being created

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில்: Difference between revisions

From Tamil Wiki
Line 24: Line 24:
== கோவில் அமைப்பு ==
== கோவில் அமைப்பு ==
சந்திரசூடேஸ்வரர் கோவில் மலை உச்சியில் மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோவில் செல்ல மலை அடிவாரத்தில் நெடுஞ்சாலையை ஒட்டி சாலையும் சற்று உள்ளே 200 படிகளைக் கொணட நடைபாதையும் உள்ளன. சாலை வழி ராஜ கோபுரத்தின் வலது பக்கத்திலும் நடை பாதை படிகள் ராஜ கோபுரத்தின் முன்னிலும் இணைகின்றன. கோவில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்னும் அமைப்பைக் கொண்டது.   

====== நுழைவாயில் மண்டபம் ======
மலையடிவாரத்தில் படிக்கட்டு பாதை நுழைவாயிலில் மண்டபம் உள்ளது, நான்கு வட்ட வடிவ தூண்களும் இரண்டு சதுர வடிவ தூண்களும் கொண்டது. இருபுறமும் சிறிய அறைகள் உள்ளன. கோயில் வரை 200 கருங்கல் படிகள், சில படிகளில் கல்வெட்டுகள் உள்ளன.

====== விநாயகர் கோவில் ======
====== விநாயகர் கோவில் ======
Line 35: Line 32:

====== நுழைவாயில் மண்டபம் ======
====== நுழைவாயில் மண்டபம் ======
படிக்கட்டு பாதை நுழைவாயிலில் மண்டபம் உள்ளது, நான்கு வட்ட வடிவ தூண்களும் இரண்டு சதுர வடிவ தூண்களும் கொண்டது. இருபுறமும் சிறிய அறைகள் உள்ளன. கோயில் வரை 200 கருங்கல் படிகள், சில படிகளில் கல்வெட்டுகள் உள்ளன.

====== பச்சைக் குளம் ======
====== பச்சைக் குளம் ======
சந்திரசூடேஸ்வரர் மலையின் கீழே மேற்குப் பக்கம் சுற்றிலும் கருங்கல் கட்டுமானத்துடன் கூடிய குளம் உள்ளது. குளத்தின் நீர் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. குளத்தின் கிழக்கிலும் தெற்கிலும் இரண்டு மண்டபங்கள் உள்ளன. குளத்தின் தெற்கு கரையில் புற்று மற்றும் ஆஞ்சநேயர் , நாகதேவதை சிற்பங்கள் உள்ளன. குளத்தின் மேற்கில் காசி விஸ்வநாதர், கிழக்கில் நடராஜர் கோவில்கள் உள்ளன. குளத்தின் வடக்கில் உடை மாற்றும் அறை உள்ளது. குளத்தின் நடுவில் தூண்கள் கொண்ட மண்டபம் உள்ளது.
'''தெற்கு மண்டபம்:''' நான்கு தூண்கள் கொண்டது. 4 பட்டை, 8 பட்டை, 16 பட்டை கொண்ட தூண்கள்.
'''கிழக்கு மண்டபம்:''' ஆறு தூண்கள் கொண்டது, 4 பட்டை, 8 பட்டை, 16 பட்டை கொண்ட தூண்கள்.
'''நடுமண்டபம்:''' அதிட்டானம் நான்கு தூண்கள் கொண்டது, சுவர்ப் பகுதி எட்டு தூண்கள் கொண்டது, தூண்கள் வட்ட வடிவம். விமானம் சுதையால் ஆனது, வேசரப் பகுதி கொண்டது, நாரி முகம், நந்திம் கர்ணக்கூடுகள் உள்ளன, மகாபத்மத்தில் ஸ்தூபி உள்ளது, ஸ்தூபியில் வெண்கல கலசம் உள்ளது.
'''நடராஜர் கோவில்:''' கருங்கல் கட்டுமானம்; தூணில் முத்துமாலை சிற்பம் உள்ளது; மடப்பள்ளி, நவகிரகம், முருகன், மடப்பள்ளி உள்ளன.

