ்பெற்ற ஒரு கவிஞரின் பெயரை பின்னால் வந்தவர்கள் சூட்டிக் கொண்டிருக்கலாம் அல்லது தனது பாக்களை புகழ் மிக்க ஒருவரின் பெயரால் உலவவிடும் உத்தியிலும் இவ்வளவு அவ்வைகள் பிறந்திருக்கலாம். அவ்வைகளின் பிறப்பு குறித்த தகவல்கள் ஏதும் உறுதி செய்யப்பட்டிராத நிலையில், பின்நாளைய அவ்வைகளில் ஓரிருவர் ஆண்களாக இருக்கவும் வாய்ப்புண்டு என்று சந்தேகிக்கவும் இடமுண்டு.

உசாத்துணை

  • களிநெல்லிக்கனி (வாயில்) – இசை: நீலி மின்னிதழ்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.