ஏ.எஸ்.ராகவன்

From Tamil Wiki
Revision as of 10:12, 24 March 2022 by Jeyamohan (talk | contribs)

ஏ.எஸ்.ராகவன் (1928) தமிழ் எழுத்தாளர். தமிழ் பொதுவாசிப்புக்குரிய இதழ்களில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதினார்

பிறப்பு கல்வி

ஏ.எஸ்.ராகவன் 1928ல் கரூரில் பிறந்தார். பள்ளியிறுதிவரை கரூரில் கல்விகற்றார்

தனிவாழ்க்கை

ஏ.எஸ்.ராகவன் தென்னக ரயில்வேயில் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

ஏ.எஸ்.ராகவன் தன் 22 வயதில் சலீமா பேகம் என்னும் கதையை எழுதி அது ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தது. தொடர்ந்து தமிழ் வார இதழ்களில் கதைகளை எழுதினார். ஆனந்தவிகடன் வெள்ளிவிழா போட்டியில் மனிதன் என்னும் நாவல் பரிசு பெற்றது. அதே ஆண்டில் சிறுகதை, நாடகம் இரண்டுக்கும் ஆனந்த விகடன் அளித்த பரிசைப் பெற்றார்.

அமைப்புச்செயல்பாடு

திரிலோக சீதாராம்மின் நெருக்கமான மாணவர். திரிலோகசீதாராம், மீ.ப.சோமு, சுகி சிவம், கிருஷ்ணசாமி ரெட்டியார் ஆகியோருடன் இணைந்து திருச்சி எழுத்தாளர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.

நூல்கள்

நாவல்கள்
  • மனிதன்
  • மலர்ந்த மனம்
  • உயிர்நோன்பு
  • தீர்த்தக்கடையினிலே
  • சுயம்வரம்

விருதுகள்

  • இலக்கியசிந்தனை பரிசு - பின்னணி சிறுகதைக்காக (தேர்வு அ.சீனிவாசராகவன்)
  • ஆனந்த விகடன் நாவல்போட்டி விருது -மனிதன்
  • கலைமகள் நாவல் போட்டி பரிசு