====== ராஜ கோபுரம் ======
====== ராஜ கோபுரம் ======
விஜயநகர மேரரசு காலத்தில் கட்டத் தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்ட ராஜகோபுரம் இடிக்கப்பட்டு, 112 அடி உயரத்தில் ஏழு நிலைகளுடன் புதிய ராஜகோபுரம் கட்டப்பட்டது. 2023-ஆம் ஆண்டு ஜூன் 28-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது,மேற்கு நோக்கி அமைந்தது, உச்சியில் கலசங்கள் உள்ளன.

====== தெற்கு கோபுரம் ======
====== தெற்கு கோபுரம் ======
தெற்கு கோபுரம் சாலை, பஞ்சரம், கூடு என்னும் உறுப்புகளால் ஆனது. இரண்டு வாயில்கள், ஐந்து நிலைகள் கொண்டது, அதிட்டானம் முதல் பிரஸ்த்தானம் வரை கருங்கல் கட்டுமானம். ஐந்து நிலைகளிலும் விநாயகர், முருகர், ஆலமர்செல்வர், சண்டிகேஸ்வரர், துவாரபாலிகை, அடியவர், யாளி ஆகிய சிற்பங்கள் உள்ளன. அதிட்டானம் உபபீடம், பத்மம், ஜகதி, விருத்தம், குமுதம், கண்டம், கபோதம், பட்டிகை என்னும் உறுப்புகள் கொண்டது. சுவர்ப்பகுதி வேலைபாடுகளுடைய எட்டு அரைத்தூண்கள் கொண்டது, சிற்பங்கள் இல்லை.  பிரஸ்தாரம் வேதிகை, பட்டி, மகரதோரணம், கபோதம், உத்திரம் என்னும் உறுப்புகள் கொண்டது. சாலை என்னும் சிகரத்தின் மீது பத்மம், கண்ணாடிச் சட்டம், அலங்குகள், கட்டுமாலை உள்ளன. கோபுரத்தில் கலசங்கள் இல்லை.

====== வெளித் திருச்சுற்று ======
====== வெளித் திருச்சுற்று ======
Line 76: Line 85:
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==

* [https://www.youtube.com/watch?v=09bozGDa2J8 காணொளி - நியூஸ் 7 தமிழ்]
* [https://www.youtube.com/watch?v=09bozGDa2J8 சந்திரசூடேஸ்வரர் கோவில் - காணொளி , நியூஸ் 7 தமிழ்]
* [https://www.youtube.com/watch?v=kYVi_j__g8U காணொளி - வசந்த் டி.வி.]  
* [https://www.youtube.com/watch?v=kYVi_j__g8U சந்திர சூடேஸ்வரர் கோவில் - காணொளி, வசந்த் டி.வி.]
* [https://www.youtube.com/watch?v=wI9h1ZuYntY ராஜகோபுரக் காணொளி - ஓம்சூர் ஸ்டுடியோ]
* [https://www.youtube.com/watch?v=wI9h1ZuYntY ராஜகோபுரம் - காணொளி, ஓம்சூர் ஸ்டுடியோ]
* [https://www.youtube.com/watch?v=kM6Gmkqh9PE ராஜக்கோபுரக் கும்பாபிஷேகம் - செய்தி, பக்தி நியூஸ் 7 தமிழ்]
* [https://www.youtube.com/watch?v=kM6Gmkqh9PE ராஜக்கோபுரக் கும்பாபிஷேகம் - காணொளிச் செய்தி, பக்தி நியூஸ் 7 தமிழ்]
* [https://www.maalaimalar.com/news/district/rajagopuram-consecration-ceremony-at-chandrachudeswarar-temple-in-hosur-629274 ராஜக்கோபுரக் கும்பாபிஷேகம் - செய்தி, மாலைமலர்]
* [https://www.maalaimalar.com/news/district/rajagopuram-consecration-ceremony-at-chandrachudeswarar-temple-in-hosur-629274 ராஜக்கோபுரக் கும்பாபிஷேகம் - செய்தி, மாலைமலர்]
* [https://m.dinamalar.com/detail.php?id=3342222 ராஜக்கோபுரக் கும்பாபிஷேகம் - செய்தி, தினமலர்]
* [https://m.dinamalar.com/detail.php?id=3342222 ராஜக்கோபுரக் கும்பாபிஷேகம் - செய்தி, தினமலர்]
* [https://www.dailythanthi.com/amp/News/Districts/2017/01/03185951/Hosur-Lunar-cutesvararIn-the-entourage-of-destruction.vpf கல்வெட்டு செய்தி - தினத்தந்தி]
* [https://www.dailythanthi.com/amp/News/Districts/2017/01/03185951/Hosur-Lunar-cutesvararIn-the-entourage-of-destruction.vpf அழியும் நிலையில் கல்வெட்டுகள் - செய்தி, தினத்தந்தி]
{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 12:46, 30 August 2023

