being created

ஒழுகினசேரி சோழராஜா கோவில்: Difference between revisions

From Tamil Wiki
(Added Tamil Category)
No edit summary
Line 1: Line 1:
நாகரிகோவில் நகர் ஒழுகினசேரியில் அமைந்துள்ள சிவன் கோவில். மூலவர் சோழீஸ்வரமுடையார் லிங்க வடிவில் உள்ளார். அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது.
நாகரிகோவில் நகரினுள் ஒழுகினசேரியில் அமைந்துள்ள சிவன் கோவில். மூலவர் சோழீஸ்வரமுடையார் லிங்க வடிவில் உள்ளார். அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது.


== இடம் ==
== இடம் ==
நாகர்கோவில் நகரின் கிழக்கே பழையாற்றை ஒட்டி உள்ள ஊர் உலகமுழுதுடையாள் சேரி என்ற ஒழுகினசேரி. திருவிதாங்கூர் அரசின் செப்பு பட்ட்யங்களில் உபமங்களனேரி என்று அழைக்கப்படுகிறது.


== மூலவர் ==
== மூலவர் ==
சோழராஜா கோவிலின் முலவர் சிவன் சோழீஸ்வரமுடையார் என்று பொதுவாக அழைக்கப்படுகிறார். மூலவர் இராஜேந்திர சோழீஸ்வரமுடைய நயினார், பெரிய நயினார், ராஜேந்திர சோழீஸ்வரர் போன்ற பெயர்களிலும் அறியப்படுகிறார். கல்வெட்டில் அரவுநீர் சடையான் என்று அழைக்கப்படுகிறார்.  மூலவர் ஆவுடையின் மேல் லிங்க வடிவில் உள்ளார்.  லிங்கம் கருவறையில் மூன்றடி உயரமுடையது. பூமிக்கு கீழ் 18 அடி உள்ளதாக நம்பபடுகிறது.  மூலவரின் துணை கோலவார் குழலாள் ஈஸ்வரி அல்லது குழலேஸ்வரி.


== கோவில் அமைப்பு ==
== கோவில் அமைப்பு ==
கோவில் கிழக்கு நோக்கி உள்ளது. கட்டுமானம் சோழர் பாணியை சார்ந்தது. சுற்று மதிலுடன் கூடைய ஆலய வழாகத்தில் கருவறை, அந்தராளம், அர்த்த மண்டபம், கைக்கொட்டி பாடும் மண்டபம், நந்தி மண்டபம், முகமண்டபம் மற்றும் பிராகாரங்கள் உள்ளன. கோவிலின் பெரும்பாலான மண்டபங்கள் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை.
கருவறையின் முன்பக்கமுள்ள அர்த்த மண்டபத்தில் இறைவனை நோக்கி நந்திசிலை அமைந்துள்ளது. கருவறையைச் சுற்றிக் உள்பிராகாரம் உள்ளது. அம்மன் சன்னதி மூலவரை நோக்கி இருக்கும்படி உள்ளது. வெளிபிராகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் கிழக்கு பார்த்து விநாயகர் சன்னதியும் மற்றும் திறந்த வெளியில் மரத்தின் அடியில் நாகர்களும் உள்ளன.  வடமேற்குப் பகுதியில் முருகன் சன்னதியும் உள்ளது.
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் சிறிய மாதிரி வடிவமென ஆலயம் அமைந்துள்ளது. பிரகதீஸ்வரர் கோவில் விமானத்தின் சாயலில் சிறிய அளவிலான  விமானமும், நான்கு பக்கக் கற்சுவர்களும், மேல்கூரையில் நான்கு மூலைகளிலும் நந்தியின் சிலைகளும் அமைந்துள்ளன.
கோவிலின் தலவிருட்சம் வில்வ மரம் மற்றும் கொன்றை மரம்.


== வரலாறு ==
== வரலாறு ==

Revision as of 00:56, 1 April 2022

நாகரிகோவில் நகரினுள் ஒழுகினசேரியில் அமைந்துள்ள சிவன் கோவில். மூலவர் சோழீஸ்வரமுடையார் லிங்க வடிவில் உள்ளார். அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது.

இடம்

நாகர்கோவில் நகரின் கிழக்கே பழையாற்றை ஒட்டி உள்ள ஊர் உலகமுழுதுடையாள் சேரி என்ற ஒழுகினசேரி. திருவிதாங்கூர் அரசின் செப்பு பட்ட்யங்களில் உபமங்களனேரி என்று அழைக்கப்படுகிறது.

மூலவர்

சோழராஜா கோவிலின் முலவர் சிவன் சோழீஸ்வரமுடையார் என்று பொதுவாக அழைக்கப்படுகிறார். மூலவர் இராஜேந்திர சோழீஸ்வரமுடைய நயினார், பெரிய நயினார், ராஜேந்திர சோழீஸ்வரர் போன்ற பெயர்களிலும் அறியப்படுகிறார். கல்வெட்டில் அரவுநீர் சடையான் என்று அழைக்கப்படுகிறார். மூலவர் ஆவுடையின் மேல் லிங்க வடிவில் உள்ளார். லிங்கம் கருவறையில் மூன்றடி உயரமுடையது. பூமிக்கு கீழ் 18 அடி உள்ளதாக நம்பபடுகிறது. மூலவரின் துணை கோலவார் குழலாள் ஈஸ்வரி அல்லது குழலேஸ்வரி.

கோவில் அமைப்பு

கோவில் கிழக்கு நோக்கி உள்ளது. கட்டுமானம் சோழர் பாணியை சார்ந்தது. சுற்று மதிலுடன் கூடைய ஆலய வழாகத்தில் கருவறை, அந்தராளம், அர்த்த மண்டபம், கைக்கொட்டி பாடும் மண்டபம், நந்தி மண்டபம், முகமண்டபம் மற்றும் பிராகாரங்கள் உள்ளன. கோவிலின் பெரும்பாலான மண்டபங்கள் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை.

கருவறையின் முன்பக்கமுள்ள அர்த்த மண்டபத்தில் இறைவனை நோக்கி நந்திசிலை அமைந்துள்ளது. கருவறையைச் சுற்றிக் உள்பிராகாரம் உள்ளது. அம்மன் சன்னதி மூலவரை நோக்கி இருக்கும்படி உள்ளது. வெளிபிராகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் கிழக்கு பார்த்து விநாயகர் சன்னதியும் மற்றும் திறந்த வெளியில் மரத்தின் அடியில் நாகர்களும் உள்ளன. வடமேற்குப் பகுதியில் முருகன் சன்னதியும் உள்ளது.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் சிறிய மாதிரி வடிவமென ஆலயம் அமைந்துள்ளது. பிரகதீஸ்வரர் கோவில் விமானத்தின் சாயலில் சிறிய அளவிலான  விமானமும், நான்கு பக்கக் கற்சுவர்களும், மேல்கூரையில் நான்கு மூலைகளிலும் நந்தியின் சிலைகளும் அமைந்துள்ளன.

கோவிலின் தலவிருட்சம் வில்வ மரம் மற்றும் கொன்றை மரம்.

வரலாறு

உசாத்துணை

  • தென்குமரி கோவில்கள், முனைவர் அ.கா. பெருமாள், சுதர்சன் புக்ஸ், இரண்டாம் பதிப்பு 2018.
  • புகைபடங்கள் நன்றி - ராஜி http://rajiyinkanavugal.blogspot.com/2020/06/blog-post_26.html



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.