ஐயம்பெருமாள் கோனார்

From Tamil Wiki
Revision as of 12:41, 22 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|ஐயம்பெருமாள் கோனார் ஐயம்பெருமாள் கோனார் ( ) அய்யன்பெருமாள் கோனார். தமிழில் புகழ்பெற்ற பாடப்புத்தகக் கையேடுகளை எழுதியவர். திருச்சி செயின்ட் ஜோசப் ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஐயம்பெருமாள் கோனார்

ஐயம்பெருமாள் கோனார் ( ) அய்யன்பெருமாள் கோனார். தமிழில் புகழ்பெற்ற பாடப்புத்தகக் கையேடுகளை எழுதியவர். திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளி தமிழாசிரியராக இருந்தார்.

பிறப்பு, கல்வி

திருச்சிராப்பள்ளி திருவேங்கடக்கோனாருக்கு பிறந்த ஐயம்பெருமாள் கோனார் இளமையிலேயே அன்னையே இழந்து பெரியஅன்னையின் ஆதரவில் திருச்சிராப்பள்ளி சின்னக் கடைத் தெருவில் வளர்ந்தார். திருச்சிராப்பள்ளி ஆரியன் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்து படித்தார். தேசிய உயர்நிலைப்பள்ளியில் பள்ளிநிறைவை முடித்து 1933 ல் மதுரை நான்காம் தமிழ் சங்கம் நடத்திய புலவர்தேர்வில் வென்றார்..