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் மலைமீது அமைந்துள்ள சிவன் கோவில். கிழக்கு நோக்கிய கோவில் மூலவர் லிங்க வடிவ சந்திரசூடேஸ்வரர், அம்மன் பெயர் மரகதாம்பிகை.

இடம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் இரயில் நிலையத்தில் இருந்து 2.5 கி.மீ. தொலைவிலும் தேசிய நெடுஞ்சாலை-7 அருகில் மலை மீது மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்திலிருந்து கோவிலுக்கு செல்ல வாகனங்கள் செல்லும் சாலை, 200 படிகள் கொண்ட நடைபாதை உள்ளன.

பெயர்

கல்வெட்டுகளில் ஊர் பெயர் ஓசூர் என இல்லை. முடிக்கொண்ட சோழமண்டலம், இராசேந்திர சோழ வளாநாடு, முரசு நாடு, சேவிடைப்பாடி என்னும் பெயர்களில் அறியப்படுகிறது. கோவில் அமைந்திருக்கும் மலை விருமாச்சலம், சம்பகாத்ரி, கௌதியா பருவதம் என்னும் புராணப் பெயர்களால் அறியப்படுகிறது.

மூலவர்

மூலவர் லிங்க வடிவ சிவன். சந்திரசூடேஸ்வரர், சூடனதேசீவரர் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். கல்வெட்டுகளில் சேவுடை நாயனார் என்னும் பெயர் காணப்படுகிறது. மூலவரின் துணையான அம்மன் மரகதாம்பிகை, பச்சையம்மன், பர்வதாம்மாள் என்ற பெயர்களில் அழைக்கபடுகிறார்.

தொன்மம்

கோவிலைப் பற்றிய சில புராணக்கதைகள் வாய்மொழியாக உள்ளன.

உடும்புக் கதை

தருமதேவன், சிவனை நோக்கி தென்பெண்ணை ஆற்றங்கரையில் கடுந்தவம் புரிய சிவன் காட்சியளித்தார். தன்னை சிவனின் வாகனமாக மாற்றும்படி சிவனைக் கேட்டார். சிவன் வரமளிக்க தருமதேவன் தனது வடிவில் மலை ஒன்றை இவ்விடத்தில் உருவாக்கி அதில் தம்பதியாக காட்சியளிக்க கேட்டுக்கொண்டார். சிவன் நந்தி வடிவிலில் மலைய உருவாக்கி பாரவதியை அங்கு வரவழைக்க திருவிளையாடல் ஒன்று புரிந்தார்.

சிவன் மரகத வண்ண வாக் கொண்ட பலவண்ண உடும்பு வேடம் கொண்டு விளையாட்டு காட்டி ஓடினார். பார்வதி அதனைத் துரத்திச் சென்று ஒருக் கட்டத்தில் அதன் வாலைப்பிடிக்க உடல் மரகத வண்ணம் ஆனது(மரகதாம்பிகை, பச்சையம்மன் - பெயர் காரணம்). பார்வதி உடலின் நிறமாற்றம் கண்டு சுதாரிப்பதற்குள் உடும்பு தப்பி ஓடியது. பார்வதியால் பல மலைகள் துரத்தப்பட்டு ஓசூர் மலைக்கு வந்தது. அங்கு தவம் செய்து கொண்டிருந்த இரு முனிவர்களில் ஒருவர் பலவண்ண உடும்பை கண்டு அதனை இன்னொருவருக்கு காட்ட அழைத்தார். சத்தம் கேட்டு உடும்பு தப்பி மறைந்தது. கோபும் கொண்ட பார்வை முனிவர்களை அழைத்தவரை ஊமையாகவும் கேட்டவரை செவிடாகவும் மாற்றினார்.

முனிவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி மனம் வருந்தி பிராத்திக்க சிவன் காட்சிக் கொடுத்து இரு முனிவர்களும் வேடர் குலத்தில் பிறந்து வளர்ந்து வேட்டைக்கு செல்கையில் தான் உடும்பு வடிவில் காட்சிக் கொடுத்து சாப விமோசனம் அழிப்பதாக வாக்களித்தார். பார்வதி ஓடி வந்ததால் ஏற்பட்ட தாகத்தை உணர்ந்து சிவனிடம் நீர் கோர சிவன் மலையில் ஊற்றுக் குளம் ஒன்றை உருவாக்கினார். குளத்து நீரில் பார்வதி கைப்பட்டதும் குளத்து நீர் பச்சை வண்ணம் பெற்றது(பார்வதி நீர் அருந்தியதாக நம்பப்படும் பச்சைக் குளம் ஆலய வளாகத்தில் உள்ளது).

முனிவர்கள் வேடர் பிறந்து வளர்ந்தனர், ஒரு நாள் வேட்டையாட இம்மலைக்கு வருகையில் உடும்பு வடிவில் சிவனைக் கண்டு சாபத்திலிருந்து விடுபட்டனர்.

கோவில் அமைப்பு

சந்திரசூடேஸ்வரர் கோவில் மலை உச்சியில் மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோவில் செல்ல மலை அடிவாரத்தில் நெடுஞ்சாலையை ஒட்டி சாலையும் சற்று உள்ளே 200 படிகளைக் கொணட நடைபாதையும் உள்ளன. சாலை வழி ராஜ கோபுரத்தின் வலது பக்கத்திலும் நடை பாதை படிகள் ராஜ கோபுரத்தின் முன்னிலும் இணைகின்றன. கோவில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்னும் அமைப்பைக் கொண்டது.

விநாயகர் கோவில்

படிக்கட்டு பாதையின் தெற்கில் வடக்கு நோக்கி விநாயகர் கோவில் உள்ளது, சதுர வடிவ கருவறை, சதுரவடிவ பீடத்தின் மீது விநாயகர் சிற்பம் உள்ளது. எளிமையான கோவில், செங்கற்களாலான சுதைக் கட்டுமானம். அதிட்டானம், சுவர், பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி என்னும் பகுதிகளைக் கொண்டது.

சண்டிகேஸ்வரர் கோவில்

விநாயகர் கோவிலுக்கு மேலே படிக்கட்டு வழியில் சண்டிகேஸ்வரர் கோவில் தெற்கு நோக்கி உள்ளது. கருவறை முன்பு எட்டு தூண்கள் உள்ளன, உயரம் 180 செ.மீ. அகலம் 100 செ. மீ. கொண்டவை. கருவறை அதிட்டானம், சுவர், பிரஸ்தரம், விமானம் என்னும் அமைப்புக் கொண்டது. விமானத்தில் கர்ணக்கூடுகள், நந்திகள் உள்ளன. சண்டிகேஸ்வரர் நின்ற கோலத்தில் உள்ளார். கறுவறை முன் பாதம் மற்றும் பலிபீடம் உள்ளன.

நுழைவாயில் மண்டபம்

படிக்கட்டு பாதை நுழைவாயிலில் மண்டபம் உள்ளது, நான்கு வட்ட வடிவ தூண்களும் இரண்டு சதுர வடிவ தூண்களும் கொண்டது. இருபுறமும் சிறிய அறைகள் உள்ளன. கோயில் வரை 200 கருங்கல் படிகள், சில படிகளில் கல்வெட்டுகள் உள்ளன.

