ஐ. கிருத்திகா

From Tamil Wiki
Revision as of 21:35, 24 December 2022 by Ramya (talk | contribs) (Created page with "ஐ. கிருத்திகா (பிறப்பு: நவம்பர் 8, 1976) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். == வாழ்க்கைக் குறிப்பு == ஐ. கிருத்திகா திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டை கிராமத்தில் சோ.பாலு, பா.துர்க்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஐ. கிருத்திகா (பிறப்பு: நவம்பர் 8, 1976) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஐ. கிருத்திகா திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டை கிராமத்தில் சோ.பாலு, பா.துர்க்கா இணையருக்கு நவம்பர் 8, 1976-ல் பிறந்தார். குளிக்கரை மற்றும் மணக்காலில் ஆரம்பக்கல்வி பயின்றார். திருவாரூர் அரங்கநாத முதலியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்புவரை பயின்றார். நாகை ஏ.டி.ஜெ. தர்மாம்பாள் பெண்கள் பாலிடெக்னிக்கில் பட்டயக்கல்வி பயின்றார்.

தனிவாழ்க்கை

ஐ. கிருத்திகா சீர்காழியைச் சேர்ந்த சோ. ஐயப்பவாசனை மார்ச் 15, 2000-ல் மணந்தார். மகள் மானஸா, மகன் ஸ்ரீமன். கோவையில் வசிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

ஐ. கிருத்திகா 1998 முதல் பல்வேறு வணிக, சிற்றிதழ்களில் சிறுகதைகள் எழுதிவருகிறார். அனிச்சமலர் முதல் சிறுகதை. முதல் நூல் ’உப்புச்சுமை’ சிறுகதைத்தொகுப்பு.

விருதுகள்

  • கோவை ஞானி நடத்திய பெண் எழுத்தாளர்கள் சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்றார்.
  • இலக்கியப்பீடம் சிறுகதைப்போட்டி (இரண்டாம் பரிசு)
  • க.சீ. சிவக்குமார் நினைவுச்சிறுகதைப்போட்டி (முதல் பரிசு)
  • டி.வி.ஆர் நினைவுச்சிறுகதைப்போட்டி (இரண்டாம் பரிசு)
  • காக்கை சிறகினிலே இதழ் நடத்திய குறுநாவல் போட்டி (தேர்வுக்குறுநாவல்)
  • பொதிகைச்சாரல் இதழ் நடத்திய சிறுகதைப்போட்டி (முதல் பரிசு)

நூல்கள்

  • உப்புச்சுமை (தேநீர் பதிப்பகம்) (2020)
  • நாய்சார் (zero degree publishing) (2021)
  • திமிரி (எதிர் வெளியீடு) (2021)
  • கற்றாழை (காலச்சுவடு)

இணைப்புகள்