பச்சைக் குளம்

சந்திரசூடேஸ்வரர் மலையின் கீழே மேற்குப் பக்கம் சுற்றிலும் கருங்கல் கட்டுமானத்துடன் கூடிய குளம் உள்ளது. குளத்தின் நீர் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. குளத்தின் கிழக்கிலும் தெற்கிலும் இரண்டு மண்டபங்கள் உள்ளன. குளத்தின் தெற்கு கரையில் புற்று மற்றும் ஆஞ்சநேயர் , நாகதேவதை சிற்பங்கள் உள்ளன. குளத்தின் மேற்கில் காசி விஸ்வநாதர், கிழக்கில் நடராஜர் கோவில்கள் உள்ளன. குளத்தின் வடக்கில் உடை மாற்றும் அறை உள்ளது. குளத்தின் நடுவில் தூண்கள் கொண்ட மண்டபம் உள்ளது.

தெற்கு மண்டபம்: நான்கு தூண்கள் கொண்டது. 4 பட்டை, 8 பட்டை, 16 பட்டை கொண்ட தூண்கள்.

கிழக்கு மண்டபம்: ஆறு தூண்கள் கொண்டது, 4 பட்டை, 8 பட்டை, 16 பட்டை கொண்ட தூண்கள்.

நடுமண்டபம்: அதிட்டானம் நான்கு தூண்கள் கொண்டது, சுவர்ப் பகுதி எட்டு தூண்கள் கொண்டது, தூண்கள் வட்ட வடிவம். விமானம் சுதையால் ஆனது, வேசரப் பகுதி கொண்டது, நாரி முகம், நந்திம் கர்ணக்கூடுகள் உள்ளன, மகாபத்மத்தில் ஸ்தூபி உள்ளது, ஸ்தூபியில் வெண்கல கலசம் உள்ளது.

நடராஜர் கோவில்: கருங்கல் கட்டுமானம்; தூணில் முத்துமாலை சிற்பம் உள்ளது; மடப்பள்ளி, நவகிரகம், முருகன், மடப்பள்ளி உள்ளன.

ராஜ கோபுரம்

விஜயநகர மேரரசு காலத்தில் கட்டத் தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்ட ராஜகோபுரம் இடிக்கப்பட்டு, 112 அடி உயரத்தில் ஏழு நிலைகளுடன் புதிய ராஜகோபுரம் கட்டப்பட்டது. 2023-ஆம் ஆண்டு ஜூன் 28-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது,மேற்கு நோக்கி அமைந்தது, உச்சியில் கலசங்கள் உள்ளன.

தெற்கு கோபுரம்

தெற்கு கோபுரம் சாலை, பஞ்சரம், கூடு என்னும் உறுப்புகளால் ஆனது. இரண்டு வாயில்கள், ஐந்து நிலைகள் கொண்டது, அதிட்டானம் முதல் பிரஸ்த்தானம் வரை கருங்கல் கட்டுமானம். ஐந்து நிலைகளிலும் விநாயகர், முருகர், ஆலமர்செல்வர், சண்டிகேஸ்வரர், துவாரபாலிகை, அடியவர், யாளி ஆகிய சிற்பங்கள் உள்ளன. அதிட்டானம் உபபீடம், பத்மம், ஜகதி, விருத்தம், குமுதம், கண்டம், கபோதம், பட்டிகை என்னும் உறுப்புகள் கொண்டது. சுவர்ப்பகுதி வேலைபாடுகளுடைய எட்டு அரைத்தூண்கள் கொண்டது, சிற்பங்கள் இல்லை. பிரஸ்தாரம் வேதிகை, பட்டி, மகரதோரணம், கபோதம், உத்திரம் என்னும் உறுப்புகள் கொண்டது. சாலை என்னும் சிகரத்தின் மீது பத்மம், கண்ணாடிச் சட்டம், அலங்குகள், கட்டுமாலை உள்ளன. கோபுரத்தில் கலசங்கள் இல்லை.

வெளித் திருச்சுற்று
உள் திருச்சுற்று

தெற்கு:

மேற்கு:

வடக்கு:

திருச்சுற்று மாளிகை
மூலவர் கருவறை
அம்மன் கருவறை

சிற்பங்கள்

வழிபாடு

திருவிழாக்கள்

வரலாறு

கல்வெட்டுகள்

உசாத்துணை

இணைப்புகள்

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.